இலங்கை வங்கியானது நம் நாட்டின் எதிர்காலச் சந்ததியினரை சூழலுக்கு இசைவான பசுமைத் திட்டங்கள் குறித்துச் சிந்திப்பதற்கு ஊக்குவிக்கும் நோக்கில் 6-18 வரையான வயதினர்க்கான ‘இலங்கை வங்கி ஹரித்த கெகுளு’ எனும் சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இக்கணக்கானது சூழலுக்கிசைவான அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் வைப்புகள் யாவும் பேண்தகு அபிவிருத்திக் கருத்திட்டங்களில் மாத்திரம் முதலிடப்படுகின்றன.

இலங்கை வங்கி ஹரித்த கெகுளு’ கணக்கை இன்றே தொடங்குவதன்மூலம் உங்கள் பிள்ளைகளுக்கு பொருளாதார வலுவும்  சூழற் பாதுகாப்புமிக்க எதிர்காலம் ஒன்றை அமைத்துக் கொடுத்திடுங்கள்.

அம்சங்கள்

  • சாதாரண சேமிப்பு கணக்குகளை விட 1.5% அதிக வட்டி விகிதம் 
  • கணக்குரிமையாளருக்கு மருத்துவக் காப்புறுதி 
  • கணக்குத் திறக்கும் பெற்றோர் / பாதுகாவலருக்கான ஆயுட் காப்புறுதி 
  • தரம் 5 புலமைப்பரிசில் வெற்றியாளர்களுக்குப் புலமைப்பரிசில்கள்
  • கணக்கு மீதிகள் மற்றும் பரிவர்த்தனைகளைக் காண மின்னணுக் கூற்றும் ஸ்மாட் பாஸ்புக் வசதியும்
  • இலவச SMS அறிவுறுத்தல்கள் 
    *இந்த நன்மைகள் வங்கியால் அவ்வப்போது குறிப்பிடப்படும் குறித்தவொரு காலத்திற்கு மட்டும் வழங்கப்படும்.
     
தகுதி

18 வயதுக்குட்பட்ட இலங்கையில் வசிக்கும் எந்தவொரு பிள்ளைக்கும்   பெற்றோர் / பாதுகாவலர் கணக்கைத் திறக்க முடியும். 
 

பிள்ளை 18 வயதை அடைந்ததும்

  • இக்கணக்கு தானாகவே பேண்தகு பொதுச் சேமிப்புக் கணக்காக மாறும்
  • கணக்குரிமையாளர் இக்கணக்கைத் தனக்குப் பிடித்த இன்னொரு கணக்கிற்கு மாற்றுவதற்கு தேசிய அடையாள அட்டையுடன் கிளைக்குச் சமூகமளிக்க வேண்டும்
     

விதிகளும் நிபந்தனைகளும்
 

  • கணக்குகளுக்காக வழங்கப்படும் எந்தவொரு நிபந்தனையையும் அல்லது வசதியையும்  மாற்றும் திருத்தும் அல்லது புதியனவற்றைச் சேர்க்கும் உரிமையை இலங்கை வங்கி கொண்டுள்ளது.
  • அண்மைத் தகவல்களையும் தற்போதுள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகளை அறிந்துகொள்ள அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளையை நாடவும் அல்லது 1975 ஊடாக அழைப்பு மையத்தை தொடர்புகொள்ளவும்
     
நன்மைகள்

அதிக வட்டி விகிதம்

  • சாதாரண சேமிப்புக் கணக்கை விட 1.5% அதிக வட்டி விகிதம் கிடைக்கும் (குறைந்தபட்ச வட்டி மாதம் ரூ.5)
  • வட்டி வீதம் காலத்துக்குக் காலம் மாறக்கூடும்.

காப்புறுதித் திட்டம்

  • கணக்குரிமையாளருக்கு அறுவைச் சிகிச்சை மருத்துவமனை அனுமதிக் காப்புறுதி
    • விபத்துக்கள் மற்றும் 12 வரையறுக்கப்பட்ட கடுமையான நோய்கள் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் காப்புறுதி 
    • வருடத்திற்கு ரூ.150,000/- வரை நன்மைகள்
    • சம்பவம் இடம்பெறும்போது, குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு ஆகக்குறைந்தது ரூ.5000 மிகுதியை கணக்கில் தொடர்ந்து பேணியிருக்க வேண்டும். கணக்கு மிகுதி அடிப்படையில் அதிக நன்மைகள் கிடைக்கும்.   
    • ஒரு இரவு உட்பட குறைந்தபட்சம் 24 மணிநேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
       
