BOC  ஸ்மார்ட் சலறி சேவர் கணக்கு என்பது சம்பளம் பெறும் நபர்கள் தங்கள் வருமானத்தை புதிய வங்கி வசதிகளின் துணையுடன் திறம்பட  முகாமைசெய்வதற்கென சிறப்பாக உருவாக்கப்பட்ட கணக்காகும். இக்கணக்கை வைத்திருப்பவர்கள் தமது அவசரப் பணத் தேவைகளைகளின் பொருட்டு தமது சம்பளத்துக்கு அமைவான முற்பணம் ஒன்றை உடனடியாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதியும் கணக்கிலிருக்கும் மேலதிகப் பணத்திற்கான வட்டியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதியும் இக்கணக்கில் காணப்படுகின்றன.

நீங்கள் 18 முதல் 55 வயதுக்கு இடைப்பட்டிருந்து, உங்கள் தேறிய மாதாந்தச் சம்பளம் 25,000 ரூபாய்க்கு மேற்பட்டிருப்பின் BOC Smart Salary Saver கணக்கை நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு இலங்கை வங்கிக் கிளையிலும் ஆரம்பிக்க முடியும்.  

BOC ஸ்மார்ட் சலறி சேவர் கணக்கின் நன்மைகள்

  • மேலதிகப் பணத்தை நாளாந்தம் முதலீடு செய்யும் வசதி
  • முதலீடு செய்யப்பட்ட பணத்தை நாளாந்தக் கொடுப்பனவுகளுக்காக எளிதில் பயன்படுத்தக்கூடிய வசதி 
  • உடனடிச் சம்பள முற்பணம்
  • இ-வணிக வசதி செயற்படுத்தப்பட்ட டெபிட் அட்டை
  • டிஜிட்டல் வங்கிச் சேவைகள்
     
கணக்கு ஆரம்பிப்பதற்கான தகுதிகள்
  • அரச, அரச சார்பு மற்றும் தனியார் ஆகிய துறைகளில் ஏதாவது ஒன்றில் நிரந்தர ஊழியராக இருத்தல் வேண்டும். 
  • ஊழியர் சேமலாப நிதி அல்லது ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்
  • ஒரு தகுதி வாய்ந்த தொழில்வாண்மையினராக இருத்தல் 
     
ஸ்மார்ட் சலறி சேவர் கணக்கின் நன்மைகள்
  • மேலதிகப் பணத்தை நாளாந்தம் முதலீடு செய்யும் வசதி
    BOC ஸ்மார்ட் சலறி சேவர் கணக்கில் ரூ.10,000/- மீதியை வைத்துக்கொண்டு மேலதிகப் பணம் விசேட நிதி முகாமைத்துவக் கணக்கில் நாளாந்தம் வட்டியுடன் முதலீடு செய்யப்படும்.  
  • முதலீடு செய்யப்பட்ட பணத்தை நாளாந்தக் கொடுப்பனவுகளுக்காக எளிதில் பயன்படுத்தக்கூடிய வசதி
    கணக்கு வைத்திருப்பவர்/கள் BOC Smart Salary Saver கணக்கிலிருந்து பணத்தை மீளப்பெறும்போது / ஏதேனும் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது, பணப் பற்றாக்குறை ஏற்பட்டால், இந்தக் கணக்கில் இருக்கும் மீதி வரையிலான தொகை நிதி முகாமைத்துவக் கணக்கிலிருந்து தானாகவே வழங்கப்படும்.
  • உடனடி சம்பள முற்பணம்
    BOC Smart Salary Saver கணக்கு வைத்திருக்கும் தகுதியான வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தேறிய  சம்பளத்தில் 90% வரை சம்பள முற்பணமாக வழங்கப்படும். இந்த வசதியை அனுபவிக்க உங்கள் சம்பளம் 3 மாதங்களுக்கும் மேலாக BOC Smart Salary Saver கணக்கில் வரவு வைக்கப்பட்டிருத்தல்  வேண்டும்.
  • இ-வணிக வசதி செயற்படுத்தப்பட்ட டெபிட் அட்டை
  • ஸ்மார்ட் இணைய வங்கி, B-App, SmartPay உள்ளிட்ட பல டிஜிட்டல் வங்கிச் சேவைகள்
  • கணக்கு விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் ஸ்மார்ட் பாஸ்புக், இ-அறிக்கைகள் மற்றும் SMS  செய்திகள் (SMS  செய்திகளுக்கு கைப்பேசி இலக்கமும் இ-அறிக்கைகளுக்கு மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்படவேண்டும்)

