இலங்கை வங்கியின் Rewardz Plus – கடனட்டைப் பாவனையாளருக்கான வெகுமதித் திட்டம்


இலங்கை வங்கி கடன் அட்டையைப் பயன்படுத்தி நீங்கள் மேற்கொள்ளும் கொள்வனவுகளின் பொருட்டு Rewardz Plus ஊடாக நாளாந்த வெகுமதிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொரு முறையும் கடனட்டையை பயன்படுத்தும் போதும் பரவசமூட்டும் பல வெகுமதிகளை வெல்லுங்கள். பொருட் கொள்வனவாக இருந்தாலும் உணவகங்களில் உணவருந்துவதாக இருந்தாலும் பயணங்களை மேற் கொள்வதாக இருந்தாலும் எல்லா விதமான கடனட்டை மூலமான கொள்வனவுகளுக்கும் வெகுமதிகள் காத்திருக்கின்றன. இவ்வாறு வெல்லும் வெகுமதிகளை நீங்கள் விரும்பும் விற்பனை நிலைய கொடுப்பனவுகளின்போது மீட்டுக்கொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கின்றது. 

Rewardz Plus ஒவ்வொரு கொள்வனவிலும் வெகுமதிகளை வழங்குவதோடு இலங்கை வங்கிக் கடனட்டையே ஆகச் சிறந்​த தெரிவு என்பதை உறுதிப்படுத்துகின்றது. 

 

தகுதி 

கீழ் காணும் கடனட்டை வகைகளைக் கொண்டுள்ளவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியுடையவர் ஆவர். 



வாடிக்கையாளரை இணைத்துக் கொள்ளல்

இலங்கை வங்கியின் கடனட்டை உரிமையாளர் என்ற வகையில் நீங்கள் தானாகவே Rewardz Plus திட்டத்தின்கீழ் இணைத்துக் கொள்ளப்படுவீர்கள். இவ்வெகுமதிகளை மீட்டுக்கொள்வதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் www.rewardzplus.boc.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று உங்களைப் பதிவுசெய்து உங்கள் கணக்கைச் செயற்படுத்திக்கொள்வது மட்டுமே. 

உங்கள் கணக்கை செயற்படுத்திக்கொள்ள பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்

  1. www.rewardzplus.boc.lk என்ற இணையத்தளத்திற்கு செல்லவும்.
  2. வங்கியில் பதிவுசெய்யப்பட்டுள்ள உங்களுடைய தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளிடவும். 
  3. உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு மற்றும்/அல்லது கைபேசி இலக்கத்திற்கு அனுப்பப்படும் OTP இலக்கத்தை உள்ளிடவும். 
  4. பயனர் ID மற்றும் கடவுச்சொல்லை அமைக்கவும். 
  5. பயனர் ID மற்றும் கடவுச்சொல்லின் ஊடாக உள் நுழைந்து வெகுமதிகளை மீட்டுக் கொள்ளவும்.
வெகுமதிப் புள்ளிகளைத் திரட்டுதல்

இலங்கை வங்கிக் கடனட்டைகளைப் பயன்படுத்தி விற்பனை நிலையங்கள் (POS) மற்றும் இணையத்தளங்களில் உங்களால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் உங்களுடைய அட்டையின் வகையைப் பொறுத்துப் புள்ளிகள் கிடைக்கும். 

 

புள்ளிகளை வழங்கப்படும் முறை வருமாறு

அட்டை வகை

செலவழித்த தொகை (ரூபாய்)

ஈட்டப்படும் புள்ளிகள்

VISA Platinum2001
Master World2001
Master Platinum2501
Master Titanium2501
VISA Gold2501
Master Gold2501
VISA Classic3001
Master Standard3001



குறிப்பு 

  • நீங்கள் எந்தவிதமான அட்டையைப் பயன்படுத்தினாலும் வளர்ந்துவரும் சந்தைக்கு (Emerging Market – அரச சேவைக்கான கொடுப்பனவுகள் மற்றும் நீர், மின்சாரக் கட்டணங்கள் முதலானவை) மேற்கொள்ளும் ஒவ்வொரு 300 ரூபாய்க்கும் 01 புள்ளி வழங்கப்படும். 
  • ஒரு புள்ளி 01 ரூபாய்க்குச் சமமாகும். ( 01 புள்ளி = 01 ரூபாய்)
  • பின்வரும் பரிவர்த்தனைகளுக்கு வெகுமதிப் புள்ளிகள் வழங்கப்படமாட்டா.
    • முற்பணம் அல்லது ATM இல் பணம் மீளப்பெறல் 
    • Casino மாதிரியான இடங்களில் பயன்படுத்தப்படும் காசுக்கு நிகரான பொருட்கள். 
    • நாணயக் கொள்வனவு.
    • கணக்கு மீதியை அனுப்புதல்.
    • மாதாந்த தவணைக் கட்டண செலுத்தல்கள்.
    • வருடாந்தக் கட்டணங்களும் பிற கட்டணங்களும், நிதிசார் அறவீடுகளும் பிற அறவீடுகளும். 
    • மேற்கொள்ளப்படாத அல்லது இரத்துச்செய்யப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள்.
  • முதன்மை அட்டை மூலமான பரிவர்த்தனைகளுக்கும் மேலதிக அட்டைகள் மூலமான பரிவர்த்தனைகளுக்கும் வெகுமதிப் புள்ளிகள் வழங்கப்படும் என்பதோடு இவ்விரண்டு வகையான அட்டைகளுக்கும் வழங்கப்படும் மொத்தப் புள்ளிகளை முதன்மை அட்டைதாரர் மட்டுமே மீட்டுக் கொள்ள முடியும்.
  • கடனட்டையைப் பயன்படுத்தி தவணைக் கொடுப்பனவுத் திட்டத்தின்கீழ் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டால் ஆரம்ப முழுத்தொகைக்குப் புள்ளிகள் வழங்கப்படும். மாதாந்த தவணைக் கொடுப்பனவுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படமாட்டா. 
Points Redemption

பின்வரும் வழிமுறைகளின் ஊடாக உங்கள் புள்ளிகளை மீட்டுக்கொள்ள முடியும்.

  • இலத்திரனியல் வவுச்சர்(e-voucher) கொள்வனவு
  • இணையவழிக் கொள்வனவு
  • விமான முற்பதிவு
  • உல்லாச விடுதி முற்பதிவுகள்
  • தெரிவு செய்யப்பட்ட விற்பனை நிலையங்களில் பற்றுச் சீட்டுகளுக்குப் பணம் செலுத்துதல்.
புள்ளிகள் செல்லுபடியாகும் காலம்

கடனட்டைப் பரிவர்த்தனைகளின்போது ஈட்டப்படும் புள்ளிகள் அடுத்து வரும் ஆண்டின் டிசம்பர் மாதம் 31ஆம் தகதி வரை செல்லுபடியாகும் என்பதோடு இக்காலப்பகுதிக்கு பின்னர் அவை காலாவதியாகிவிடும். 

பயன்படுத்தப்படாத வெகுமதிப் புள்ளிகள் காலாவதியான பின்னர் Rewardz Plus கணக்கிலிருந்து நீக்கப்படுவதோடு அவை மீள வழங்கப்படா. 

 

Terms and Conditions

 

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444