BOC Flexi முதலீட்டாளர் கணக்கு என்பது நீங்கள் விரும்புகின்ற வழியில் உங்கள் இலக்குகளை அடைந்து கொள்வதற்கென வழங்கப்படும் ஓர் முதலீட்டு கணக்கு ஆகும். பணத்தினை சேமி ப்பதற்கான மிகவும் சிறந்த வழிகளில் ஒன்றாகவும் உங்கள் வாழ்வின் இலக்குகளையும் அபிலாசைகளையும் விளங்கிக் கொள்வதற்கான ஓர் கணக்காக இவ்விருப்பை நிறைவேற்றும் கணக்கு கொள்ளப்படுகின்றது. BOC Flexi முதலீட்டாளர் கணக்குடன் நீங்கள் விரும்பியவாறே உங்கள் வாழ்க்கையை திட்டமிடுங்கள். இதனூடே உங்களுக்கு சரியானது எது என்பதை நீங்கள் தெரிவு செய்ய முடியும்.
உங்கள் BOC Flexi முதலீட்டு கணக்கினை உருவாக்க

“BOC Apply Online” ஊடாக உங்கள் ஆரம்ப வேண்டுகோளை அனுப்புவதுடன் கணக்கினை திறப்பதற்கு அண்மையிலுள்ள இலங்கை வங்கிக் கிளைக்கு செல்லுங்கள்
தகுதிகள்
- 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கை பிரஜை
- இலங்கையை சேர்ந்த வெளிநாட்டில் பணியாற்றுகின்ற 18 வயதுக்கு மேற்பட்டவர் ( குடிபெயர்ந்தோர் தவிர)
- வங்கியில் நடைமுறை கணக்கு அல்லது சேமிக்கு கணக்கு ஒன்றினை ரூபாவில் (மூலக்கணக்கு) பேணிக்கொள்வது BOC Flexi முதலீட்டாளர் கணக்கின் விளைபயனின் ஆரம்ப நிதியிடல் மற்றும் முதிர்வு பரிமாற்றத்திற்கான ஓர் முன் நிபந்தனையாகும்.
நன்மைகள்
- இலக்கு, காலம் மற்றும் நியாயமான வைப்பு என்பவற்றை அடிப்படையாக கொண்ட உங்கள் சுயமுதலீட்டு திட்டத்தை நிறுவுவதற்கான நெகிழ்வுத் தன்மை.
- பரந்தளவிலான முதலீட்டு தெரிவுகள்
- கவர்ச்சிகரமான வட்டிவீதங்கள்
- சமநேரத்தில் பல முதலீட்டு திட்டங்களை திறப்பதற்கான தெரிவுகள்
- தவறவிடப்படும் வைப்புகளிற்கு தண்டம் இல்லை
- டிஜிட்டல் தளங்கள் ஊடாக இலகு கண்காணிப்பு

