"BOC இ-துரு பசுமைச் சேமிப்புக் கணக்கு" என்பது தனிநபர்களும் நிறுவனங்களும் தமது சேமிப்புகளுக்கான அதிகபட்ச நன்மைகளைப் பெற்றவாறே சூழலுக்கிசைவான முன்முயற்சிகளுக்குப் பங்களிப்பதற்கு உதவும் வகையில் இலங்கை வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையான வைப்புத் திட்டமாகும்.
இக்கணக்கானது சூழலுக்கிசைவான அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் வைப்புகள் யாவும் பேண்தகு அபிவிருத்திக் கருத்திட்டங்களில் மாத்திரம் முதலிடப்படுகின்றன.
அம்சங்கள்
- வைப்புக்கு 2% என்ற ஆண்டு வட்டி வீதம் (வட்டி வீதங்கள் மாறக்கூடியவை)
- இ – வணிக வசதி
- இலவச SMSஅறிவுறுத்தல் வசதி
- B App / ஸ்மாட் இணைய வங்கி வசதி

