ரண் கெகுளு SMART
நாளை பெரியவர்களாகும் புத்திசாலியான குழந்தைகளுக்கு
- சாதாரண சேமிப்பு கணக்குகளை விட அதிக வட்டி விகிதம்
- கணக்குரிமையாளருக்கு மருத்துவக் காப்புறுதி
- கணக்குத் திறக்கும் பெற்றோர் / பாதுகாவலருக்கான ஆயுட் காப்புறுதி
- தரம் 5 புலமைப்பரிசில் வெற்றியாளர்களுக்குப் புலமைப்பரிசில்கள்
- பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மின்னணு அட்டை
- கணக்கு மீதிகள் மற்றும் பரிவர்த்தனைகளைக் காண ஸ்மாட் பாஸ்புக் வசதி
- இலவச SMS அறிவுறுத்தல்கள்
*இந்த நன்மைகள் வங்கியால் அவ்வப்போது குறிப்பிடப்படும் குறித்தவொரு காலத்திற்கு மட்டும் வழங்கப்படும்.
தகுதிகள்
- 18 வயதுக்குட்பட்ட இலங்கையில் வசிக்கும் எந்தவொரு பிள்ளைக்கும் பெற்றோர் / பாதுகாவலர் கணக்கைத் திறக்க முடியும்
- அறிபருவச் சிறுவர்கள் (16 தொடக்கம் 18 வயது வரை) பெற்றோர் / பாதுகாவலர் கையொப்பம் இல்லாமற்கூட தமக்கான கணக்கொன்றைத் திறக்க முடியும்.
நன்மைகள்
- அதிக வட்டி விகிதம் சாதாரண சேமிப்புக் கணக்கை விட 1.5% அதிக வட்டி விகிதம் கிடைக்கும் (குறைந்தபட்ச வட்டி மாதம் ரூ.5 என்பதோடு வட்டி வீதம் காலத்துக்குக் காலம் மாறக்கூடும்)
- ரண் கெகுளு ஸ்மார்ட் காப்புறுதித் திட்டம்
- கணக்குரிமையாளருக்கு அறுவைச் சிகிச்சை மற்றும் மருத்துவமனை அனுமதிக்கான காப்புறுதி
- விபத்துக்கள் மற்றும் 12 வரையறுக்கப்பட்ட கடுமையான நோய்கள் காரணமாக மருத்துவமனையில் சேர்க்க்கப்பட்டால் காப்புறுதி
- வருடத்திற்கு ரூ.150,000/- வரை நன்மைகள்
- சம்பவம் இடம்பெறும்போது, குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு ஆகக்குறைந்தது ரூ.5000 மிகுதியை கணக்கில் தொடர்ந்து பேணியிருக்க வேண்டும். கணக்கு மிகுதி அடிப்படையில் அதிக நன்மைகள் கிடைக்கும்.
ஒரு இரவு உட்பட குறைந்தபட்சம் 24 மணிநேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
- கணக்கைத் தொடங்கிய தந்தை/ தாய் / பாதுகாவலர் இறக்குமிடத்தும் (இயற்கை /விபத்து) நிரந்தர உடற்பாதிப்புக்கு உட்படுமிடத்தும் (விபத்துகள் காரணமாக) காப்புறுதி வழங்கப்படும்
- அதிகபட்சமாக ரூ.2 மில்லியன் காப்பீட்டுத் தொகை
- சம்பவம் இடம்பெறும்போது, குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு ஆகக்குறைந்தது ரூ.5000 மிகுதியை கணக்கில் தொடர்ந்து பேணியிருக்க வேண்டும். கணக்கு மிகுதி அடிப்படையில் அதிக நன்மைகள் கிடைக்கும்.
- கணக்கைத் திறக்கும் பெற்றோர் / பாதுகாவலர், அவர்களால் திறக்கப்பட்ட ஆகக்கூடியது 03 கணக்குகளுக்கான பயன்களைப் பெறத் தகுதியுடையவராவர்.
விதிகளும் நிபந்தனைகளும் - - காப்புறுதிப் பயன்கள் 31.12.2023 வரை செல்லுபடியாகும்
- வழங்கப்படும் நன்மைகள் அவ்வப்போது மாறுபடலாம்
- காப்புறுதிப் பயன்களைப் பெறுவதற்கு வங்கி / காப்புறுதி நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட தகுதித் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யப்பட வேண்டும்
- உரிமைகோரலின் போது பெற்றோர் / பாதுகாவலர் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
- உரிமைகோரலின் போது கணக்கு வைத்திருப்பவர் 18 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
- காப்புறுதி நிறுவனத்தால் உரிமைகோரல்கள் ஏற்கப்பட்டால் மட்டுமே இந்நன்மைகள் வழங்கப்படும் என்பதோடு சம்பவத்தின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து நன்மைத் தொகைகள் மாறுபடலாம்.
