இது பல்நாணயங்களைக் கொண்டிருக்கும் ஓர் முற்கொடுப்பனவு பயண அட்டையாகும். வெளிநாட்டு நாணயத்தாள்கள் மற்றும் பயணிகளின் காசோலைகளுக்கு மாற்றாக இந்த அட்டையை பயன்படுத்தலாம்.
 

நன்மைகள்

  • பயணம் செய்யும் நாட்டின் அடிப்படையில் நாணயங்களை நிரப்பலாம்
  • நாணயங்களைப் நிரப்பலாம்
  • பாதுகாப்பான, வசதியான மற்றும் இடையூரற்ற பயன் முறை
  • முதலாவது அட்டைதொலைந்தாலோ/ திருடப்பட்டாலோ/சேதமடைந்தாலோமற்றுமொரு அட்டை வழங்கப்படும்
  • நாணய ஏற்ற இறக்கங்களுக்கு வெளிப்படாமை
  • பரிவர்த்தனைகளைஅறிவிக்கஉடனடிSMS / மின்னஞ்சல்அறிவித்தல்கள்
  • USD 250,000 ஐ.அமெரிக்க டொலர் வரையில் இலவசபயணக்காப்புறுதி
     

அட்டையின்அம்சங்கள்
 

  • முற்கொடுப்பனவு - அட்டையின் மதிப்பு முன் கூட்டியே நிரப்பப்படும்
  • NFC செயற்படுத்தப்பட்ட PIN / கையொப்பத்துடனான DI அட்டை
  • ஐக்கிய அமெரிக்கடொலர்கள், ஸ்டெலிங்பவுண்ட்கள், யூரோ, ஜப்பானிய யென் மற்றும் அவுஸ்திரேலிய டொலர் ஆகியவற்றில் நாணயங்ளைப் நிரப்பலாம்.
  • செல்லுபடியாகும் காலத்தில் நாணயங்ளை மீள் நிரப்புவதற்கான வசதி (பரிமாற்றக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டது)
  • சர்வதேச விற்பனை நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் 'மாஸ்டர்காட் அடையாளத்துடனான அட்டைகளை பின்வருவனவற்றிற்குப் பயன்படுத்த முடியும்
    • கொள்வனவுகள் (POS) 
    • வெளிநாட்டு தன்னியக்க இயந்திரங்களில் (ATM) பணத்தை மீளப்பெறுவதற்கு
    • தொடர்பில்லா கொடுப்பனவுகள்
    • ஒன்லைன் பரிவர்த்தனைகள்
    • கட்டுநாயக்க விமானநிலையத்தில் வரியற்ற கொள்வனவுவசதிகள்
  • அட்டையில் சேர்க்கப்பட்டுள்ள நாணயத்திலிருந்து மற்றொரு நாணயத்திற்கு நிதியை பரிமாற்றும் திறன்
  • மின்னஞ்சல் / SMS மூலம்இலவச பரிவர்த்தனை அறிவித்தல்கள்
    •    இ-வணிக பரிவர்த்தனைகளுக்கு 3D பாதுகாப்பான அங்கீகாரம்
    •    தொலைந்த/ திருடப்பட்ட/சேதமடைந்த பிரதான அட்டைக்குப் பதிலாக காப்பு அட்டை
    •    பிரதான அட்டையை ரத்துசெய்து அழைப்பு நிலையம் ஊடாக அல்லது ஹோல்டர் செல்ப் கேர் போடல் ஊடாக காப்பு அட்டையை செயற்படுத்திக்கொள்ளலாம்.
  • பிரதான மற்றும் காப்பு அட்டைகள் தொலைந்தால் இரண்டிற்கும் பதில் அட்டைகள்
  • இலங்கைக்கு திரும்பியதும் தற்போதைய பரிவர்த்தனை கட்டுப்பாட்டு விதிமுறைகளின் படி 90 நாட்களுக்குள் அட்டையின் மிகுதி பணமாக மாற்றப்பட வேண்டும்.

தகுதியானவர்கள்

  • இலங்கையில் வதியும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்
  • இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்குச் செல்லும்போது பயணக்கொடுப்பனவுகளைப் பெறத்த குதியுடையவர்கள்
  • பயண நோக்கங்களுக்காக பயணிகள் அந்நியச் செலாவணியை வழங்குவது தொடர்பான பரிமாற்றக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளனர்.
     
BOC WellGlobe சிறப்புரிமை அட்டை

மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கின்றீர்களா?

