- இலங்கை வங்கி அறிமுகப்படுத்திய வீட்டுக் கடன் திட்டம் குறித்து அஜித் கருணாரத்ன
இலங்கை தொடர்ச்சியாக எதிர்கொண்டு வரும் நிதிச் சவால்களுக்கிடையில், சொந்த வீடு என்பது பலருக்குமான நிலைத்த வாழ்வின் அடையாளமாகத் திகழ்கிறது. இது பெரும்பாலானவர்களின் வாழ்க்கை இலக்குகளில் முக்கியமானதாக இருந்தாலும், அந்தக் கனவை நனவாக்கும் பயணம் எளிதானதல்ல. வீட்டு கடன் பெறுவதற்கான முயற்சியில் ஆவணத் தாமதங்கள், நீண்ட ஒப்புதல் நடைமுறைகள், மற்றும் வட்டி விகிதங்களைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற சூழ்நிலைகள் போன்ற பலவிதமான தடைகள் மக்களைப் பின்னோக்கி தள்ளிக்கொண்டு செல்கின்றன.
இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இலங்கை வங்கி தனது 85ஆவது ஆண்டில், 2024ஆம் ஆண்டு, ஒரு மாற்றத்தை உருவாக்கும் தீர்வை அறிமுகப்படுத்தியது. 14 வேலை நாட்களில் வீட்டு கடன் வழங்கும் சேவைதான் அது. கடன் பெறும் செயல்முறையை விரைவாகவும் எளிமையாகவும் மாற்றி, அது பல்வேறு வரம்பிலுள்ள விருப்பக்கடன் பெறுநர்களுக்கும் எளிதாக அணுகக்கூடியதாக இருக்கவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
ஒரு வருடத்திற்குப் பின்னர் இந்த சேவையின் முன்னேற்றம் எவ்வாறுள்ளது? வங்கி இதனை எந்த வகையில் விருத்தி செய்துள்ளது? மேலும், ஏன் இந்த முயற்சி அதன் பொது சேவைக்கட்டமைப்பில் ஒரு முக்கியமான நிலையைக் வகிக்கிறது? இதற்கான விளக்கங்களை அறிய, இலங்கை வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (கிளைக் கடன் செயற்பாடுகள் – வரம்பு I) திரு. அஜித் கருணாரத்ன அவர்களை நாங்கள் நேரில் சந்தித்தோம்.
கடந்த ஆண்டு, இலங்கை வங்கி தனது 85வது ஆண்டு நிறைவைக் குறிப்பாக, 14 வேலைநாளுக்குள்வீட்டுகடன் வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தியது. அந்த அறிவிப்பின்பின்னர், இந்த முயற்சி எவ்வாறு முன்னேறியுள்ளதுஎன்பதைப்பற்றிவிளக்கமளிக்கமுடியுமா?
வீட்டுக் கடனைப் பெற விரும்பும் அனைவருக்கும் விரைவானதும் செயல்திறனானதும், மேலும் நம்பிக்கையுடன் அனுபவிக்கக்கூடிய ஒரு சேவையை வழங்கும் நோக்கில், 14 வேலை நாட்களில் வீட்டு கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டில் வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த பதில்கள் மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்துள்ளன. நீண்ட காத்திருப்பு காலங்கள் மற்றும் செயல்முறை குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக, வீட்டுக்கடன் திட்டங்களை முன்னெடுக்க தயக்கம் கொண்டிருந்த பலர், இச்சேவையின் மூலம் மீண்டும் நம்பிக்கையை பெற்றுள்ளனர் என்றும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இலங்கை வங்கியின் 85வது ஆண்டு நினைவாக, ஓர் அர்த்தமுள்ள மற்றும் நீடித்த சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியொன்றை மேற்கொள்ள விரும்பினோம். வீட்டு உரிமை என்பது இலங்கையர்களின் வாழ்க்கையில் உணர்வுபூர்வமாகவும் பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சேவையின் மூலம், மக்கள் தேவைகளை உணர்ந்து அதற்குத் தீர்வுகள் வழங்கும் ஒரு தேசிய வங்கியாக, இலங்கை வங்கியின் பங்கு மேலும் வலியுறுத்தப்படுகிறது.
சந்தையில் உள்ள மற்ற வீட்டு கடன் செயல்முறைகளுடன்ஒப்பிடும்போது, இந்த திட்டத்தை வேறுபடுத்துவதுஎது என்பதைப் பற்றி விளக்க முடியுமா?
