நிலைபேறாண்மை குறித்து பொது முகாமையாளரின் செய்தி
இலங்கை வங்கியானது வருடாந்தம் நிலைபேறாண்மைக் குழுவினால் மீளாய்வு செய்யப்பட்டு பணிப்பாளர் சபையால் அங்கீகரிக்கப்படும் ஒரு கொள்கையை முறைப்படுத்துவதன் மூலம் நிலைபேறாண்மை தொடர்பிலான அதன் அணுகுமுறையை செம்மைப்படுத்திச் செயற்பட்டுவருகிறது. கொள்கையைச் செயற்படுத்துவதில், வங்கியின் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளிலும் செல்வாக்குச் செலுத்தும் நிலையானதும், கணக்கீட்டு ரீதியானதும், பொறுப்பு வாய்ந்ததுமான வர்த்தகத் தீர்மானங்களை மேற்கொள்வதன் பொருட்டு நிறுவன மதிப்புகள், பங்குதாரர்களின் ஈடுபாடு, இடர்களையும் தாக்கங்களையும் கண்காணித்தல், கொள்கைப் பரவல், முகாமைத்துவமும் நிர்வாகமும் மற்றும் முகாமைத்துவ வெளிப்பாடுகள் என்பவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
கொள்கைக்குள் பிணைக்கப்பட்ட நிலைபேறாண்மை இடர் முகாமைத்துவக் (SRM) கட்டமைப்பின் நிறுவுகையானது நீண்ட கால மற்றும் குறுகிய காலத்தில் இடர் காரணிகளின் தாக்கத்தின் அளவை உள்ளடக்குவதுடன் வங்கிக்கு ஏற்படும் பாதகமான தாக்கங்களையும், இடர்களையும் குறைப்பதற்கு மாற்று நடவடிக்கைகளையும் எடுக்கின்றது. வங்கியின் பிரதான விடயத் தலைப்பு, வங்கி மீதான தாக்கம், பங்குதாரர்களின் ஈடுபாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய இடர்பாடு என்பவற்றை மதிப்பாய்வு செய்வதற்காக ஒவ்வொரு வருடமும் விரிவான பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
“சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பின்புலத்தினூடான நிலைபேறான அபிவிருத்தி” என்ற தொலைநோக்குடன் வங்கியின் நிலைபேறாண்மைக் கொள்கையானது ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கமையச் செம்மைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்.
பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக காரணிகளை மேம்படுத்துவதில் வங்கியின் பங்களிப்பை உள்ளடக்கிய நிலைபேறாண்மை குறித்த அறிக்கை ஒன்றை வங்கி வருடாந்தம் வெளியிடுகின்றது. அறிக்கையிடலின் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட GRI நியமங்களை நாம் அறிக்கையிடலில் இணைத்துள்ளோம்.
நிலைபேறாண்மையின் மூன்று காரணிகளை உள்ளடக்கிய கூறுகளைப் பாதுகாப்பதில் துணை நிற்பதன் மூலம் தொழிற்றுறையில் நாம் ஒரு அளவுகோலை அமைத்துள்ளோம். எமது முயற்சிகள் அனைத்து இலங்கையர்களுக்கும் பொருளாதார ரீதியாகவும் சுற்றாடல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சமத்துவமான ஒரு நாட்டை உருவாக்க வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் எமது அனைத்துப் பங்குதாரர்களையும் சமூகத்தையும் இந்த தொலைநோக்கினூடாக ஊக்குவிப்பதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
அனைத்துக்கும் மேலாக, தேசத்தின் வங்கியாளர் என்ற எமது மகுட வாசகம் அனைத்து அளவிடத்தக்க விடயப் பரப்புகளிலுமான எமது தீர்மானமியற்றும் ஆற்றலுக்கு உந்து சக்தியாக விளங்குகிறது.
பொது முகாமையாளர்
இலங்கை வங்கியின் நிலைபேறாண்மைக் கொள்கைக் கட்டமைப்பு
வங்கியின் நிலைபேறாண்மைப் பிரிவு, நிலைபேறாண்மைக் குழு மற்றும் பணிப்பாளர் சபையினால் வருடாந்தம் மதிப்பாய்வு செய்யப்படும் முழுமையான, விரிவான நிலைபேறாண்மைக் கொள்கை ஒன்றை இலங்கை வங்கி கொண்டுள்ளது. மேற்கூறப்பட்ட நிலைபேறாண்மைக் கொள்கையின் சாராம்சம் வருமாறு.
வங்கித் துறையானது பொருளாதாரத்தின் அத்திவாரமாக விளங்கும் தொழிற்றுறைகளில் ஒன்றாக விளங்குவதுடன் உலகின் நிலைபேற்றுத் தன்மையில் ஒரு முக்கிய வகிபாகத்தை வகிக்கின்றது. நிலையான அபிவிருத்திக்குப் பங்களிப்பதில் வங்கிகளின் பங்கு பொருளாதாரத்தில் அவற்றின் இடைநிலைப் பங்களிப்புக் காரணமாக மிகவும் மகத்தான ஒன்றாகக் காணப்படுகின்றது.