- ம்பவம் நடந்து 6 மாதங்களுக்குள் உரிமைகோரல்கள் வங்கியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- 5ஆம் தர புலலைமப்பரிசில் உதவித்தொகைத் திட்டம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஆகச்சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்க்கு 2000 புலமைப்பரிசில்கள் (15,000 ரூபாய் மதிப்புள்ளவை) வழங்கப்படும் .
விதிகளும் நிபந்தனைகளும் -
பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் திகதிக்கு ஒரு தினத்திற்கு முன்னதாக ரண் கெகுளு கணக்கில் குறைந்தபட்சம் ரூ.5000 மீதி இருத்தல் வேண்டும்.
நிபந்தனைகளுக்கு உட்பட்டது
ஆவணங்கள்
- பிள்ளையின் பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதியும் போட்டோப் பிரதியும் (மூலப் பிரதி வங்கியால் திருப்பித் தரப்படும்)
- பெற்றோர் / பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை அல்லது பிள்ளையின் அடையாள அட்டை (16 முதல் 18 வயது வரை)
- முகவரிச் சான்று (தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் வசிக்காவிடின்)
- முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம்
விதிகள் மற்றும் நிபந்தனைகள்
- கணக்குகளுக்காக வழங்கப்படும் எந்தவொரு நிபந்தனையையும் அல்லது வசதியையும் மாற்றும் திருத்தும் அல்லது புதியனவற்றைச் சேர்க்கும் உரிமையை இலங்கை வங்கி கொண்டுள்ளது.
* கணக்குரிமையாளர் 18 வயதை அடைந்த தும் கணக்கு தானாகவே இளைஞர் சேமிப்புக் கணக்காக மாறும்.
* நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
Download Application
Terms and Conditions
- தகுதியுடைய சிறுவர்கள் (16 முதல் 18 வயது வரை) தங்களுக்குத் தாங்களே கணக்கைத் தொடங்கலாம். 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கைத் தொடங்க வேண்டும்.
- கணக்குரிமையாளர் 18 வயதை அடையும்போது, அந்த வகைக் கணக்குகளுக்குப் பொருந்தக்கூடிய தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் திறனைப் பொறுத்து சேமிப்புக் கணக்கானது இளையோர் சேமிப்புக் கணக்காக/PFC கணக்காக மாற்றப்படும். இதனைச் செயற்படுத்துவதற்கு கணக்குரிமையாளர் கையொப்பமிட்ட புதிய விண்ணப்பப்படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- சிறுவர் 18 வயதை அடையும் வரை கணக்கிலிருந்து பணம் எடுக்கவோ கணக்கை மூடவோ அனுமதி வழங்கப்படமாட்டாது. ஆனால் கல்வி, மருத்துவ சிகிச்சை போன்ற சிறுவருக்கு நலன் பயக்கும் நோக்கங்களுக்கு வங்கியின் தற்றுணிபின் அடிப்படையில் மட்டும் பணம் எடுக்கவோ கணக்கை மூடவோ அனுமதிக்கப்படும்.
- உள்நாட்டு நாணய ரண் கெகுளு SMART கணக்கிற்கு வழங்கப்படும் காப்பீட்டுச் சலுகைகள் கணக்குதாரர் 18 வயதை அடையும் வரை செல்லுபடியாகும்.
- வங்கியானது இச்சேமிப்புக் கணக்குடன் தொடர்புடைய சலுகைகள், சிறப்புரிமைகள் மற்றும் வசதிகளை அல்லது அவற்றை வழங்குவதற்கான தகுதி அளவுகோல்களைத் திருத்துவதற்கு, இரத்துச் செய்வதற்கு அல்லது நிறுத்துவதற்கு வங்கிக்கு உரிமை உண்டு. இவை வங்கியின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும் என்பதோடு இத்திட்டத்தின் கீழ் புதிதாகத் தொடங்கப்படும் கணக்குகளுக்கு இத்திருத்தங்கள் பொருந்தும்.
- கணக்தின் சிறப்புச் சலுகைகளை (உதா: காப்பீடு, பரிசுத் திட்டம், உதவி போன்றவை) பெறுவதற்கு, கணக்குதாரர் கணக்கு மீதி/வைப்பு, வயது வரம்பு போன்ற வங்கியால் காலத்திற்குக் காலம் வெளியிடப்படும் அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
- SMS விழிப்பூட்டல்கள், SMART கணக்குப் புத்தகம் அல்லது பிற டிஜிட்டல் வசதிகள் என்பவற்றை வங்கி வழங்குவதால் ஏற்படும் இழப்பு, அறவீடு, வழக்கு, பணக் கோரிக்கை, செலவு அல்லது நட்டம் என்பவற்றால் வங்கி பாதிப்படையாத வண்ணம் வங்கியைக் காப்பதற்கு பெற்றோர்/பாதுகாவலர் வங்கிக்கு உறுதிமொழி வழங்க வேண்டும்.
- கணக்குரிமையாளர் மரணமடைந்தால், கணக்கில் உள்ள தொகையானது இலங்கையின் சட்டங்களின்படி கணக்குரிமையாளரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வழங்கப்படும்.

