• 18+   இளைஞர் சேமிப்புக் கணக்கு என்பது பரந்தகன்ற வசதிகளுடன் இளைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சேமிப்புக் கணக்காகும். 
  • 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட எந்தவொரு இலங்கைப் பிரஜையும்  இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலும் இக்கணக்கினை ஆரம்பிக்க முடியும். 
  • கணக்கின் பயன்களை 35 வயது வரை அனுபவிக்கலாம்
  • தற்போதுள்ள ரண் கெகுளு மற்றும் 14+   கணக்குகள் 18 வயதில் தாமாகவே 18+  இளைஞர் சேமிப்புக் கணக்குகளாக மாறும்.
     
நன்மைகள்

அதிக வட்டி விகிதம்

  • சாதாரண சேமிப்புக் கணக்குகளைவிட 0.5% அதிக வட்டி வீதம் வழங்கப்படுகிறது


கணக்குரிமையாளருக்கு மருத்துவக் காப்புறுதி

  • விபத்து அல்லது 10 பாரிய நோய்களின் பொருட்டு ஆண்டுக்கு 100000 ரூபாய்  வரையான மருத்துவக் காப்புறுதி

    மருத்துவமனை அனுமதி
    »   தனியார் மருத்துவமனை
    ஓரிரவு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படின் 100,000 ரூபாய் வரையில் உறப்படும் உண்மைச் செலவுகள்

    »   அரச மருத்துவமனை
    03 நாட்களுக்குக் குறையாததும்  30 நாட்களுக்கு மேற்படாததுமான மருத்துவமனை அனுமதிகளுக்கு நாளொன்றுக்கு 600 ரூபாய்  என்ற விகிதம் வழங்கப்படும்

    விதிகளும் நிபந்தனைகளும்
    » 35 வயது வரை மட்டுமே காப்புறுதி வழங்கப்படும்
    » மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு ஆகக்குறைந்தது 10,000/-  ரூபாய் கணக்கு மீதியைத் தொடர்ந்து பேணியிருத்தல் வேண்டும்.
    » சம்பவம் இடம்பெற்று 6 மாதங்களுக்குள் உரிமைகோரல்கள் வங்கியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் 
     

கணக்குரிமையாருக்கான ஆயுட் காப்புறுதி 

  •  சம்பவத்தின் தன்மையைப் பொறுத்தும் (இறப்பு / நிரந்தர உடற் பாதிப்பு) கணக்குமீதயைப் பொறுத்தும் ஆக்ககூடியது 500,000/-  ரூபாய் வரையான நன்மைகள்

    விதிகளும் நிபந்தனைகளும்
    »   கணக்குரிமையார் இறப்பதற்கு முன்னர் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு ஆகக்குறைந்தது 10,000/-  ரூபாய் கணக்கு மீதியைத் தொடர்ந்து பேணியிருத்தல் வேண்டும்.
    »   சம்பவம் இடம்பெற்று 6 மாதங்களுக்குள் உரிமைகோரல்கள் வங்கியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் »   35 வயது வரை மட்டுமே காப்புறுதி வழங்கப்படும்
     

கபொ.த உ.த பரீட்சையில் உயர் சித்தி பெறுபவர்களுக்கு ‘நனஜய’ உதவித்தொகை

  • க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடங்கும் காலத்திலிருந்து தொடர்ச்சியாக 06 மாதங்களுக்கு 18+  கணக்கில் ஆகக்குறைந்தது 10,000/- ரூபாயைப் பேணுவதோடு பரீட்சையில் உயர் வெட்டுப் புள்ளியைப் பெறும் மாணவர்கள் ‘நனஜய’ உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.

பெறுமதியான திருமணப் பரிசுகள்

  • திருமணப் பரிசானது (பரிசுக் கூப்பன் அல்லது  தங்க நாணயம்) கணக்குத் தொடங்கிய திகதி, கணக்கு மீதி மற்றும் அம்மீதி பேணப்படும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

உங்கள் முதற் குழந்தைக்கு இலவச ரண் கெகுளு கணக்கு

  • கணக்கு வைத்திருப்பவரின் முதற் குழந்தைக்கு ரண் கெகுளு கணக்கொன்று வங்கியால் திறக்கப்படும்.

விதிகளும் நிபந்தனைகளும்
குறைந்தபட்சம்  10,000/-  ரூபாயை குழந்தை பிறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முதல் இருந்து தொடர்ந்து கணக்கில் பேணி இருத்தல்  வேண்டும்.

கடன் வசதிகள்

  • கணக்கு மீதியின் அடிப்படையில் உடனடிக் கடன் வசதிகள்
  • தனிநபர் கடன் வசதிகள்

டெபிட் மற்றும் கிரெடிட் அட்டை வசதிகள்

  • பொருட் கொள்வனவின் பொருட்டும் நாடளாவிய ATM களில் பணம் எடுக்கும் பொருட்டும் சிறப்பு ATM / டெபிட் அட்டை வழங்கப்படுகிறது

இணைய மற்றும்  கைபேசி வங்கி வசதிகள்

  • உங்கள் கணக்கு மீதியைச் சரிபார்ப்பதற்கும் இணையவழி பிற கொடுக்கல் வாங்கல்களைச் செய்வதற்கும் வசதிகளை வழங்குதல்

நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
 

தேவையான ஆவணங்கள்
விதிகளும் நிபந்தனைகளும்
  • கணக்குகளுக்காக வழங்கப்படும் எந்தவொரு நிபந்தனையையும் அல்லது வசதியையும்  மாற்றும், திருத்தும் அல்லது புதியனவற்றைச் சேர்க்கும் உரிமையை இலங்கை வங்கி கொண்டுள்ளது. தற்போதைய நிலைமைகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள அருகிலுள்ள BOC கிளையை நாடுங்கள் அல்லது 1975 என்ற இலக்கத்தின் ஊடாக எமது அழைப்பு நிலையத்தைத் தொடர்புகொள்ளுங்கள். 
     

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444