3G சேமிப்புத் திட்டம் என்பது இலங்கையின் நிதித்துறையில் இலங்கை வங்கியால் அறிமுகப்படுத்தப்படும் இன்னுமொரு புதிய திட்டமாகும். ‘BOC 3G சேமிப்பு’ எனும் இத் தனித்துவமான சேமிப்புத் திட்டம் நீங்கள் பொருட்கொள்வனவுக்காகப் பணத்தைச் செலவழிக்கும்போதும்கூட உங்கள் குடும்பத்தின் மூன்று தலைமுறைகளையும் இணைத்து சேமிக்கும் வாய்ப்பினை வழங்குகிறது.
உங்கள் பெற்றோருக்கான BOC சிரேஷ்ட பிரஜைகள் கணக்கு, உங்கள் குழந்தைக்கான ரண் கெகுளு அல்லது ரண் கெகுளு ஸ்மாட் கணக்கு அல்லது நீங்கள் விரும்பும் வேறு ஏதேனும் BOC சேமிப்புக் கணக்கு ஆகியவற்றில் பணத்தை வைப்பிலிடுவதன் மூலம் உங்கள் BOC டெபிட் அட்டையைப் பயன்படுத்தி செலவழிக்கும்போதே பணத்தைச் சேமிக்கவும் முடியும்.
உங்கள் BOC டெபிட் அட்டை மூலம் நீங்கள் பணம் செலுத்தும் போதுஉங்கள் செலவுகளில் இருந்து 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கிட்டிய தொகைக்கு மட்டந்தட்டப்பட்ட பணத்தை வைப்பிலிடும் வாய்ப்பு உங்களுக்கு உண்டு.
- இலங்கை வங்கி டெபிட் அட்டையுடன் சேமிப்புக் கணக்கு அல்லது நடைமுறைக் கணக்கை வைத்திருக்கும் எந்தவொரு வாடிக்கையாளரும் இத்திட்டத்தில் இணையலாம்
- ஆகக் குறைந்த மட்டந்தட்டப்பட்டு அனுப்பக்கூடிய தொகை 10 ரூபாய் அல்லது நிலையான தொகை ஒன்று.