நிலைபேறாண்மையின் தொலைநோக்கு
சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பின்புலத்தினூடான நிலைபேறான அபிவிருத்தி.
நிலைபேறாண்மையின் பணிக்கூற்று
சுற்றுச்சூழல்சார் பொறுப்புடனும் சமூக சமத்துவச் சிந்தையுடனும் பொருளாதார வலுவுடனும் வியாபாரத்தை மேற்கொள்வதன் மூலம் ஒரு பொறுப்புமிக்க நிறுவனமாகத் திகழ்தல்.
நிலைபேறாண்மை இலக்குகள்
சமூகத்திற்கு மதிப்பை உருவாக்குவதையும், எடுக்கப்படும் ஒவ்வொரு தீர்மானம் மற்றும் நடவடிக்கையின் மூலமாக சுற்றுச்சூழலுக்கும் சமூகத்திற்கும் ஏற்படும் பாதகமான தாக்கங்கள் குறைக்கப்படுவதையும் உறுதி செய்தல், சமூகத்தை மேம்படுத்துவதும் தேசிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதுமான அர்த்தமுள்ள நிலைபேறான கூட்டாண்மைச் சமூகப் பொறுப்புள்ள விடயங்களில் ஈடுபடல், வங்கி ஊழியர்களிடையே சமூகப் பொறுப்புணர்வை வளர்த்தல்.
நிலைபேறாண்மையின் நோக்கங்கள்
- பிரதான வர்த்தகத் தீர்மானங்கள் மற்றும் ஆரம்ப முயற்சிகளில் நிலைபேறான தன்மையை ஒருங்கிணைத்தல்.
- வங்கியின் காபன் அடிச்சுவட்டைக் குறைப்பதற்கான ஒரு செயற்பாட்டு முறையை நடைமுறைப்படுத்தல்.
- முறையான கழிவகற்றல் முறைமையை நடைமுறைப்படுத்தல்.
- புதுப்பிக்கத்தக்க சக்திகளை ஊக்குவித்தல்.
- வங்கியின் மூலோபாய சமூக ஒருமைப்பாட்டு ஆரம்ப முயற்சிகள் (CSR) மூலமாக தேசிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் கூட்டாண்மைச் சமூகப் பொறுப்புஆரம்ப முயற்சிகளை நடைமுறைப்படுத்தல்.
- சமூகத்தில் மிகவும் அவசியமான பிரிவுகளை மேம்படுத்தல்.
- அலுவலர்களுக்கு நிலைபேறான தன்மையின் பெறுமதிகளை உள்ளக ரீதியாகப் போதித்தல்.
- நிலைபேறான தன்மையின் பெறுமதிகளை வெளிவாரியாகப் போதித்தல்.
- வழங்குநர் உறவுகளையும் நம்பிக்கை வாய்ந்த வழங்குநர் ஒப்பந்தங்களையும் ஆரோக்கியமான நிலையில் பேணுதல்.
- முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூக இடர் முகாமைத்துவ முறைமை (ESMS) மூலமான சுற்றுச்சூழல் மற்றும் சமூக இடர் முகாமைத்துவம்.
- வர்த்தக நடவடிக்கைகளில் மனிதவள (HR) கொள்கைகளைப் பின்பற்றுதல்.
- அனைவருக்குமான நிதி உதவி.
- முறையான நிதியீட்டினை ஊக்குவித்தல்.
- பசுமைப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல்.
- நிலைபேறாண்மைப் பிரச்சினைகள் தொடர்பில் சகாக்களுடன் போட்டி நிலைமைகள் அற்ற கூட்டுறவை மேம்படுத்தல்.
- வெளிப்படைத் தன்மையும் பொறுப்புக் கூறலும்
Management Approach
இலங்கை வங்கியின் நிலைபேறான வியாபார நடவடிக்கைகளுக்கான முகாமைத்துவ அணுகுமுறை எனும் போது அதில் கூட்டாண்மை விழுமியங்கள், பங்கீடுபாட்டாளரின் ஈடுபாடு, தாக்கங்கள், இடர்கள், வாய்ப்புகள் என்பவற்றை இனங்காணல், காப்பீட்டுக் கொள்கை, முகாமைத்துவமும் ஆளுகையும், முகாமைத்துவமும் வெளிப்படுத்துகையும் எனப் பல விடயங்கள் உள்ளடங்கும்.
பொதுமக்களுக்கு / சமூகத்துக்குச் சேவையாற்றும் வங்கியின் தொழிற்பாட்டுத் தத்துவங்களே கூட்டாண்மை விழுமியங்களாகும். வங்கி தனது பணிச் சூழலில் எவ்வாறு பங்கீடுபாட்டாளர்களுடன் இணைந்து செயற்படுகிறது என்பதைத் தீர்மானிப்பது பங்கீடுபாட்டாளர் ஈடுபாடாகும். வங்கி முகங் கொடுக்கும் இடர்களையும் வாய்ப்புகளையும் பகுப்பாய்வு செய்து இடர்களைத் தணிப்பதற்கு தாக்கங்கள், இடர்கள், வாய்ப்புகளை இனங்காண்பது இன்றியமையாதது ஆகும்.