உங்களுடைய நிம்மதியான பயணத்திற்கு மிகப் பொருத்தமான அட்டையை நாம் வழங்குகின்றோம்!

மருத்துவச் சிகிச்சைகளுக்காக இந்தியா செல்லத் திட்டமிடும் இலங்கையர்களின் பொருட்டு இலங்கையில் முதல்முறையாக BOC WellGlobe சிறப்புரிமை அட்டையை இலங்கை வங்கி அறிமுகப்படுத்துகிறது. உங்களுடைய BOC WellGlobe சிறப்புரிமை அட்டைக்காக விண்ணப்பித்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள பயன்களையும் நன்மைகளையும் அனுபவித்திடுங்கள்.

  • இலங்கை வங்கி பல நாணய பயண அட்டை இலவசம்
  • பங்காண்மை மருத்துவமனைகளின் நோயாளர் விடுதிகளில் தங்கி பெற்றுக்கொண்ட மருத்துவச் சிகிச்சைகளுக்கான மொத்த பற்றுச்சீட்டுத் தொகையில் 5தள்ளுபடி.
  • மருத்துவமனைத் தெரிவு மற்றும் செல்ல வேண்டிய இடம் தொடர்பில் நிபுணர்களின் ஆலோசனை
  • சிகிச்சையும் வல்லுநர்களின் ஆலோசனையும்
  • முழுப் பயணத்தையும் திட்டமிடுவதற்கு சேவை முகவரொருவரின் உதவி

BOC WellGlobe சிறப்புரிமை அட்டையுடன் தடைகளற்ற நிம்மதியான பயணத்தை அனுபவித்திடுங்கள்!

பயணம் மற்றும் பண அனுப்ல்கள் பிரிவு: 011 220 3175 | 0770 185 185

 

 

மருத்துவப் பற்றுச்சீட்டில் தள்ளுபடியைப் பெறுவதற்கான விதிகளும் நிபந்தனைகளும்

  • Vaidam இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தகுதியான ‘மாஸ்டர்’ அட்டை வைத்திருப்போருக்கு இந்தச் சலுகை கிடைக்கும்.
  • இறுதிப் பற்றுச்சீட்டு கொடுப்பனவின்போதே இச்சலுகை செல்லுபடியாகும் என்பதோடு செல்லுபடியான மாஸ்டர் அட்டையைப் பயன்படுத்தி கொடுப்பனவுகளை மருத்துவமனைக்குச் செலுத்த வேண்டும்.
  • மருத்துவமனை வசதிகளுக்காக பிற மருத்துவ வசதி முகவர் நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்தும் அட்டைதாரர்கள் இந்தச் சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியாது.
  • ‘மாஸ்டர்’ அட்டை வைத்திருப்போருக்கான விசேட Vaidam தளத்தில் வாடிக்கையாளர்கள் முதலில் விசாரணையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • சர்வதேச நோயாளர்களுக்கான பலன்களைப் பெற, ஆளடையாள விவரங்களை (கடவுச்சீட்டு விவரங்கள்) Vaidam குழுவுக்கு அனுப்பவேண்டும்.
  • 20,000 ஐக்கிய அமெரிக்க டொலருக்கு அதிகமான சிகிச்சைகள் அல்லது 10,000 ஐக்கிய அமெரிக்க டொலருக்கு அதிகமான மதிப்புள்ள உடலில் பொருத்தப்படும் கருவிகள் சம்பந்தப்பட்ட மருத்துவ நடைமுறைகள் மொத்த விலைக்கழிவுபெறத் தகுதியற்றதாக கருதப்படலாம்.
  • ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகள், என்பு மச்சை மாற்று அறுவைச் சிகிச்சைகள், TAVI, TAVR, Aneurysm, Pacemaker/CRT-D உட்பொருத்தல்கள் போன்ற குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு சிறப்பு தள்ளுபடி சலுகைகளைக் உள்ளன. பொருந்தக்கூடிய தள்ளுபடிகள் பற்றி அறிய உங்கள் Vaidam முகாமையாளரைத் தொடர்பு கொள்ளவும்.
செல்ப் கேயர் போட்டல் (Self-Care Portal)

அட்டைத் தொடர்பான செயற்பாடுகளை நிர்வகிக்க அட்டை வைத்திருப்பவருக்கு https://cardholder-apac.creditpluspinelabs.com/integratedIssuing-cardholderPortal/mpts/eis/app  எனும் வலைத்தளம் வழங்கப்படுகிறது.

