உட்புற முதலீட்டு கணக்கினை (IIA) சேமிப்பு, நிலையான வைப்பு மற்றும் நடைமுறைக் கணக்குகளாக (காசோலை வரைதல் வசதியின்றி) பின்வரும் நாணயங்களில் உள்நாட்டு வங்கிகளில் ஆரம்பிக்கலாம். 


                    நாணயவகை                    நாணயம்
                    இலங்கை ரூபா                            LKR
                    ஐ. அ. டொலர்                                USD
                    ஸ்ரேலிங் பவுண்                          GBP
                    யூரோ                                              EUR
                    ஜப்பான் யென்                             JPY
                    அவுஸ்திரேலிய டொலர்            SUD
                    சுவிஸ் பிராங்                               CHF
                    கனேடிய டொலர்                        CSD
                    சிங்கப்பூர் டொலர்                      DGD
                    நியூசிலாந்து டொலர்                 NZD
                    சீன ரென்மினி                             CNY

  • உட்புற முதலீட்டுச் சேமிப்பு கணக்குகளுக்கும் நடைமுறை கணக்குகளுக்கும் ஆரம்ப வைப்போ அல்லது குறைந்த பட்சமீதியோ தேவையில்லை
  • நடைமுறைக் கணக்குகளிற்கு காசோலைப் புத்தகங்ளோ மிகைப்பற்று(OD) வசதிகளோ கிடையாது
  • நிலையான வைப்புக்கு உட்புற முதலீட்டுச் சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் மாத்திரம் நிலையான வைப்புகளை திறக்கலாம்.
  • நிலையானவைப்புகளை திறத்தல் மற்றும் நிறைவு செய்தல் என்பவற்றாலான நிதிபரிமாற்றமானது IIA சேமிப்பு அல்லது நடைமுறை கணக்குகளினூடாகவே மேற்கொள்ளப்படவேண்டும்.
தகைமைகள்
  • இலங்கையரல்லாத இலங்கைக்கு வெளியே வதிகின்ற நபரொருவர்
  • இலங்கைக்கு வெளியேவதிகின்ற இரட்டை பிரஜாவுரிமையுடைய இலங்கையர்
  • இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் வதிகின்ற மற்றுமொரு நாட்டில் நிரந்தரவதிவிட உரிமையைப் பெற்ற இலங்கையர்
  • இலங்கைக்கு வெளியே வசிக்கின்ற வெளிநாட்டில் தொழில்புரியும்  இலங்கைப்பிரஜை (புலம் பெயர்ந்தவர்களை தவிர்த்து)
  • இலங்கைக்கு வெளியே கூட்டிணைக்கப்பட்ட ஓர் நிறுவனம்
  • இலங்கைக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட ஓர் கூட்டாண்மை
  • இலங்கைக்கு வெளியே நிறுவப்பட்டுள்ள நாட்டின் நிதியங்கள், பிராந்தியநிதியங்கள், பரஸ்பரநிதியங்கள் மற்றும் ஒரும பொறுப்பாட்சி நிறுவனங்கள் மற்றும்இலங்கைக்கு  வெளியில் நிறுவப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்.
  • உட்புற முதலீட்டுக் (IIA)கணக்கினை பேணிமரணித்தவருடைய சொத்தினை நிர்வகிக்கின்றவர் அல்லது நிறைவேற்றுநர்
  • உட்புறமுதலீட்டுக் (IIA)கணக்கினைப் பேணுகின்ற கம்பனியொன்றின் பெறுபவர் அல்லது தீர்ப்பனவு செய்பவர்
     
தேவையான ஆவணங்கள் மற்றும் தகவல்கள்

தகைமையுடைய தனிநபர்கள்

               >>  முகவரியை உறுதிப்படுத்தும் ஆவணங்கள். (வங்கிக்குவழங்கப்பட்ட விலாசமானது தேசிய அடையாள அட்டை /  வாகன அனுமதிப்பத்திரம்/ கடவுச்சீட்டு என்பவற்றிலிருந்து மாறுபட்டால்)
 

  • இலங்கைக்குவெளியேவாசிக்கின்ற மற்றும் கிளைக்கு சமூகமளித்து இக்கணக்கனைத் திறக்க முடியாத தகைமையுடைய தனிநபர் IIA கணக்கினைத் திறப்பதற்கான விண்ணப்பங்களின் மூலப் பிரதிகள் மற்றும் ஏனைய துணை ஆவணங்களை இங்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள யாராயினுமொருவரிடம் முறையாக அத்தாட்சிப்படுத்தி உரிய வங்கிக்கிளைக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
    i.    BOC வியாபார மேம்பாட்டு உத்தியோகத்தர் (BPO)
    ii.    BOC வங்கிகளது / வெளிநாட்டில் உள்ள வங்கியினது அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள்
    iii.   இலங்கை தூதரகத்தினது அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள்
     


தகுதியான நிறுவனங்கள்
தேவையான ஆவணங்கள் மற்றும் தகவல்களுக்கு BOC கிளையை தொடர்பு கொள்ளவும்

 

For any assistance 

Foreign Circle
International Customer Service Support Unit

+94 11 220 3859
+94 11 220 3860
+94 11 220 3886
+94 11 220 3887

 
+94 707 203203
+94 707 204204
+94 707 205205

 fc@boc.lk