இந்த வைப்பானது அதிக அளவு உபரிப் பணத்தைக் கொண்ட வியாபாரங்களுக்கு உகந்தது. 7 நாள் கணக்கு நீண்ட கால நிலையான வைப்புக் கணக்குகளில் நிதியை முதலீடு செய்வதற்கான மாற்றீடாகும். இந்தக் கணக்கு சாதாரண சேமிப்புக் கணக்குகளைக் காட்டிலும் அதிக வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளதோடு வாடிக்கையாளரால் 7 நாள் முன்னறிவித்தல் வழங்கப்படுமிடத்து பணம் மீளப்பெறுவதற்கான நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகிறது.
முக்கிய அம்சங்கள்
- குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூபாய் 100,000.00
- குறைந்தபட்ச காலம் 7 நாட்கள் (அதிகபட்ச காலம் இல்லை)
- கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் (ரூபாய் வைப்பு விகிதங்களைப் பார்க்கவும்)
- கணக்கு வைத்திருப்பவராக இருக்க வேண்டிய அவசியமில்லை
- எவரையேனும் பெயர் நியமனம் செய்யலாம்
- வைப்பிற்கு எதிராக உடனடிக் கடன், மேலதிகப் பற்று என்பவற்றை எளிதாகப் பெறலாம்
- முதிர்வுத் திகதி எதுவும் இல்லை என்பதோடு வைப்பாளர் 7 நாட்காட்டி தினங்களுக்கு முன்னர் எழுத்துப்பூர்வ அறிவித்தல் ஒன்றை வழங்கி பணத்தை மீளப் பெறலாம்
* நிபந்தனைகளுக்கு உட்பட்டது