ஒரு பெருநிறுவனப் பிரஜை என்ற வகையில் பொறுப்புக்கூறலை நடைமுறைப்படுத்துவதற்கான வங்கியின் ஈடுபாட்டுறுதியைக் கட்டமைக்கும் செயன்முறையை வழங்குவது காப்பீட்டுக் கொள்கையாகும். முகாமைத்துவமும் ஆளுகையும் வங்கி தனது பங்கீடுபாட்டாளர்களின் பொருட்டு நல்லாட்சி, முகாமைத்துவம் என்பவற்றுக்கான பொறுப்புக்கூறலைப் பேணுவதற்கு வழிவகுக்கின்றன. இறுதியாக முகாமைத்துவமும் வெளிப்படுத்துகையும் வங்கியின் செயற்பாடுகள், முகாமைத்துவம், தகவல்கள் பற்றிய வெளிப்படைத்தன்மையை பங்கீடுபாட்டாளர்களுக்கு வழங்குகின்றன.
சுருங்கக் கூறின், வங்கி தனது பணிச் சூழலில் நிலைபேறானதும் பொறுப்புக்கூறுவதும் பொறுப்புணர்வு மிக்கதுமான வியாபாரத்தை முன்னெடுப்பதை இலங்கை வங்கியின் நிலைபேறாண்மை பிரதிபலிக்கிறது எனலாம்.
நிலைபேறான வர்த்தகம்
பொருளாதார நிலைபேறாண்மை
வங்கியினது நிலைபேறாண்மை அணுகுமுறையின் மிகவும் உன்னத அம்சமாக விளங்குவது யாதெனில் தேசிய பொருளாதாரத்தில் செயற்பாடுகள், பொருட்கள் / சேவைகள் மற்றும் வாடிக்கையாளருடனான உறவு என்பவற்றின் தாக்கத்தை முகாமை செய்தல் ஆகும். இலங்கை வங்கியானது அதன் அனைத்து செயற்பாடுகளிலும் உயரிய உண்மைத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிசெய்கின்ற அதேவேளை வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பினை நியாயமாகவும் பொறுப்பார்ந்த விதத்திலும் நிறைவேற்றுவதனையும் உறுதி செய்கின்றது.
மூலோபாய ஆரம்ப முயற்சிகள் - பொருளாதாரம்
- அனைவருக்குமான நிதி உதவி
- அரசாங்கத்துக்கான அரசிறைப் பங்களிப்பு
- பெரியளவான அரச உட்கட்டமைப்பு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு நிதியளித்தலின் மூலம் தேசிய அபிவிருத்தியின் ஆரம்ப முயற்சியின் பங்காளராக இருத்தல்.
சூழல்சார் நிலைபேறாண்மை
நிலைபேறாண்மை நிகழ்ச்சி நிரலின் முக்கிய கூறாக விளங்குவது யாதெனில் வங்கியானது அதனது நேரடி மற்றும் மறைமுகமான சூழல்சார் தாக்கம் குறைக்கப்படுதல் அல்லது இல்லாமற் செய்யப்படுதலை நிச்சயப்படுத்துவதாகிய சூழல் ஆகும்.
பசுமை வங்கிச் செயன்முறையின் ஊடாக வணிக செயற்பாடுகளின் காபன் அடிச்சுவட்டை இழிவளவாக்குதல்.
- சூழல்சார் அறிவை அதிகரித்தல்
- புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் பாவனையை ஊக்குவித்தல்
- சூழற் பாதுகாப்பு
முக்கிய விடயங்களை அடையாளங்கண்டு முன்னுரிமையளிக்கும் செயன்முறை
நீண்ட கால மற்றும் குறுகிய காலத்தில் ஏற்படும் பாதிப்பின் அளவினைக் கண்டறிந்து வங்கிக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் இடர்களைத் தணிக்க மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமான விடயமாகும். வங்கியின் பிரதான பொருண்மிய விடயங்களையும் வங்கியுடனும் பங்குதாரர்களுடனும் தொடர்புடையதான ஆபத்துக்கள் தொடர்புடையதான தாக்கம் என்பவற்றையும் மதிப்பாய்வு செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் விரிவான பகுப்பாய்வு நடாத்தப்படுகின்றது. அத்தகைய பிரதான பொருண்மிய விடயங்களானவை பொருளாதாரம், சூழல் மற்றும் சமூகம் என்பவற்றை உள்ளடக்கியதாக தெரிவு செய்யப்படுகின்றது.
