எமது கதை
கொழும்பு கோட்டையில் 1939 ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி இலங்கை ஆளுநரான சேர் அன்ட்றூ கொல்டெகோட் முதலாவது வணிக வங்கியைத் திறந்து வைத்ததில் இருந்து எமது கதை ஆரம்பமாகின்றது.
எமது வங்கி நடவடிக்கைகள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே ஆரம்பம் முதல் எமது விருப்பமாக இருந்ததுடன் அதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுத்தும் வந்துள்ளோம். எமது வாடிக்கையாளர்களின் மனங்கவர்ந்த நிதிப் பங்காளராக என்றென்றைக்கும் சேவையாற்றுவதே எமது நோக்கமாகும்.
எதிர்கால தொழில்நுட்பங்களை இன்றே வரித்துக்கொண்ட மிகப்பெரிய சேவை வலையமைப்பை முகாமைசெய்து நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன்களை எமது விலைமதிப்பற்ற வாடிக்கையாளர்களின் வசதியின் பொருட்டு வழங்கி வருகிறோம்.
நமது நாட்டிற்கு வெளியே வாழும், பணிபுரியும் நமது மக்களின் அன்றாட வாழ்வை மேம்படுத்தும் முகமாக இலண்டன், மாலே, ஹுல்{ஹுமலே, சென்னை மற்றும் சீஷெல்ஸ் ஆகிய இடங்களில் எங்களது செயற்பாடுகளை விரிவுபடுத்தி உலகளாவிய வலையமைப்பைக் கொண்ட வங்கியாக நாம் விளங்குகிறோம்.
அதிகரித்துவரும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், இலங்கை வங்கி எதிர்கால தொழில்நுட்பங்களில் பாரிய முதலீடுகளைச் செய்து, வல்லுநர்களின் தனித்துவமான திறன்களைப் பயன்படுத்தி எமது பங்குதாரர்களுக்கு வசதிகரமான வங்கியியல் அனுபவத்தை வழங்குகிறது.
எட்டு தசாப்தங்களுக்கு மேலான வங்கியியற் தலைமைத்துவத்தைக் கொண்ட நாட்டின் முதன்மை நிதி நிறுவனம் என்ற வகையில் எமது பங்குதாரர்களுக்கும் நாட்டுக்கும் பரந்தகன்ற வாய்ப்புகளை உருவாக்கி எம் மக்கள் அனைவரதும் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் பாடுபடும் முதற்தர வங்கியாக நாம் மிளிர்கிறோம் என்பதையிட்டுப் பேருவகை கொள்கிறோம்.
தொலைநோக்கு
உறுதியான உலக வியாபகத்துடன் தேசத்தின் விருப்பத்துக்குரிய டிஜிற்றல் முறைமை வங்கியாகத் திகழ்வதன் மூலம் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை வழிநடாத்துதல்.
குறிக்கோள்
நாடளாவிய மற்றும் உலகளாவிய வலையமைப்பினூடாக உன்னதமான சேவையை நிலைநாட்டும் பொருட்டும்; எமது வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஏனைய அனைத்துப் பங்குதாரர்களுக்கும் நிலைபேறான பெறுமதியை உருவாக்கும் பொருட்டும்; தனிநபர்களையும் சமூகங்களையும் வியாபாரங்களையும் வலுவூட்டும் பாதுகாப்பானதும் அனைவரையும் உள்ளடக்கியதும் தொழில்நுட்பவியலால் மேம்படுத்தப்பட்டதுமான நிதிச் சேவைகளை வழங்குதல்.
