நோக்கம்

சூரிய சக்தி அமைப்புக் கொள்வனவு


தகைமை

வீட்டுப் பாவனையின் பொருட்டுக் கடன்பெறுபவர்கள்


ஆகக் கூடிய கடன்தொகை

  • சூரிய சக்தி அமைப்பின் மொத்தச் செலவில் 75%
  • ஆகக் கூடியது 1.5 மில்லியன் ரூபாய்
     

மீளச் செலுத்தும் காலம்

  • 7 ஆண்டுகள்
  • ஆயினும், இலங்கை வங்கியின் வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு (தற்போதைய மற்றும் புதிய) அவர்களின் வீட்டுக் கடனைச் செலுத்தி முடிக்க எஞ்சியுள்ள காலத்தின் அடிப்படையில்  பின்வரும் வகையில் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் பரிசீலிக்கப்பட முடியும்.
    வீட்டுக் கடனைச் செலுத்தி முடிக்க எஞ்சியுள்ள காலம் 
       » 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் எனின் – 10 ஆண்டுகள்
       » 10 ஆண்டுகளுக்கு குறைய எனின் - வீட்டுக் கடனைச் செலுத்தி முடிக்க எஞ்சியுள்ள காலம் அல்லது ஏழு ஆண்டுகள். (இவற்றில் எது அதிகமோ அக்காலப்பகுதி)
விசேட நிபந்தனைகள்
  • சூரிய சக்தி அமைப்பின் வழங்குநர் இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்ட வழங்குநராக இருக்க வேண்டும்.
  • அனைத்து தொடர்புடைய இடர்களையும் உள்ளடக்கிய தீக் காப்பீடு ஒன்றை புகழ்பெற்ற காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெறுதல் வேண்டும்
  • இந்தக் கடன் திட்டத்தின் உள்நாட்டு வகையின் கீழ் வழங்கப்படும் வசதிகள் பின்வரும் சந்தர்ப்பங்களிற் பரிசீலிக்கப்படலாம்.
       i. புதிய வீட்டுக் கடன்களை மதிப்பிடும் போது (வாடிக்கையாளர் வீட்டுக் கடனுடன் இந்தத் திட்டத்தின்கீழும் ஒரு கடன் வசதியைக் கோரினால்) அல்லது
       ii. அ) ஏற்கனவே வீட்டுக் கடன்(கள்) பெறப்பட்டு ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளுக்கு
    ஆ)  வீட்டுக் கடன்(கள்)பெறப்படாது  ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளுக்கு (வாடிக்கையாளர் பின்னர் ஒரு சூரிய சக்தி அமைப்பை வாங்குவதற்கு இந்த திட்டத்தில் இருந்து கடன் வசதியை கோரியிருந்தால்)

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444