பின்வரும் படிமுறையானது தாக்கங்களினது அடையாளப்படுத்துகை, வங்கியை நோக்கியதான அபாயங்கள் மற்றும் பங்குதாரர்களின் தீர்மானங்களின் மீதான அதனது செல்வாக்கு என்பவற்றைத் தீர்மானிக்கின்றது. ஒவ்வொரு வருடமும் வங்கியின் வருடாந்த அறிக்கை அல்லது அதன் இணையத்தளத்தின் ஊடாக அன்றேல் அவை இரண்டின் மூலமாக பொது மக்களுக்கு அடையாளங் காணப்பட்ட ஆபத்தினை அடிப்படையாகக் கொண்டு வங்கி மற்றும் பங்குதாரர்கள் மீதான பொருண்மிய விடயங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் என்பன வெளிப்படுத்தப்படுகின்றன. தாக்கங்கள் மற்றும் இடர் பகுப்பாய்வுகள் என்பவற்றுக்கிணங்க இனங்காணப்பட்ட இடர்களையும் தாக்கங்களையும் தணிக்கும் பொருட்டு அவை நிலைபேறாண்மைக் குழு உறுப்பினர்களிடையே இந்த கொள்கையின் மீதான அவர்களின் பொறுப்பின் கீழ் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அத்தகைய பொறுப்புக்கள் அவர்களது செயற்றிட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் மேலும் கொள்கையில் இனங்காணப்பட்டுள்ள அபாய மற்றம் தாக்க பரப்புக்களை குறிப்பிடுவதற்கு உரிய அலகுகளின் கீழுள்ள விருத்திசார் இலக்குகள், உபாயங்கள் மற்றும் செயற்றிட்ட விடயங்கள் என்பவற்றின் விதிமுறை சார்ந்த வங்கியின் கூட்டாண்மைத் திட்டத்தில் அனைத்து செயற்பாட்டு திட்டங்களும் இணைந்து காணப்படுகின்றன.
- வங்கியின் மதிப்புருவாக்கச் செயன்முறையுடன் தொடர்புடையதான சிக்கல்களை இனங்காணல்
- குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலப் பகுதியில் மதிப்பை உருவாக்க வங்கிக்குள்ள ஆற்றல் மீதான தாக்கங்களை இனங்காணல்
1. நிகழ்வதற்கான வாய்ப்பு
2. அங்ஙனம் நிகழ்ந்தால் அந்நிகழ்வின் தாக்கம்
என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இனங்காணப்பட்ட பிரச்சினைகளின் முக்கியத்துவத்தைத் தீர்மானித்தல்.
வங்கிக்கும் பங்குதாரர்களுக்குமான முக்கியத்துவத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படவுள்ள சிக்கல்கள்
முன்னுரிமைச் செயன்முறையினது விளைவினை அடிப்படையாகக் கொண்டு அறிக்கையிடப்பட வேண்டிய விடயங்கள்
முக்கியமான விடயங்கள்
பங்கீடுபாட்டாளர்கள் குழு | தொடர்புடைய முக்கிய விடயம் | தொடர்புடைய முக்கிய விடயம் | ESG வழிகாட்டல் CSE |
|---|---|---|---|
ஊழியர்கள் | 1.திறன் முகாமைத்துவம்
2.தொழிற்றுறை அமைதியும் தொழிலாளர் முகாமைத்துவ தொடர்புகளும்
3.பல்வகைமையும் சம வாய்ப்பும் | GRI 401: வேலைவாய்ப்பு GRI 402: தொழிலாளர் /முகாமைத்துவ தொடர்புகள் GRI 403: தொழில்சார் ஆரோக்கியமும் பாதுகாப்பும் GRI 404: பயிற்சியும் கல்வியும் GRI 405 : பல்வகைமையும் சம வாய்ப்ப்பும் GRI 406 : ஒன்றுதிரளும் சுதந்திரமும் கூட்டுப் பேரம்பேசலும்
| வேலைவாய்ப்பு
பயிற்சியும் கல்வியும்
தொழில்சார் ஆரோக்கியமும் பாதுகாப்பும்
ஊழியர் பல்வகைமையும் சமமாக நடாத்தப்படுதலும் |
வாடிக்கையாளர்கள்
| 1. வாடிக்கையாளர் அனுபவம் 2. வாடிக்கையாளர் இரகசியத் தன்மையும் தரவுப் பாதுகாப்பும் 3.பொறுப்புடைய வங்கி நடவடிக்கைகள்