நிறுவன விழுமியக் கூற்று
நாட்டின் வங்கி, நிதித் துறையின் முன்னோடி என்ற நிலையைத் தக்கவைத்துக்கொண்டே எமது அடிப்படை விழுமியங்களை எஞ்ஞான்றும் தளரவிடா நெஞ்சுரத்துடன் வாடிக்கையாளரை மையமாகக் கொண்டதும் புதுமைகளை வரித்துக் கொண்டதுமான நிதித் தீர்வுகளை வழங்குவதன் ஊடாக எம்மக்களின் வாழ்க்கையையும் நாட்டின் சமுக பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்துவது என்ற ஒற்றை நோக்கத்தைத் தலைமேற்கொண்டு நாம் ஒருமித்துப் பணியாற்றுகிறோம்.
>> வாடிக்கையாளர் மைய வங்கிச் சேவை
>> அனைத்து வகையான பல்வகைத்தன்மையையும் மதித்தல்
>> அறம்> ஆளுகை, தொழில்முறை என்பவற்றை அர்ப்பணிப்புடன் கைக்கொள்ளல்
>> சுறுசுறுப்பாகவும் புத்தாக்கத்துடனும் செயற்படுவதில் கவனம் செலுத்துகிறோம்
>> எங்கள் எல்லாச் செயல்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டும்
வாடிக்கையாளர்களை மையப்படுத்துதல்
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிதிச் சேவைகளை வழங்குவதிலும், எமது பங்குதாரர்களுக்கு பொருத்தமான நீண்ட கால வருமானத்தை வழங்குவதிலும் எமது நோக்கத்தை நிறைவேற்ற நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம் என்பதை புரிந்துகொள்கிறோம். எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அனைத்தும் எமது வாடிக்கையாளர்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தும் மதிப்புகளின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் உறுதியாக நம்புகின்றோம்.
அனைத்து வகையான பன்முகத்தன்மையையும் மதித்தல்
அனைத்து மக்களின் கண்ணியத்தையும் நாம் பாதுகாக்கும் அதேநேரம் அனைவரையும் மதிக்கின்றோம். இலங்கை வங்கி என்ற வகையில் நாம் எவற்றுக்காக முன்னிற்கின்றோமோ அதனை மதிப்பது எமது இயல்பாகும். பல்லின சமூகங்கள் வாழும் சூழலில் எம்மோடு தொடர்புபடுகின்றவர்கள் எல்லா சூழ்நிலையிலும் இணைந்து, செழிப்பாக இருக்க வேண்டும் என்பதையும் நாம் ஆதரித்து, மதித்து, வரவேற்கின்றோம்.
உயர் மட்ட நெறிமுறைகள்> ஆளுகை மற்றும் தொழில்முறைக்கு அர்ப்பணிப்பு
ஒருமைப்பாட்டின் மிக உயர்ந்த நிலைகளை நாங்கள் நிலைநிறுத்துகிறோம். எங்கள் முழு வணிக மாதிரியும் எங்கள் பங்குதாரர்கள்> குறிப்பாக எங்கள் வாடிக்கையாளர்களால் உணரப்படும் நம்பிக்கை மற்றும் நேர்மையை அடிப்படையாகக் கொண்ட வகையில் அமைந்துள்ளது. வாடிக்கையாளர்கள். பங்குதாரர்கள் மற்றும் சமூகங்களுடனான அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை> புதுமை> பொறுப்புக்கூறல் மற்றும் சிறந்த சேவை ஆகியவற்றை வழங்குவதே எமது நோக்கமாகும்.
சுறுசுறுப்பாகவும் புதுமையாகவும் இருப்பதில் கவனம் செலுத்துகிறோம்
எமது மக்கள் மற்றும் எமது வியாபாரத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகள் நடைபெற்ற பின்னர் அதற்காக கவலைப்படுவதை விடுத்து, முற்கூட்டியே அத்தகைய நிலைமை ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வோம். சிந்தனைத் தலைமையுடன் மக்களை தெளிவுப்படுத்தும் மற்றும் சவலான கலாச்சார்தை எதிர்கொள்ளும் மனநிலையை வாடிக்கையாளர்கள் மத்தியில் எமது தலைவர் ஏற்படுத்துகின்றனர். மேலும் செயற்திறனில் சிறந்து விளங்குவது எங்கள் வாடிக்கையாளர்களும், சமூகங்களும் வளர ஊக்குவிப்பாக அமைகின்றது.
