இது, புகழ்பெற்ற டிஜிட்டல் தளங்கள் மூலம் சம்பாதிக்கும் சுயாதீனத் தொழில்வாண்மையினர் மற்றும் இணையவழி தொழில்முனைவோருக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான சேமிப்புத் திட்டமாகும். இத்திட்டமானது நெகிழ்வுத்தன்மை, வசதி மற்றும் சந்தையில் அதிகமான வட்டி வருமானம் என்பவற்றை உறுதிசெய்யும் வகையில் சுயாதீனத் தொழில்வாண்மையினரதும் இணையத்தில் பணிபுரியும் தொழில்முனைவோரினதும் தனித்துவமான நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான விரிவான வங்கித் தீர்வை வழங்குகிறது.


இத்திட்டத்தின்கீழ் வங்கி மூன்று (03) தயாரிப்பு வகைகளை வழங்குகிறது –

  • Smart Freelancer
  • Smart Freelancer PFC (தனிப்பட்ட வெளிநாட்டு நாணயம்)  
  • Smart Freelancer BFC (வணிக வெளிநாட்டு நாணயம்)
அம்சங்கள்
  • இலங்கை ரூபாயிலும் வேறு 07 வெளி நாட்டு நாணயங்களிலும் கிடைக்கும்
       • ஐக்கிய அமெரிக்க டொலர்
       • ஸ்ரேலிங் பவுண்
       • யூரோ
       • ஜப்பானிய யென்
       • கனடா டொலர்
       • அவுஸ்ரேலிய டொலர்
       • சிங்கப்பூர் டொலர்
  • ஸ்மார்ட் ஃப்ரீலான்சர் PFC/BFC கணக்குகளிலிருந்து இலங்கை ரூபாய் பரிமாற்றங்களுக்கான சிறப்பு மாற்று விகிதங்கள் 
  • வைப்புகளுக்கு அதிக வட்டி விகிதங்கள் 
       • ஸ்மார்ட் ஃப்ரீலான்ஸர் (LKR) : சாதாரண சேமிப்பு விகிதம் + 1%
       • ஸ்மார்ட் ஃப்ரீலான்சர் PFC/ BFC : PFC/BFC சாதாரண வட்டி விகிதம் + அந்தந்த விகிதத்தில் 10%
  • கணக்குதாரரின் பெயரில் வழங்கப்படும் கடன் அட்டைகளுக்கு (முதன்மை அட்டைதாரர்களுக்கு) இணைவுக் கட்டணம் 100% தள்ளுபடி
  • ‘VISA Direct’ வசதி மூலம் கணக்கிற்கு விரைவான நிதிப் பரிமாற்றங்கள்
  • அவ்வப்போது PROMO குறியீடுகள் மூலம் சிறப்புத் தள்ளுபடிகள் (உதா. மடிக்கணினிகள், புகைப்படக் கருவிகள், மென்பொருள் கருவிகள் வாங்க)
       • இணைய வங்கி வசதி 
       • ஸ்மார்ட் பாஸ்புக், குறுஞ்செய்திகள் மற்றும் வட்ஸ்அப் செயலி மூலம் கணக்கு விசாரணை
       • இலத்தினியற் கணக்குக் கூற்றுகள்
       • விசா பற்றட்டை
       • ஆரம்ப வைப்பு - 
       • ஸ்மார்ட் ஃப்ரீலான்சர் (LKR) : ரூ. 2,500/- 
       • ஸ்மார்ட் ஃப்ரீலான்சர் PFC/ BFC: ஆரம்ப வைப்பு தேவையில்லை
     


*இந்த அம்சங்கள் மற்றும் தகுதி அளவுகோல்களை வங்கி அவ்வப்போது திருத்தலாம்.
* நிபந்தனைகளுக்குட்பட்டது

தகுதி

18 வயதுக்கு மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட ஒன்லைன் தளங்களில் சுயாதீன தொழில்களில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும்/அல்லது வங்கியால் ஏற்றுக்கொள்ளக்கூடிய இணையவழியிலான தொழில்முயற்சிகளில் (உதா: Fiverr, Freelancer.com, Upwork, YouTube மற்றும் இதுபோன்ற புகழ்பெற்ற தளங்கள்) ஈடுபடும் நபர்கள். 