| GRI 417 : சந்தைப்படுத்தலும் முத்திரையிடலும் GRI: வாடிக்கையாளர் இரகசியத் தன்மை |
|
அரசாங்கம்/ கட்டுப்பாட்டாளர்கள்
|
1. நிதிசார் செயலாக்கம் 2. சமூக பொருளாதார பங்களிப்பு 3. அனைவருக்குமான நிதியுதவிகள் 4. ஆளுகையும் இணக்கமும் | GRI 201: பொருளாதார செயலாற்றுகை GRI 202: சந்தை இருப்பு GRI 413: உள்நாட்டு சமூகங்கள் GRI 203: மறைமுக பொருளாதார தாக்கங்கள் GRI 419: சமூக பொருளாதார இணக்கம் GRI 307: சூழல்சார் இணக்கம் | இணக்கம்
|
வியாபாரப் பங்காளர்கள்
| 1.பொறுப்புடைய பெறுகை 2.இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு 3.தொழிலாளர் உரிமைகள் (வெளிவாரி மற்றும் ஒப்பந்தம்)
| GRI 204: பெறுகை நடவடிக்கைகள் GRI 205: ஊழல் எதிர்ப்பு GRI 406: பாகுபாடின்மை GRI 408: குழந்தைத் தொழிலாளர் GRI 409: நிர்ப்பந்தத்தின்/ கட்டாயத்தின்பேரிலான தொழில் |
|
ஏனைய காரணிகள்
| 1.டிஜிட்டல் மயப்படுத்தலும் தொழினுட்பமும் 2.சூழல்சார் தடம் 3. வணிக நாமத்தின் நன்மதிப்பு | GRI 302: சக்தி GRI 305: வெளியேற்றங்கள் | சக்தியின் தீவிரத் தன்மை
நேரடியானதும் மறைமுகமானதுமான வெளியேற்றங்கள் |
முக்கியமான பிரச்சினைகள்
முக்கியமான விடயங்கள்
முக்கியமான விடயங்கள்
பங்கீடுபாட்டாளர் குழு | தொடர்புடைய முக்கியமான விடயம் | ஏன் அது எமக்கு முக்கியமானது | குறித்த ஆண்டில் அம்முக்கிய விடயம் தொடர்பில் நாம் ஆற்றிய எதிர்வினை | முக்கியத்துவத்தில் மாற்றம் | உரிய அறிக்கையிடல் தர நிர்ணயம் (வர்த்தக வங்கிகளுக்கான GRI,CSESLE, ESG,வழிகாட்டி SASB) | ஐ.நா.சபையின் நி.அ.இலக்குகளுக்கான பங்களிப்பு |
|---|---|---|---|---|---|---|
வாடிக்கையாளர் | 1. வாடிக்கையாளர் ஆதரவும் வியாபாரப் புத்துயிர்ப்பும் | கடன் வசதிகளை மறுசீரமைப்பதன் / மீள கட்டமைத்தல் பணப்பாய்ச்சலை கண்காணித்தல் மற்றும் நிதியுதவிகளை வழங்கல் என்பவற்றினூடாக வியாபாரங்களுக்குப் புத்துயிரூட்டி நாட்டின் பொருளாதார மீட்சிக்கு முன்னின்றுழைத்தது வங்கி. | பார்க்க: வங்கித் தயாரிப்புகள் பற்றிய மதிப்பாய்வு
பயன்பெறு பங்கீடுபாட்டாளர்: வாடிக்கையாளர் | - | SASB FN- CB-240A.1: அனைவருக்குமான நிதி வாய்ப்பும் திறன் விருத்தியும்
SASB FN- CB-240A.2: அனைவருக்குமான நிதி வாய்ப்பும் திறன் விருத்தியும் | SDG 09 |
| 2. வாடிக்கையாளர் அனுபவம் | இலங்கை வங்கித்துறையில் தீவிர போட்டி நிலவும் சூழலில் வாடிக்கையாளர் சேவை என்பது வேறுபடுத்திக் காட்டும் முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளது. | பார்க்க: வங்கித் தயாரிப்புகள் பற்றிய மதிப்பாய்வு
பயன்பெறு பங்கீடுபாட்டாளர்: வாடிக்கையாளர் |
|
| SDG 02 |
| 3. வாடிக்கையாளர் இரகசியம் பேணலும் தரவுப் பாதுகாப்பும் | அதிகரித்துவரும் டிஜிட்டல் மயமாக்கம் வாடிக்கையாளர் இரகசியத் தன்மைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக மாறியிருப்பதால் நிறுவனங்கள் தமது தகவற் தொழினுட்பக் கட்டமைப்பைப் பலப்படுத்தவேண்டிய தேவை எழுந்துள்ளது. | பார்க்க: வங்கித் தயாரிப்புகள் பற்றிய மதிப்பாய்வு
பயன்பெறு பங்கீடுபாட்டாளர்: வாடிக்கையாளர் |
| GRI 418: வாடிக்கையாளர் இரகசியம் பேணல்