எங்கள் எல்லா செயல்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டும்
எமது இணைப்புச் சங்கிலலி சக்தி மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தமது வாழ்க்கைக்கு தேவையான நிதி அம்சங்களை சிறப்பாகச் செய்ய உதவுவதே எங்கள் பொதுவான நோக்கமாகும். இலங்கை வங்கி அதன் அனைத்து செயல்பாடுகளுக்கும் மற்றும் அதன் மதிப்பு உருவாக்க பொறிமுறையின் துணை தயாரிப்புகளுக்கும் பொறுப்பாக விளங்கும். எமது வணிகம், எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் நாங்கள் சேவை செய்யும் சமூகங்களுக்கு பெறுமதி சேர்க்கும் அதே வேளையில் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் துடிப்பான மற்றும் வளமான நிறுவனமாக எங்கள் வங்கியை மாற்றியுள்ளோம்.
ஒன்றாக இணைந்து பணியாற்றல்
பரஸ்பர நம்பிக்கை, பகிரப்பட்ட உரிமை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த அணிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் ஒரு நிறுவனமாகச் செயல்படுகிறோம். நாங்கள் ஒன்றாகச் செயல்படும்போது, எமது வாடிக்கையாளர்களின் முழுத் தேவைகளையும் சிறப்பாகப் பூர்த்திசெய்தய முடியும் என்றும், எமது பங்குதாரர்களுக்கு பெறுமதியை வழங்க முடியும் எனவும் நாம் நம்புகிறோம். ஒவ்வொரு வாடிக்கையாளரையும் குழு உறுப்பினரையும் தனிநபராகக் கருதுவதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்துள்ளோம். மேலும் ஒவ்வொரு தருணத்தையும் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறோம். நாங்கள் ஒருவருக்கொருவர் மரியாதை மற்றும் நம்பிக்கையை வளர்த்து, ஒத்துழைப்போம். ஒருவருடன் ஒருவரும், ஒன்றுடன் ஒன்றும் சார்ந்திருப்பதை ஊக்குவிக்கிறோம். எங்களின் அடுத்த நிலை இலக்குகளை அடைவதில் தொடர்ந்து பாடுபடும் திறன் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
எங்கள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகளை மதித்தல்
எமது நோக்கத்திற்கும், பொறுப்பான நிதிச் சேவைகளாகிய எமது கடமைகளுக்கும் இணங்க இலங்கை வங்கியானது எமது வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மற்றும் அதன் தாக்கத்திற்கு உள்ளான மக்களின் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க உறுதிபூண்டுள்ளது. இலங்கை எமது வீடாகும். எங்களது அனைத்து வணிக முடிவுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக அமைந்த எங்கள் உன்னத நோக்கத்திற்கு நாங்கள் உண்மையாக இருப்பதை உறுதிசெய்கிறோம். அது தொடர்ந்து வளர்சிப் பாதையில் செல்லும் என்றும் நாம் எதிர்பார்க்கின்றோம். எங்கள் சேவைகள், தயாரிப்பு மேம்பாடு மற்றும் வாடிக்கையாளர் உறவுகளை மேம்படுத்துவதிலும் இதனையே முன்னுதாரணத்தைப் பின்பற்றுகிறோம். இலங்கையின் நிதிச் சேவைத் துறையில் நாம் மிக உயர்ந்த தரத்தைப் பேணுவதையும், தொடர்ந்து முன்னணியில் இருப்பதையும் உறுதிசெய்கிறோம். முடிவுகள் துரிதமாக எடுப்பதற்கு இதுவே எமக்கு உதவுகிறது.