ஏனைய நன்மைகள் 
 

  • ஆரம்ப வைப்புத் தொகையாக வெறுமனே 2000 ரூபாயைச் செலுத்தி கணக்கை திறக்கலாம்.  
  • மாதாந்த சேவைக் கட்டணங்கள் இல்லை
  •  கணக்குகளில் குறைந்தபட்ச மீதி இருக்கத் தேவை இல்லை

விதிகளும் நிபந்தனைகளும்

1.    உங்களது மாதாந்தச்  சம்பளத்தை /  வருமானத்தை BOC ஸ்மார்ட் சலறி சேவர் கணக்கில் தொடர்ச்சியாக வரவுவைக்க வேண்டும்
2.    வங்கி விதித்துள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமையவே வசதிகள் வழங்கப்படும் 
3.    இந்தக் கணக்கிற்கு வழங்கப்படும் எந்தவொரு வசதியையும் நிபந்தனையையும் மாற்றும், திருத்தும் அல்லது புதியனவற்றைச்             சேர்க்கும் உரிமை இலங்கை வங்கிக்கு உண்டு. 
4.    அண்மைய தகவல்கள், நடைமுறையிலுள்ளள விதிகள் மற்றும் நிபந்தனைகள் என்பவற்றை அறிந்துகொள்ள உங்கள் அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளையை நாடவும் அல்லது 1975 ஊடாக எமது அழைப்பு நிலையத்தைத் தொடர்புகொள்ளவும். 
 

ஆவணங்கள்

ஸ்மார்ட் சலறி சேவர் கணக்கைத் தொடங்கத் தேவையான ஆவணங்கள்


தகுதி வாய்ந்த தொழில் நிபுணர் வழங்கவேண்டிய ஆவணங்கள்

  • தொழில்முறை நிறுவனத்தால் வழங்கப்பட்ட கடிதம் / உறுப்பினர் அட்டை
  • வருமான வழி மற்றும் சராசரி மாத வருமானத்தை நிரூபிக்கும் ஆவணங்கள்

சம்பள முற்கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்கான  ஆவணங்கள்

  • சம்பள முற்பண விண்ணப்பம் (வங்கிப் படிவம்)
  • சம்பள முற்பண ஒப்பந்தம் (வங்கிப் படிவம்)


நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
 

Terms & Conditions

BOC Smart Salary Saver கணக்குத் தொடர்பான விதிகள் மற்றும் நிபந்தனைகள் 

  1. வங்கியால் நிர்ணயிக்கப்படும் தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்தால், BOC Smart Salary Saver கணக்கைத் தனிநபர் கணக்காகவோ அல்லது கூட்டுக்கணக்காகவோ தொடங்கலாம்.
  2. ஆரம்ப வைப்புத்தொகை, வட்டி விகிதம், சேவைக் கட்டணங்கள் மற்றும் பிற விதிகள் ஆகியவை வங்கியின் நடைமுறையிலுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப  அமையும் என்பதோடு அவை காலத்திற்குக் காலம் மாறக்கூடும். அவ்வாறான மாற்றங்கள் www.boc.lk என்ற வங்கியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
  3. கணக்கின் சிறப்புச் சலுகைகளை (உதா: சம்பள முற்பணம், நிதி முதலீடுகள்) பெறுவதற்கு, கணக்குரிமையாளர் / கணக்குரிமையாளர்கள் தொடர்ச்சியான சம்பள வரவு / குறிப்பிட்ட தொகையிலான வைப்பு, வயது வரம்பு, வைப்புத் தவணை தவறாத பதிவுகள் போன்ற வங்கியால் காலத்திற்குக் காலம் நிர்ணயிக்கப்படும் அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  4. BOC Smart Salary Saver கணக்குடன் தொடர்புடைய சலுகைகள், சிறப்புரிமைகள் மற்றும் வசதிகளை அல்லது அவற்றை வழங்குவதற்கான தகுதி அளவுகோல்களைத் திருத்துவதற்கு, இரத்துச் செய்வதற்கு அல்லது நிறுத்துவதற்கு வங்கிக்கு உரிமை உண்டு. இவை வங்கியின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும் என்பதோடு இத்திட்டத்தின்கீழ் புதிதாகத் தொடங்கப்படும் கணக்குகளுக்கு இத்திருத்தங்கள் பொருந்தும்.
  5. BOC Smart Salary Saver கணக்கில் உள்ள மீதிக்கு வட்டி வழங்கப்படமாட்டாது.
  6. இக்கணக்கிற்குக் காசோலைப் புத்தகங்கள் வழங்கப்படமாட்டா.
  7. கணக்குரிமையாளர் / கணக்குரிமையாளர்கள் மாதாந்த சம்பளம்/வருமானத்தை இக்கணக்கிற்கு அனுப்பும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
  8. BOC BOC Smart Salary Saver கணக்கிற்கு மாதாந்த சம்பளங்கள்/வருமானங்களை தொடர்ந்து அனுப்புவது கட்டாயமாகும்.
  9. கணக்குரிமையாளர் / கணக்குரிமையாளர்கள் BOC Smart Salary Saver கணக்கிற்கு மாதாந்த சம்பளம்/வருமானத்தை தொடர்ந்து அனுப்பத் தவறினால், வங்கியானது BOC Smart Salary Saver கணக்கையும் கணக்குடன் தொடர்புடைய சிறப்பு அம்சங்கள்/சலுகைகளையும் நிறுத்தக் கூடும்.
  10. மாதாந்திர இலத்திரனியல் அறிக்கைகள் வங்கிக்கு வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். தேவைப்பட்டால் அச்சிடப்பட்ட அறிக்கைகளை வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். வங்கியிடமிருந்து கோரப்படும் அச்சிடப்பட்ட அறிக்கைகளின் கூடுதல் நகல்களுக்கு உள்நாட்டுக் கட்டண விகிதங்கள் பொருந்தும்.
  11. கணக்குரிமையாளர் மரணமடைந்தால், கணக்கில் உள்ள தொகையானது இலங்கைச் சட்டங்களின்படி கணக்குரிமையாளரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வழங்கப்படும். கூட்டுக் கணக்கு என்றால் உயிரோடு உள்ள கணக்குரிமையாளருக்கு கணக்கில் உள்ள தொகை வழங்கப்படும்.