தகுதியான தயாரிப்புகள்

கணக்கின் நாணயம்

தயாரிப்பின் வகை

தகுதி அளவுகோல்

உள்நாட்டு நாணயம் (LKR) 

‘Smart Freelancer’

இலங்கையில் வசிக்கும் இலங்கையர்கள் 


 

வெளி நாட்டு நாணயம் (FCY) 

‘Smart Freelancer PFC’

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள்

‘Smart Freelancer BFC’இலங்கைக்கு வெளியே உள்ள இலங்கையில் வதியாத தரப்பினரிடமிருந்து வெளிநாட்டு நாணயத்தைச் சம்பாதிக்கும் இலங்கையில் வசிக்கும் இலங்கையர்கள்



 

ஆவணங்கள்
  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட கணக்கு திறப்பு விண்ணப்பத்துடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள்.
    இலங்கையில் வதிவுரிமைகொண்டவர்களுக்கு -
    - தேசிய அடையாள அட்டை (NIC)/ செல்லுபடியாகும் கடவுச்சீட்டின் நகல்
    - குடியுரிமை முகவரி NIC இலிருந்து வேறுபட்டால் முகவரியை நிரூபிக்கும் ஆவணங்கள்
    இலங்கையில் வதிவுரிமை இல்லாதவர்களுக்கு
    - விண்ணப்பதாரரின் கடவுச்சீட்டின் முகப்புப் பக்கத்தின் நகல் 
    - செல்லுபடியாகும் விசாவின் நகல் அல்லது வெளிநாட்டு வேலைக்கான ஆவண ஆதாரம்
  • சுய பிரகடன படிவங்கள் (வங்கிப் படிவங்கள்)
  • இணையவழி அடிப்படையிலான வேலை மற்றும் நிதி மூலத்தை நிரூபிக்கும் ஆவணம்/தகவல் (உதா. ஒப்பந்தத்தின் நகல், மின்னஞ்சல் உறுதிப்படுத்தல்கள், வருவாய் பற்றுச்சீட்டுகள், பணம் அனுப்பிய வங்கி கூற்றுகள், இணைய தளத்தில்/தளங்களில் உள்ள விண்ணப்பதாரரின் சுயவிவர விவரங்கள்.
விதிகள் மற்றும் நிபந்தனைகள்
  • தயாரிப்புக்காக வழங்கப்படும் எந்தவொரு நிபந்தனை(கள்) மற்றும்/அல்லது வசதி/பயன்கள்/அம்சங்களை மாற்ற, சேர்க்க, நீக்க அல்லது திருத்துவதற்கான உரிமையை இலங்கை வங்கி கொண்டுள்ளது. அத்தகைய திருத்தங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
  • வேலை/இணைய தளங்கள்/தொழில்முனைவோர் செயற்பாடுகளின் தன்மை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருத்தல் வேண்டும்.
  • இணைய தளங்களில் பணியை நிறுத்தும்போது, ​​கணக்கு வைத்திருப்பவர் முடிந்தவரை விரைவாக வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும்.
  • கணக்கிற்கு அனுப்பப்படும் அனைத்து அந்நியச் செலாவணி வருமானமும் இலங்கைக்கு வெளியே முறையான வழிமுறைகள் மூலம் முழுமையாகப் பெறப்பட வேண்டும்.
     

மேலதிகத் தகவல்கள் மற்றும் அண்மைய அம்சங்கள்/நிபந்தனைகளுக்கு 1975ஐ அழைக்கவும் அல்லது அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளையைப் நாடவும்.

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444