SASB FN-CB-230a.2: தரவுப் பாதுகாப்பு |
|
| 4. பொறுப்புமிக்க வங்கிச்சேவை | காத்திரமான சமூக – பொருளாதார மாற்றத்தை நோக்கிச் செல்வதற்கான இலங்கை வங்கியின் ஆற்றலுக்கு உறுதுணை வழங்கும் பொறுப்புமிக்க கடன்வழங்கல் செயற்பாடுகள். | பார்க்க: வங்கித் தயாரிப்புகள் பற்றிய மதிப்பாய்வு
பயன்பெறு பங்கீடுபாட்டாளர்: வாடிக்கையாளர், சமூகம், சுற்றுச்சூழல் |
|
|
|
| 5. டிஜிட்டல் மயமாக்கலும் தொழினுட்பமும் | டிஜிட்டல் தொழினுட்பத்தில் உச்சந் தொடுவது வங்கியின் மூலோபாய அபிலாசையாகும் | பார்க்க: வங்கித் தயாரிப்புகள் பற்றிய மதிப்பாய்வு
பயன்பெறு பங்கீடுபாட்டாளர்: வாடிக்கையாளர் |
| GRI 405 : பல்வகைமையும் சம வாய்ப்பும் |
|
| 6. ஊழியர்ஆரோக்கியமும் பாதுகாப்பும் | பெருந்தொற்று முடிவுக்கு வந்த 2022ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் ஊழியகளின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் கருத்திற் கொள்ளப்பட்டன. பொருளாதார நெருக்கடி மிகுந்த அக்காலகட்டத்தில் ஊழியர் நலன் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. | பார்க்க:
பயன்பெறு பங்கீடுபாட்டாளர்: ஊழியர் |
| GRI 403: தொழில்சார் சுகாதாரமும் பாதுகாப்பும் | SDG 05 |
| 7. திறன் முகாமைத்துவமும் தொழிற் தொடர்புகளும் | பெருநிறுவன மூலோபாயங்களைச் செயற்படுத்துவதில் ஊழியர்களின் பங்கு அளப்பரியது என்பதோடு அவர்கள் வங்கியின் பெறுமதிக்கசொத்தாவர்.ஆகையால் ஊழியர் தெடர்பான விடயங்களைத் திறம்பட முகாமைசெய்வதன் முக்கியத்துவத்தை வங்கி வலியுறுத்துகிறது. | பார்க்க:
பயன்பெறு பங்கீடுபாட்டாளர்: ஊழியர் |
| GRI 401: வேலைவாய்ப்பு GRI 402: தொழிலாளர்/ முகாமைத்துவ தொடர்புகள் GRI 404: பயிற்சியும் கல்வியும் GRI 407: ஒன்றுகூடும் சுதந்திரமும் கூட்டுப் பேரம்பேசலும்
|
|
| 8. பல்வகைத் தன்மையும் சம வாய்ப்பும் | ஊழியர்களின் செழிப்பான எதிர்பாலத்தின் பொருட்டு பல்வகைத்தன்மையும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஊழியர் படையை உருவாக்குவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது. | பார்க்க:
பயன்பெறு பங்கீடுபாட்டாளர்: ஊழியர் |
| GRI 405: பல்வகைத் தன்மையும் சமவாய்ப்பும் |
|
| 9. தொழிலாளர் உரிமைகள் (வெ ளிவாரி / ஒப்பந்தம்) | வங்கியில் பணிபுரியும் அனைத்து வெ ளிவாரி, ஒப்பந்த ஊழியர்களுக்கும் பாதுகாப்பான உகந்த சூழலை வழங்குவதில் வங்கி ஈடுபாட்டுறுதி கொண்டுள்ளது. | பார்க்க: தொழிற்படு சூழமைவு PESTEL பகுப்பாய்வு
பயன்பெறு பங்கீடுபாட்டாளர்: சமூகமும் சுற்றுச்சூழலும் |
| GRI 408:குழந்தைத் தொழிலாளர் GRI 409:நிர்ப்பந்திக்கப்பட்ட அல்லாது கட்டாய தொழில் |
|
| 10. பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளும் கொள்கைச் சென்னெறியும் | இலங்கைப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் பல்தரப்பட்ட பிரச்சினைகளும் அவற்றுடன் தொடர்புபட்ட கொள்கை வகுப்புச் செயற்பாடுகளும் நிதித்துறையின் செயற்பாடுகளிலும் நிலைபேறாண்மையிலும் நேரடியாகத் தாக்கம் செலுத்துகின்றன.