  • கணக்கைத் தொடங்கிய தந்தை/ தாய் / பாதுகாவலர் இறக்குமிடத்தும் (இயற்கை /விபத்து) நிரந்தர உடற்பாதிப்புக்கு உட்படுமிடத்தும் (விபத்துகள் காரணமாக) காப்புறுதி வழங்கப்படும்
    • அதிகபட்சமாக ரூ.2 மில்லியன் காப்பீட்டுத் தொகை
    • சம்பவம் இடம்பெறும்போது> குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு ஆகக்குறைந்தது ரூ.5000 மிகுதியை கணக்கில் தொடர்ந்து 
      பேணியிருக்க வேண்டும். கணக்கு மிகுதி அடிப்படையில் அதிக நன்மைகள் கிடைக்கும்.   
    • கணக்கைத் திறக்கும் பெற்றோர் / பாதுகாவலர்> அவர்களால் திறக்கப்பட்ட ஆகக்கூடியது 03 கணக்குகளுக்கான பயன்களைப் பெறத் தகுதியுடையவராவர்.
       

விதிகளும் நிபந்தனைகளும் 

  • கணக்கின் மூலம் கிட்டும் நன்மைகள் காலத்துக்குக் காலம் மாறுபடக்கூடும்
  • காப்புறுதிப் பயன்களைப் பெறுவதற்கு வங்கி / காப்புறுதி நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட தகுதித் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்
  • உரிமைகோரலின் போது பெற்றோர் / பாதுகாவலர் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
  • உரிமைகோரலின் போது கணக்கு வைத்திருப்பவர் 6 - 18 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
  • காப்புறுதி நிறுவனத்தால் உரிமைகோரல்கள் ஏற்கப்பட்டால் மட்டுமே இந்நன்மைகள் வழங்கப்படும் என்பதோடு சம்பவத்தின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து நன்மைத் தொகைகள் மாறுபடலாம். 
  • சம்பவம் நடந்து 6 மாதங்களுக்குள் உரிமைகோரல்கள் வங்கியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் மேலதிக விபரங்கள், பொருத்தமான விதிகள் மற்றும் நிபந்தனைகளை அறிந்துகொள்ள கிளையைத் தெடர்புகொள்ளவும்  

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது

5ஆம் தர புலலைமப்பரிசில் உதவித்தொகைத் திட்டம்

  • தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஆகச்சிறந்த பெறுபேறுகளைப் பெறும் கணக்குரிமையாளர்களுக்கு 15,000 ரூபாய்  புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்.
     

விதிகளும் நிபந்தனைகளும்:
பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் திகதிக்கு ஒரு தினத்திற்கு முன்னதாக ஹரித்த கெகுளு கணக்கில் குறைந்தபட்சம்  ரூ.5000 மீதி இருத்தல் வேண்டும்
 

Terms and Conditions
  1. இலங்கை வங்கி  ஹரித கெகுளு கணக்கானது 6 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர்களின் பெயரில் தொடங்கப்பட வேண்டும் என்பதோடு இவற்றுக்கு கூட்டுக் கணக்குகள் அனுமதிக்கப்படமாட்டா.
  2. இலங்கை வங்கி  ஹரித கெகுளு கணக்கில் நபர் எவரும் வைப்புகளை மேற்கொள்ளலாம்.
  3. கணக்கு முதிர்வின் போது கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கு பிறப்புச் சான்றிதழ்/தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  4. சிறுவர் 18 வயதை அடையும் வரை கணக்கிலிருந்து பணம் எடுக்கவோ கணக்கை மூடவோ அனுமதி வழங்கப்படமாட்டாது. ஆனால் கல்வி, மருத்துவ சிகிச்சை போன்ற சிறுவருக்கு நலன் பயக்கும் நோக்கங்களுக்கு வங்கியின் தற்றுணிபின் அடிப்படையில் மட்டும் பணம் எடுக்கவோ கணக்கை மூடவோ அனுமதிக்கப்படும்.
  5. கணக்குரிமையாளர் மரணமடைந்தால், கணக்கில் உள்ள தொகையானது இலங்கைச் சட்டங்களின்படி கணக்குரிமையாளரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வழங்கப்படும்.

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444