சந்தையில் உள்ள மற்ற வீட்டு கடன் செயல்முறைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த சேவையின் முக்கியமான வித்தியாசம் அதன் தெளிவான கட்டமைப்பிலும், குறுகிய நேரத்திற்குள் கடன் வழங்கும் உறுதியிலும் இருக்கிறது. வாடிக்கையாளர் தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து, விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்தவுடன், கடன் மதிப்பீடு, சட்டச் சரிபார்ப்பு மற்றும் சொத்து மதிப்பீடு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் 14 வேலை நாட்களுக்குள் முடிவடையும் என இலங்கை வங்கி உறுதி அளிக்கிறது.
இந்த நிர்வாக திறனை வலுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் 16 பிரத்யேக பிராந்திய கடன் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை வீட்டுக் கடன்களுக்கே சிறப்பு கவனம் செலுத்தும் அதிகாரிகளை கொண்டுள்ளன. மேலும், ஒவ்வொரு மையத்துடனும் இணைந்து கடமையாற்ற சட்ட ஆலோசகர்கள் மற்றும் சொத்து மதிப்பீட்டாளர்கள் உள்ளதால், வாடிக்கையாளர்கள் பல இடங்களில் சென்று பணிகளை முடிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் இருக்கிறது. அனைத்தும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் முடிகிறது. இதுவே செயல்முறையில் தாமதங்களை குறைத்து, வீட்டு கடன் அனுமதியை மிகச் சீரான மற்றும் விரைவான அனுபவமாக மாற்றுகிறது.
14 வேலை நாட்களுக்குள் கடன் வழங்கும் செயற்பாடு இன்னும் நிறைவேற்றக்கூடிய வகையில் உள்ளதா?
ஆம், ஆனால் அது விண்ணப்பம் முழுமையாகவும் தேவையான அனைத்து ஆவணங்களும் ஒழுங்காகவும் சமர்ப்பிக்கப்படும் போது மட்டுமே சாத்தியமாகிறது. இந்த ஆவணங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இதனை உறுதிப்படுத்த, எங்கள் குழுவினர் ஆரம்பத்திலேயே தெளிவான வழிகாட்டுதலை வழங்கக் கடுமையாகப் பயிற்சி பெறப்பட்டுள்ளனர். அதன் மூலம், விண்ணப்பதாரர்கள் தங்களிடமிருந்து என்ன தேவைப்படுகிறது என்பதை நன்கு புரிந்து செயல்படுகிறார்கள். இது செயல்முறையை விரைவாக முன்னேற்ற உதவுகிறது.
முக்கியமாக, சரியான நிபுணர்களை சரியான நிலையில் நியமிப்பதன் மூலம், வழமையாக ஏற்படும் தாமதங்களை நாங்கள் குறைத்துள்ளோம். இதுவே 14 வேலை நாட்களுக்குள் கடன் வழங்கும் நமது உறுதியை நிலைநிறுத்தவும், செயல்முறையை வாடிக்கையாளர்களுக்கான ஒரு எளிமையான மற்றும் மன அழுத்தமின்றி மேற்கொள்ளக்கூடிய அனுபவமாக மாற்றவும் உதவியுள்ளது.
இந்தக் கடனுக்கு யார் தகுதியுடையவர்கள்? அதுபொதுவாக எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
தகுதி நிபந்தனைகள் மிகவும் நேர்த்தியானவையாக உள்ளன. 18 வயதைக் கடந்த எந்தவொரு இலங்கைக் குடிமகனும் இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் கூட்டு விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. வாடிக்கையாளரின் நிதி நிலைத்தன்மையை மதிப்பீடு செய்வது அவசியமான கட்டமாக இருந்தாலும், அந்த செயல்முறை எப்போதும் வெளிப்படையாகவும் நியாயமானதாகவும் இருக்கும் என்பதற்கு வங்கி உறுதியளிக்கிறது. இது வாடிக்கையாளரும் வங்கியும் பரஸ்பர நம்பிக்கையுடன் செயல்படுவதற்கான அடிப்படை நிலையை உறுதிப்படுத்துகிறது.
இந்தக் கடன் நிலம் வாங்க, புதிய வீடு கட்ட அல்லது வாங்க, அல்லது ஏற்கனவே உள்ள வீடுகளை புதுப்பிக்கவோ விரிவுபடுத்தவோ பயன்படுத்தப்படலாம். வீட்டு உரிமை பற்றிய பயணத்தின் பல்வேறு கட்டங்களிலும் உதவக்கூடிய வகையில் இது ஒரு நெகிழ்வான நிதி வசதியாக அமைந்துள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் குறித்த நிலைமை என்ன? அவர்களும் இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியுமா?