பெறக்கூடியசேவைகள்

  • பரிவர்த்தனைகள் மற்றும் நிலுவைகள் பற்றிய விசாரணை
  • ஒரு நாணயத்திலிருந்து இன்னொரு நாணயத்திற்கு அட்டை ஊடாக நிதிப் பரிமாற்றம் (பணப் பையிலிருந்து பணப்பைக்கான நிதிப் பரிமாற்றம்)
  • அட்டையின் செயற்பாட்டை நிறுத்துதல்/செயற்படுத்தல்
  • பணப்பைகளைச் செயற்படுத்தல்/நிறுத்துதல்
  • இ-வணிகத்திணை செயற்படுத்தல்
  • மேலதிக அட்டையைச் செயற்படுத்தல்
  • அட்டையில் நாணய முன்னுரிமை வரிசையை மாற்றுதல்
தேவையான ஆவணங்கள்
  • முறையாகப் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பம் (பதிவிறக்குக)
  • செல்லுபடியாகும் கடவுச்சீட்டுப் பிரதி - முதல் மற்றும் இறுதிப் பக்கங்கள்

அட்டைக்கு நிதியை நிரப்பும்போது அல்லது மீள் நிரப்பும்போது

பயண அட்டைக்கு நிதியை நிரப்புதல்/மீள்நிரப்புதல்
 

  • இலங்கை ரூபாய்
  • கணக்குகளில் இருந்து பரிமாற்றம் (இலங்கை ரூபாய் அல்லது வெளிநாட்டு நாணயம்)
     

மீளளித்தல்
மீளளித்தல் படிவத்தை பதிவிறக்கம் செய்க

 

அட்டையின் எல்லை

செல்லுபடியாகும் ஆவணங்களை வழங்கினால் அதிகபட்சமாக  25000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பரிவர்த்தனை கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டும். பயணத்தின் நோக்கம், காலம் மற்றும் பயணிக்கும் நாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வங்கியின் தீர்மானம்/ தனியுரிமை அடிப்படையிலும் அனுமதிக்கப்படும். 


பரிவர்த்தனை எல்லைகள்

  • POS பரிவர்த்தனை எல்லை - நாளொன்றுக்கு 5000 ஐக்கியஅமெரிக்க டொலர்கள்
  • ATM மீளப் பெறல் எல்லை - நாளொன்றுக்கு 1000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள்
  • இ-வணிகம் பரிவர்த்தனை எல்லை - நாளொன்றுக்கு 250 0ஐக்கிய அமெரிக்க டொலர்கள்
  • நாளொன்றுக்கான அதிக பட்ச POS பரிவர்த்தனைகள் - 10 தடவைகள்
  • நாளொன்றுக்கான ATM பரிவர்த்தனைகள் - 3 தடவைகள்
    பயண அட்டை கட்டணத்தைப் பார்க்கவும்
    (வெளியே அனுப்பும் பணம் ➔ பல் நாணய பயண அட்டை)
     
தொடர்பு விவரங்கள்

திருடப்பட்ட அல்லது அட்டை தொலைந்தது

  • உடனடியாககார்டு வைத்திருப்பவரால் சுய-கவனிப்பு போர்ட்டல் ((https://cardholder-apac.creditpluspinelabs.com/integratedIssuing-cardholderPortal/mpts/eis/app) வழியாக வங்கி அழைப்பு மையம் - 1094 11 220 4444 ஐத்தொடர்பு கொண்டு காரட் பிளக் செய்யப்பட வேண்டும்.

புது அட்டையை பெறுதல்

  • முதன்மை அட்டை மற்றும் பிரதி அட்டை ஆகிய இரண்டும் தொலைந்துவிட்டால்> கார்டு வழங்கும்கிளையிலிருந்து> பொருந்தக்கூடிய கட்டணத்துடன் மாற்று அட்டையைப் பெறலாம்.

தகராறு பரிவர்த்தனைகள்

  • ஏதேனும் சர்ச்சைக்குரிய பரிவர்த்தனை நடந்தால், BOC அழைப்பு நிலையம் அல்லது அட்டை வழங்கும்கிளைக்கு சிக்கலைப் பரிந்துரைக்குமாறு அட்டை வைத்திருப்பவர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்

24 மணிநேர வாடிக்கையாளர் சேவை துரித அழைப்பு  - 011 2204444

 011 2203175 (வார நாட்களில் காலை9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை)

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444