| பார்க்க:
பயன்பெறு பங்கீடுபாட்டாளர்: சமூகமும் சுற்றுச்சூழலும் |
|
| SDG 07 |
| 11. காலநிலை மாற்றமும் சுற்றுச்சூழல் மீதான தாக்கமும் | இலங்கை வங்கியானது பசுமைக் கடன்களினூடாக நிலைபேறாண்மைச் செயற்பாடுகளை ஊக்குவித்தவாறே அதன் செயற்பாடுகளின் சூழல் மீதான தாக்கத்தைக் குறைப்பதிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. | பார்க்க: வங்கித் தயாரிப்புகள் பற்றிய மதிப்பாய்வு
பயன்பெறு பங்கீடுபாட்டாளர்: வாடிக்கையாளர் |
| GRI 302 : சக்தி GRI 305 : வெளியேற்றங்கள் கடன் பகுப்பாய்வில் காரணிகளை உள்ளடக்கல்
| SDG 03 |
| 12. வணிக நாமத்தின் நன்மதிப்பு | தொடர்ச்சியாக முதற்தர வங்கியாகத் தரப்படுத்தப்பட்டுவரும் இலங்கை வங்கி என்ற வணிக நாமம் வங்கியைத் தொர்ந்தும் சந்தையில் முன்னிலையில் வைத்திருக்கிறது. | பார்க்க: வங்கித் தயாரிப்புகள் பற்றிய மதிப்பாய்வு
பயன்பெறு பங்கீடுபாட்டாளர்: வாடிக்கையாளர் |
|
| SDG 06 |
| 13. நிதிச் செயலாற்றுகை | வணிகரீதியான நிலைபேறாண்மையையும் பங்கீடுபாட்டாளர்களுக்கான தொடர்ச்சியான மதிப்புருவாக்கத்தையும் உறுதிசெய்வதற்கு முக்கியத்துவம் | பார்க்க: நிதி மதிப்பாய்வு வங்கித் தயாரிப்புகள் பற்றிய மதிப்பாய்வு
பயன்பெறு பங்கீடுபாட்டாளர்: பங்கீடுபாட்டாளரும் நிதி வழங்குநர்களும் |
|
| SDG 12 |
| 14. சமூக – பொருளாதார பங்களிப்பும் அனைவருக்குமான நிதியுதவியும் | அரச வங்கி என்ற முறையில் இலங்கை வங்கி தனது வழமையான வங்கிச் செயற்பாடுகளுக்கு அப்பால் நாடு முழுவதும் அனைவருக்குமான நிதியுதவிகளையும் சமூக – பொருளாதார வலுவூட்டலையும் உறுதி செய்கின்றது. | பார்க்க:
பயன்பெறு பங்கீடுபாட்டாளர்: சமூகமும் சுற்றுச்சூழலும் |
| GRI 201: பொருளாதார செயலாற்றுகை GRI 202: சந்தை இருப்பு GRI 413: உள்ளுர் சமூகங்கள் GRI 203: மறைமுக பொருளாதாரத் தாக்கங்கள் SASB N-CB-240A.3. நிதிசார் உள்ளடக்கமும் திறன் விருத்தியும் SASB N- CB-240a. 4: நிதிசார் உள்ளடக்கமும் திறன் விருத்தியும்
| SDG 01 |
| 15. கட்டுப்பாட்டுச் சூழல், நிர்வாகம் மற்றும் இணக்கம் | வலுவான இணக்க்க் கலாச்சாரமும் கூட்டாண்மை நிர்வாகச் செயற்பாடுகளும் இலங்கை வங்கியின் மதிப்புருவாக்கச் செயன்முறைக்கு உறுதுணையாக விளங்குகின்றன. | பார்க்க: தொழிற்பாட்டுச் சூழமைவு பகுப்பாய்வு கூட்டாண்மை நிர்வாக அறிக்கை இடர் முகாமைத்துவ அறிக்கை
பயன்பெறு பங்கீடுபாட்டாளர்: கட்டுப்பாட்டாளர்கள் |
| GRI 207: வரி GRI 419: சமூக – பொருளாதார இணக்கம் GRI 307: சூழல்சார் இணக்கம் |
|
| 16. பொறுப்புவாய்ந்த பெறுகை நடவடிக்கை | இலங்கை வங்கியானது பெருமளவான வழங்குநர்களுடன் வியாபாரத்தில் ஈடுபடுவதுடன் நிலைபேறான செயற்பாடுகளை ஊக்குவிப்பதனூடாக பெறுகைகளில் பொறுப்புமிக்க செயற்பாடுகளை உறுதிசெய்கிறது. | பார்க்க: பயன்பெறு
பங்கீடுபாட்டாளர்: வியாபாரப் பங்காளர்கள் |
| GRI 204: பெறுகைச் செயற்பாடுகள்
| SDG 11 |
| 17. இலஞ்ச, ஊழல் ஒழிப்பு | அரச வங்கி என்ற வகையில் பொறுப்புமிக்க கூட்டு மதிப்புருவாக்கத்தில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு கலாசாரத்தை வளர்த்தெடுப்பது இன்றியமையாதது ஆகும். | பார்க்க: கூட்டாண்மை நிர்வாக அறிக்கை உட்பொதிந்த நிலைபேறாண்மை
பயன்பெறு பங்கீடுபாட்டாளர்: வியாபாரப் பங்காளர்கள் |
| GRI 205: ஊழல் ஒழிப்பு GRI 406: பாகுபாடின்மை SASB FN-CB-510a.2: வியாபார அறங்கள் |
|
கட்டமைப்பு
Framework
கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு ஊடான நிலைபேற்றிற்கான இலங்கை வங்கியின் அணுகு முறையானது சிறந்த நடவடிக்கைகளின் மீது கட்டியெழுப்பப்படுகின்றது. வங்கியினது நிலைபேறான ஆளுகையின் உயர் மட்டத்தை பணிப்பாளர் குழு கொண்டுள்ளது. அதனடிப்படையில் குழுவானது நிலைபேறாண்மைக் குழுவின் நிறுவுகை மற்றும் கீழே தரப்பட்ட கட்டமைப்பு என்பவற்றை அங்கீகரித்துள்ளது.
