BOC  History

வாடிக்கையாளர்களை மையப்படுத்துதல்

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிதிச் சேவைகளை வழங்குவதிலும், எமது பங்குதாரர்களுக்கு பொருத்தமான நீண்ட கால வருமானத்தை வழங்குவதிலும் எமது  நோக்கத்தை நிறைவேற்ற நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம் என்பதை புரிந்துகொள்கிறோம். எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அனைத்தும் எமது வாடிக்கையாளர்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தும் மதிப்புகளின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் உறுதியாக நம்புகின்றோம். 

அனைத்து வகையான பன்முகத்தன்மையையும் மதித்தல்

அனைத்து மக்களின் கண்ணியத்தையும் நாம் பாதுகாக்கும் அதேநேரம் அனைவரையும் மதிக்கின்றோம். இலங்கை வங்கி என்ற வகையில் நாம் எவற்றுக்காக முன்னிற்கின்றோமோ அதனை மதிப்பது எமது இயல்பாகும்.  பல்லின  சமூகங்கள் வாழும் சூழலில் எம்மோடு தொடர்புபடுகின்றவர்கள் எல்லா சூழ்நிலையிலும் இணைந்து, செழிப்பாக இருக்க வேண்டும் என்பதையும் நாம் ஆதரித்து, மதித்து, வரவேற்கின்றோம். 

உயர் மட்ட நெறிமுறைகள், ஆளுகை மற்றும் தொழில்முறைக்கு அர்ப்பணிப்பு

ஒருமைப்பாட்டின் மிக உயர்ந்த நிலைகளை நாங்கள் நிலைநிறுத்துகிறோம். எங்கள் முழு வணிக மாதிரியும் எங்கள் பங்குதாரர்கள், குறிப்பாக எங்கள் வாடிக்கையாளர்களால் உணரப்படும் நம்பிக்கை மற்றும் நேர்மையை அடிப்படையாகக் கொண்ட வகையில் அமைந்துள்ளது.  வாடிக்கையாளர்கள். பங்குதாரர்கள் மற்றும் சமூகங்களுடனான அனைத்து நடவடிக்கைகளிலும்  வெளிப்படைத்தன்மை, புதுமை, பொறுப்புக்கூறல் மற்றும் சிறந்த சேவை ஆகியவற்றை வழங்குவதே எமது நோக்கமாகும்.

சுறுசுறுப்பாகவும் புதுமையாகவும் இருப்பதில் கவனம் செலுத்துகிறோம்

எமது மக்கள் மற்றும் எமது வியாபாரத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகள் நடைபெற்ற பின்னர் அதற்காக கவலைப்படுவதை விடுத்து, முற்கூட்டியே அத்தகைய நிலைமை ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வோம். சிந்தனைத் தலைமையுடன் மக்களை தெளிவுப்படுத்தும் மற்றும் சவலான கலாச்சார்தை எதிர்கொள்ளும் மனநிலையை வாடிக்கையாளர்கள் மத்தியில் எமது தலைவர் ஏற்படுத்துகின்றனர்.  மேலும் செயற்திறனில் சிறந்து விளங்குவது எங்கள் வாடிக்கையாளர்களும், சமூகங்களும் வளர ஊக்குவிப்பாக அமைகின்றது. 

எங்கள் எல்லா செயல்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டும்

எமது இணைப்புச் சங்கிலலி சக்தி மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தமது வாழ்க்கைக்கு தேவையான நிதி அம்சங்களை சிறப்பாகச் செய்ய உதவுவதே எங்கள் பொதுவான நோக்கமாகும். இலங்கை வங்கி அதன் அனைத்து செயல்பாடுகளுக்கும் மற்றும் அதன் மதிப்பு உருவாக்க பொறிமுறையின் துணை தயாரிப்புகளுக்கும் பொறுப்பாக விளங்கும். எமது வணிகம், எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் நாங்கள் சேவை செய்யும் சமூகங்களுக்கு பெறுமதி சேர்க்கும் அதே வேளையில் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும்  துடிப்பான மற்றும் வளமான நிறுவனமாக எங்கள் வங்கியை மாற்றியுள்ளோம்.

ஒன்றாக இணைந்து பணியாற்றல்

பரஸ்பர நம்பிக்கை, பகிரப்பட்ட உரிமை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த அணிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் ஒரு நிறுவனமாகச் செயல்படுகிறோம். நாங்கள் ஒன்றாகச் செயல்படும்போது, எமது வாடிக்கையாளர்களின் முழுத் தேவைகளையும் சிறப்பாகப் பூர்த்திசெய்தய முடியும் என்றும், எமது  பங்குதாரர்களுக்கு பெறுமதியை வழங்க முடியும் எனவும் நாம்  நம்புகிறோம். ஒவ்வொரு வாடிக்கையாளரையும் குழு உறுப்பினரையும் தனிநபராகக் கருதுவதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்துள்ளோம்.   மேலும் ஒவ்வொரு தருணத்தையும் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறோம். நாங்கள் ஒருவருக்கொருவர் மரியாதை மற்றும் நம்பிக்கையை வளர்த்து, ஒத்துழைப்போம். ஒருவருடன் ஒருவரும், ஒன்றுடன் ஒன்றும் சார்ந்திருப்பதை ஊக்குவிக்கிறோம். எங்களின் அடுத்த நிலை இலக்குகளை அடைவதில் தொடர்ந்து பாடுபடும் திறன் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

எங்கள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகளை மதித்தல்

எமது நோக்கத்திற்கும், பொறுப்பான நிதிச் சேவைகளாகிய எமது கடமைகளுக்கும் இணங்க இலங்கை வங்கியானது எமது வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மற்றும் அதன் தாக்கத்திற்கு உள்ளான மக்களின் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க உறுதிபூண்டுள்ளது. இலங்கை எமது வீடாகும். எங்களது அனைத்து வணிக முடிவுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக அமைந்த எங்கள் உன்னத  நோக்கத்திற்கு நாங்கள் உண்மையாக இருப்பதை உறுதிசெய்கிறோம். அது தொடர்ந்து வளர்சிப் பாதையில் செல்லும் என்றும் நாம் எதிர்பார்க்கின்றோம்.  எங்கள் சேவைகள், தயாரிப்பு மேம்பாடு மற்றும் வாடிக்கையாளர் உறவுகளை மேம்படுத்துவதிலும் இதனையே முன்னுதாரணத்தைப் பின்பற்றுகிறோம். இலங்கையின் நிதிச் சேவைத் துறையில் நாம் மிக உயர்ந்த தரத்தைப் பேணுவதையும், தொடர்ந்து முன்னணியில் இருப்பதையும் உறுதிசெய்கிறோம்.  முடிவுகள் துரிதமாக எடுப்பதற்கு இதுவே எமக்கு உதவுகிறது.