 

நிதி முகாமைத்துவக் கணக்கு (Fund Management Account) தொடர்பான விதிமுறைகள்

  1. நிதி முகாமைத்துவக் கணக்கானது BOC Smart Salary Saver கணக்குரிமையாளர்களுக்கு மட்டுமே தொடங்கப்படும் என்பதோடு இது BOC Smart Salary Saver கணக்கில் உள்ள மேலதிக நிதிகளை முதலீடு செய்வதற்காக மட்டுமே செயற்படுத்தப்படும். நேரடி வைப்புகள், பணம் எடுத்தல் அல்லது நிலையியற் கட்டளை அறிவுறுத்தல்கள் போன்ற வாடிக்கையாளரால் தொடங்கப்படும் பரிவர்த்தனைகள் இக்கணக்கின்கீழ் அனுமதிக்கப்படமாட்டா.
  2. வட்டி விகிதமானது வங்கியின் நடைமுறையிலுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப  அமையும் என்பதோடு அவை காலத்திற்குக் காலம் மாறக்கூடும். அவ்வாறான மாற்றங்கள் www.boc.lk என்ற வங்கியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
  3. நிதி முகாமைத்துவக் கணக்தின் உரிமை (தனிநபர்/கூட்டு) BOC Smart Salary Saver கணக்கைப் போலவே இருக்கும்.
  4. இக்கணக்கிற்கு கடன் அட்டைகள்/கணக்குப் புத்தகங்கள் வழங்கப்படமாட்டா. கணக்கு விவரங்கள் மற்றும் பரிவர்த்தனைகளை இலத்திரனியல் அறிக்கைகள் மற்றும் வங்கியின் பிற டிஜிட்டல் தளங்களின் வாயிலாகப் பார்க்கலாம்.
  5. BOC Smart Salary Saver கணக்கில் போதுமான தொகை இல்லாவிடின் அக்குறைபாட்டை நிவர்த்தி செய்ய நிதி முகாமைத்துவக் கணக்கில் உள்ள மீதி தானாகவே BOC Smart Salary Saver கணக்கிற்கு மாற்றப்படும்.
  6. கணக்குரிமையாளர் மரணமடைந்தால், கணக்கில் உள்ள தொகையானது இலங்கைச் சட்டங்களின்படி கணக்குரிமையாளரால் நியமிக்கப்படுபவருக்கு / கணக்குரிமையாளரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வழங்கப்படும். கூட்டுக் கணக்கு என்றால் உயிரோடு உள்ள கணக்குரிமையாளருக்கு கணக்கில் உள்ள தொகை வழங்கப்படும்.

கணக்குத் தொடங்குவதற்கு முன்னர் கணக்குத் தொடர்பான அண்மைத் தகவல்கள் மற்றும் விதிகள் மற்றும் நிபந்தனைகளை அறிந்துகொள்வதற்கு உங்கள் அருகில் உள்ள  இலங்கை வங்கிக் கிளையை நாடவும் அல்லது 1975 என்ற எண்ணின் ஊடாக எமது எங்களது அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444