நிலைபேறாண்மைக் குழு
வங்கியின் நிலைபேறாண்மைக் குழு
நிலைபேறாண்மைக் குழுவின் பிரதான நோக்கம் யாதெனில் ஓர் சூழல்சார் பொறுப்புடையதும் சமூக ஒப்புரவானதும் பொருளாதார பலம்கொண்டதுமான வகையில் வணிகத்தினை செயற்படுத்துவதன் மூலம் பொறுப்புமிக்க நிறுவன பிரஜையாக மிளிரும் இலக்குடன் அனைத்து பிரதான வணிக தீர்மானங்கள் செயன்முறைகள், முன்னெடுப்புகள் என்பவற்றுடன் நிலைபேறாண்மை ஒருங்கிணைக்கப்படுவதனை உறுதிப்படுத்தலாகும். குழுவானது எமது பங்குதாரர்களுக்கு பெறுமதியை வழங்கும் எமது நிறுவனத்தின் ஊடாக நிலைபேறாண்மைத் தத்துவங்களினை மதிப்பட்டு, அபிவிருத்திசெய்து, மேம்படுத்தி, நடைமுறைப்படுத்தி மேற்பார்வை செய்கின்றது.
நிலைபேறாண்மைக் குழுவின் கட்டமைப்பு
பணிப்பாளர் சபையானது பொது முகாமையாளரைத் (நிலைபேறாண்மைக் குழுவின் தலைவர்) தலைமையாக கொண்ட வங்கியின் நிலைபேறாண்மைக் குழுவின் ஊடாக வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நிலைபேறாண்மைக் கொள்கையை நேர்த்தியாக மேற்பார்வை செய்து கண்காணிக்கின்றது.

வங்கியின் நிலைபேறாண்மை அலகு
வங்கியினது அனைத்து நிலைபேறாண்மை அம்சங்கள் மற்றும் கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு முன்னெடுப்புகள் என்பவற்றை செயற்படுத்துகின்றதும் ஒருங்கிணைப்பதுமான வங்கியின் நிலைபேறாண்மை அலகினுடைய முக்கிய செயற்பாடுகள் வருமாறு.
🌿
நிலைபேறாண்மைக் குழுவினது மூலோபாய தீர்மானங்கள் / பணிப்புரைகளை செயற்படுத்துதல்
🌿
வங்கியின் நிலைபேறாண்மை அறிக்கையினை மேம்படுத்துதலும் சீராக்குதலும்
🌿
வங்கியின் கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு செயற்றிட்டங்களை ஆரம்பிப்பதற்கு சந்தைப்படுத்தல் மற்றும் அது தொடர்பான ஏனைய பிரிவுகளுடன் ஒருங்கிணைந்து செயற்படல்
🌿
மாகாணங்களுடனும் பிரிவுகளுடனும் ஒருங்கிணைந்து கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு முன்னெடுப்புகளை ஆரம்பித்து அத்தகு முன்னெடுப்புகளை இயக்கி மேற்பார்வை செய்தல்
🌿
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நீண்ட கால கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு செயற்றிட்டங்களுடன் பங்காளராகச் செயற்பட பெறப்படுகின்ற முன்மொழிவுகளை ஒருங்கிணைத்துச் செயற்படுத்தல்
🌿
வங்கியின் நிலைபேறாண்மைத் தடத்தை முன்னேற்றுவதற்கு நிலைபேறாண்மைக் குழுவிற்கு செயற்றிட்டங்கள் மற்றும் ஆரம்ப முயற்சிகளை பரிந்துரை செய்தல்
🌿
வெளிவாரி நிபுணர்களுடன் முழுமூச்சுடன் இணைந்து செயற்படல் / நிலைபேறாண்மை தொடர்பான தொழிற்றுறைக் கூட்டங்களில் வங்கியைப் பிரதிநிதித்துவம் செய்தல்
சமூக நிலைபேறாண்மை
இலங்கை வங்கியானது மக்களின் ஓர் செயற்படுத்துனராக அதனது பரந்த வகிபங்கில் கவனம் செலுத்துகிறது. இந்நோக்கெல்லையில் இலங்கை வங்கியானது எமது உயர்தர மரபுரிமை மற்றும் புராதன கலாசாரம் என்பவற்றுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கி ஒவ்வொரு நபரினதும் நல்வாழ்வினை உறுதிப்படுத்தியவாறே கல்வி, முயற்சியாண்மையை ஊக்குவித்தல், வாழ்வாதார அபிவிருத்தி முதலான விடயங்களின் ஊடாக மக்களுக்கான தனது உதவியை வழங்குகின்றது.
பின்வரும் துறைகளில் மூலோபாய கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு முன்னெடுப்புகள்
தொண்டுசார் கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு முன்னெடுப்புகள்
ஊழியருடான உறவு