ஆம், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும் இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தங்களுக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ சொந்த நாட்டில் சொத்துகளில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு இலங்கை வம்சாவளியினரிடையே தொடர்ந்து உயரும் ஆர்வத்தை நாங்கள் கவனித்திருக்கிறோம். அவர்களுக்கும் இந்தச் சேவைக்கான ஒரே செயல்முறை நடைமுறையில் உள்ளது. மேலும், அவர்களுக்குத் தேவையான சிறப்பு உதவிகளை வழங்க எங்கள் குழுவினர் தயாராக உள்ளனர்.
இந்த விரைவான கடன் முறையை உருவாக்க அடிப்படைத் தூண்டுகோள் என்ன?
இந்த யோசனை நிறுவனத்துக்குள் இருந்தே தோன்றியது. வாடிக்கையாளர்களுக்கான கடன் அனுபவத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை மையமாக வைத்து, எங்கள் தொழில்முறை குழுக்களுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. கடந்த காலத்தில், கடன் செயல்முறை அதிக நேரம் எடுத்துக்கொண்டது முயற்சி இல்லாததாலோ அலட்சியம் காரணமாலோ அல்ல, மாறாக, அவ்வப்போது பயன்படுத்தப்பட்ட அமைப்புகள் அதற்கேற்ற வகையில் வடிவமைக்கப்படாததால்தான் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட உண்மை.
இதையடுத்து, நாங்கள் கட்டமைப்பு மேம்பாடுகளில், அர்ப்பணிப்புடன் செயல்படும் ஊழியர்களில், மற்றும் துறைகளுக்கிடையிலான இணைபுழக்கத்தில் தீவிரமாக முதலீடு செய்தோம். மேலும், பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்த கருத்துக்களையும் நாங்கள் கவனமாக எடுத்துக்கொண்டோம். இந்த அனுபவங்களே, அவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை சவால்களுக்கும் உணர்திறன் சார்ந்த தேவைகளுக்கும் பதிலளிக்கக்கூடிய ஒரு புதிய மற்றும் விளக்கமான செயல்முறையை உருவாக்க எங்களுக்கு வழிகாட்டியது.
வேகத்தைக் கடந்த பங்களிப்பு – இந்த வீட்டுக் கடனின் மூலம் வாடிக்கையாளர்கள்என்ன பெறுகிறார்கள்?
அவர்கள் நம்பிக்கையைப் பெறுகிறார்கள். வீடு வாங்குவது ஒரு சாதாரண நிதி முடிவல்ல. அது வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனை. மக்கள் தங்களது நிதி நிலைமை பாதுகாப்பானதெனவும், காலவரையற்ற காத்திருப்பு தேவையில்லை எனவும் உறுதியாக உணர வேண்டும். இந்தக் கடன், அந்த நம்பிக்கையையும் தெளிவையும் அவர்களுக்கு வழங்குகிறது.
அம்சங்களைக் கூறும்போது, விண்ணப்பதாரரின் வருமானமும் திருப்பிச் செலுத்தும் திறனும் அடிப்படையாகக் கொண்டு, வருடத்திற்கு 10% முதல் ஆரம்பமாகும் போட்டித் தன்மை வாய்ந்த வட்டி விகிதங்களை வழங்குகிறோம். கடனின் அமைப்பு பல்வேறு வருமான மட்டங்களில் உள்ள மக்களுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்டுள்ளது. எனவே, எல்லா வாடிக்கையாளர்களும் ஒரே மாதிரியான விதிமுறைகளுக்குள் கட்டுப்பட வேண்டிய நிலை ஏற்படவில்லை.
இந்தக் கடன் திட்டம் கடந்த ஆண்டு தேசிய பொருளாதார இலக்குகளுடன்இணைந்த ஒரு முயற்சியின் பகுதியாகப் பெயர்க்கப்பட்டது. அதுஇன்னும் பொருந்துகிறதா?
நிச்சயமாக. வீட்டுவசதி மற்றும் நிலத்தின் அபிவிருத்தி என்பது தேசிய வளர்ச்சிக்கான முக்கிய தளங்களில் ஒன்றாக இருக்கிறது. பயனுள்ளதாக செயல்படும் வீட்டுக் கடன் அமைப்பு, கட்டுமானம், நிலமதிப்பீடு, சட்ட சேவைகள், தளபாட உற்பத்தி, உள்நாட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளுக்கு பரிணாம விளைவுகளை உருவாக்கக்கூடியது. அதைவிட முக்கியமானது, இது தனிநபர்கள் தங்கள் நிதி எதிர்காலத்தை திட்டமிடுவதற்கும் அதனை உரியவாறு நிர்வகிக்கத் தகுதியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.
