உங்களின் நாளாந்த தனிப்பட்ட அல்லது வணிகப் பரிவர்த்தனைகளை நிர்வகிப்பதற்கான பல நன்மைகளை BOC நடைமுறைக் கணக்கு உங்களுக்கு வழங்குகிறது. நாட்டின் மிகப்பெரிய கிளை வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் நடைமுறைக் கணக்கை BOC இணைய வங்கிச் சேவை மற்றும் கைபேசி வங்கிச் செயலி என்பன மூலம் 24 மணி நேரமும் எங்கிருந்தும் நிர்வகிக்கலாம். மேலும், உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் உள்ள ஏடிஎம்களில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வகையில் சர்வதேச அளவில் செல்லுபடியாகும் டெபிட் அட்டைகளும் உங்களுக்கு வழங்கப்படும்.
தற்போதுள்ள நடைமுறைக் கணக்குகளின் வகைகள்
- தனிநபர் நடைமுறைக்கணக்கு
- ஏக உரிமையாளர் நடைமுறைக் கணக்கு
- கூட்டு நடைமுறைக்கணக்கு
- பங்காண்மை நடைமுறைக் கணக்கு
- வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவங்களுக்கான கணக்குகள்
- சங்கங்கள் மற்றும் கழகங்களுக்கான கணக்குகள்
- சம்மேளனங்கள் மற்றும் தொழிற் சங்கங்களுக்கான கணக்குகள்
- கூட்டுறவுச் சங்களுக்கான கணக்குகள்
- புத்த பிக்குகளுக்கான கணக்குகள்
- அரச பாடசாலைக் கணக்குகள்
- அரச சார்பற்ற பாடசாலைக் கணக்குகள்
- அரசாங்க அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கான கணக்குகள்
- பாராளுமன்றச் சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ள கூட்டு நிறுவனங்கள்/சபைகளுக்கான கணக்குகள்
- அரசாங்கக் கணக்குகள்
- அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான கணக்குகள்
- விசேட நோக்கங்களுக்காகத் திறக்கப்பட்ட கணக்குகள்

