கொவிட் – 19 இடர் நிவாரண வசதி (COVID – 19 CRF)

கூட்டாண்மை நிறுவனங்களுக்கும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்குமான தொழிற்படு மூலதனக் கடன் திட்டம்

நோக்கம்

  • கொவிட் – 19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களின் நிரந்தர தெழிற்படு மூலதனத் தேவைப்பாடுகளுக்கு நிதியளித்தல்

தகைமை

  • கூட்டாண்மை நிறுவனங்கள் – 750.0 மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட ஆண்டு வருமானம்
  • சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் - 750.0 மில்லியன் ரூபாய்க்கு குறைவான ஆண்டு வருமானம் அல்லது உற்பத்தித் துறையில் 300 பேருக்கும் சேவைத் துறையில் 200 பேருக்கும் குறைவான ஊழியர்கள்
  • பதிவுசெய்யப்பட்ட வியாபார நிறுவனமாக இருத்தல் வேண்டும்
  • இத்திட்டத்தின்கீழ் ஒரு நிறுவனம் ஒரு கடனை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்

தகுதியான துறைகள்

  • விவசாயம் மற்றும் மீன்பிடி
  • உற்பத்தி
  • மின்சாரம், நீராவி, வளிச் சீராக்கிகள்
  • நீர் வழங்கல் (வடிகாலமைப்பு, கழிவுநீர் அமைப்பு, புனரமைப்பு)
  • கட்டுமானம்
  • மொத்த மற்றும் சில்லறை வியாபாரம்
  • போக்குவரத்தும் களஞ்சியமும்
  • இடவசதி
  • தகவல், தொடர்பாடல்
  • தொழில்முறை, விஞ்ஞானபூர்வ, தொழினுட்ப நடவடிக்கைகள்
  • நிர்வாக, துணைச்சேவைச் செயற்பாடுகள்
  • கல்வி
  • மனித சுகாதார மற்றும் சமூக சேவைச் செயற்பாடுகள்

ஆகக்கூடிய கடன் தொகை

  • 100.0 மில்லியன் ரூபாய்

 


கொவிட் – 19 இடர் நிவாரண வசதி ESMS கொள்கை  »

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444