இலங்கை வங்கிக்கு இது ஒரு வங்கி சேவை மட்டுமல்ல, ஒரு தேசிய பங்களிப்பாகும். மக்களை வீட்டு உரிமையாளர்களாக மாற்ற உதவுவது, நீண்ட காலத்தில் பொருளாதார நிலைத்தன்மையை, உள்ளூர் முதலீட்டை, மற்றும் சமூக நன்மைகளை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான வழியாகவே வங்கி இதனைப் பார்கிறது.
வாடிக்கையாளர்கள் ஏன் மற்ற கடன் வழங்குநர்களை விட இலங்கை வங்கியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
இலங்கை வங்கி என்பது 85 ஆண்டுகளுக்கும் மேலான பயணத்தை கடந்துள்ள, நாட்டின் மிக நம்பகமான நிதி நிறுவனங்களில் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்கள் நாங்கள் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை வழங்குகிறோம் என்பதையும், சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் சமமாக சேவை செய்ய முனைந்துள்ளோம் என்பதையும் நன்கு அறிந்துள்ளனர். நாங்கள் வெறும் தயாரிப்புகளை வழங்குவதற்காக மட்டுமல்ல, உண்மையான வாழ்க்கைத் தருணங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக இருப்பதற்காகவும், நீண்டகால உறவுகளை கட்டியெழுப்புவதற்காகவும் இங்கு இருக்கிறோம்.
இந்த 14 நாள் வீட்டு கடன் சேவை, அந்த தத்துவத்தின் நேரடி பிரதிபலிப்பாகும். ஒவ்வொரு இலங்கையரும், அவர்களின் பின்னணி அல்லது வருமான நிலையைப் பொருட்படுத்தாமல், வீட்டில் முதலீடு செய்ய தீர்மானிக்கும் போது, நியாயமான, சரியான நேரத்தில் கிடைக்கும் நிதி ஆதரவைக் கொண்டு அதனை நனவாக்க முடியும் என்ற நம்பிக்கையையே இது வெளிப்படுத்துகிறது.
இந்த 14 நாள் வீட்டு கடன் முறையை எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தவோமேம்படுத்தவோ திட்டமிருக்கிறதா?
நிச்சயமாக. எங்கு எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை எங்களது செயல்முறைகளைத் தொடர்ந்து மதிப்பீடு செய்வதன் மூலம் நாங்கள் ஆராய்கிறோம். குறிப்பாக டிஜிட்டல் வசதிகள் முக்கிய கவனமாக இருக்கின்றன, வெளிநாட்டில் அல்லது தொலைதூர பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கான ஆவண சமர்ப்பிப்பு, விண்ணப்பம் மற்றும் முன்-ஆதரவுகளை மேலும் எளிமைப்படுத்தும் நோக்கில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
வாடிக்கையாளருக்கான அனுபவத்தில் எந்த சமரசமும் இல்லாமல், தரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை முழுமையாகக் காக்கும் வகையில் செயல்முறையை மேலும் எளிமைப்படுத்துவதே எங்கள் குறிக்கோள். அதனைச் செயல்படுத்த முடிந்தால், இந்த வீட்டு கடன் திட்டம் வாடிக்கையாளர் மையமாகச் செயல்படும் வங்கிச் சேவைகளுக்கான ஒரு முன்மாதிரியாகத் திகழும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது.
வழக்கமான அச்சங்கள் மற்றும் தாமதங்கள் காரணமாக வீட்டுக் கடனுக்கான முடிவை தொடர்ந்து ஒத்திவைத்துவரும் ஒருவருக்குநீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
எனது பதில் சிறிதும் தயக்கமின்றி: “இப்போது தொடங்குங்கள்.” அருகிலுள்ள கிளைக்குச் செல்லுங்கள். எங்கள் அதிகாரிகளுடன் பேசுங்கள். இப்போது இந்த செயல்முறை கடந்த காலத்திலிருந்ததைப் போல சிக்கலானதல்ல என்பதை நீங்கள் நேரில் அனுபவிப்பீர்கள். அதை எளிமையாகவும், நேரடியாகவும் மாற்ற நாங்கள் மிகுந்த கவனத்துடன் வேலை செய்துள்ளோம்.
ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு என்ற கனவைக் கைப்பற்றும் ஒரு வாய்ப்பு தேவை. சரியான வழிகாட்டுதலும் ஆதரவுமுள்ள நிலையில், அந்தக் கனவை நனவாக்குவது உண்மையாக சாத்தியமாகும். அதை உங்களுக்காக உணர்த்த நாங்கள் இங்கே இருக்கிறோம்.