கொழும்பின் வணிகப் பெருநகரமான கோட்டையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இலங்கை வங்கியானது ஓகஸ்ட் 1, 1939 அன்று இலங்கையின் ஆளுநர் சேர் ஆன்ட்ரூ கால்டெகொட் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. பிற பரிமாற்ற வங்கிகள் மற்றும் முறைசாரா பணக் கடன் வழங்குநர்களின் வலுவான போட்டிக்கு மத்தியிலும் மக்களுக்கான முதல் உள்நாட்டு வங்கியாக அதன் வளர்ச்சி தடுக்க முடியாததாக இருந்தது.
2500+ சேவை மையங்கள்
663 கிளைகள் | 517 ATM இயந்திரங்கள்| 1001 CRM இயந்திரங்கள் | BOC Connect | SME/RLC
4 வெளிநாட்டுக் கிளைகள்
870+ வெளிநாட்டுத் தொடர்பு நிறுவனங்கள்
வங்கிகளும் பரிமாற்று நிறுவனங்களும்
10 துணை நிறுவனங்கள் 03 இணை நிறுவனங்கள்
57.40 பில்லியன் ரூபாய் என்ற வணிக நாமப் பெறுமதியை எட்டியுள்ள இலங்கை வங்கி 2025ஆம் ஆண்டில் பிராண்ட் பினான்ஸ் லங்கா நிறுவனத்தால் AAA- என்ற வணிக நாம வலுச் சுட்டெண்ணைக் கொண்ட நிறுவனமாகத் தரப்படுத்தப்பட்டுள்ளதோடு பிட்ச் றேட்டிங் லங்கா நிறுவனத்தால் AA-(lka)/Stable outlook என்ற தேசிய நெடுங்காலத் தரநிலையையும் BBB+ என்ற துணைநில் தொகுதிக்கடன்முறிகள் தரநிலையையும் கொண்ட வங்கியாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது
இலங்கை வங்கி இலங்கை மத்திய வங்கியினால் கண்காணிக்கப்படும் உரிமம் பெற்ற வணிக வங்கியாகும்.
தலைமைத்துவமும் நிர்வாகமும்
இலங்கை வங்கி ஒரு அரச நிறுவனம் என்ற வகையில் பங்குதாரர்களின் ஒருமைப்பாடு மற்றும் நீண்ட கால நிலைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு அதன் அனைத்து நடவடிக்கைகளிலும் நல்ல நிறுவன நிர்வாகம், வணிக ஒருமைப்பாடு மற்றும் தொழில்வாண்மை ஆகியவற்றின் தரத்தை நிலைநிறுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளது. வலுவான நிறுவன நிர்வாகக் கட்டமைப்பானது, நிர்வாகக் கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் பங்குதாரர்களின் வளர்ந்து வரும் தேவைகள் என்பவற்றின் வளர்ச்சிக்கேற்ப நிர்வாகக் கட்டமைப்பு புதுப்பிக்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்வதற்காக ஆண்டுதோறும் மதிப்பாய்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்படும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் என்பவற்றை ஊக்குவிக்கும் நல்ல நிர்வாக நடைமுறைகளைக் கொண்டுள்ள அதேவேளை நமது கலாச்சாரத்திலும் விழுமியங்களிலும் உட்பொதிந்துள்ள நெறிமுறையான முகாமைத்துவ நடைமுறைகளையும் ஆதரிக்கிறது.
ஆண்டில் வென்ற விருதுகளும் கிடைத்த பாராட்டுகளும்
நிலைபேறாண்மை
இலங்கை வங்கியானது, வங்கியின் நிலைபேறாண்மை அலகு, நிலைபேறாண்மைக் குழு மற்றும் பணிப்பாளர் சபையால் ஆண்டுதோறும் மீளாய்வு செய்யப்படும் ஒரு முழுமையான, விரிவான நிலைபேறாண்மைக் கொள்கையைக் கொண்டுள்ளது.
நிதிசார் முனையம்சங்கள்