அம்சங்கள்

BOC EDC சாதனங்கள் - அதிக நன்மைகளும் அம்சங்களும்

அனைத்து EDC சாதனங்களும் இலவசமாக பொருத்தப்படும் 

இச்சாதனங்கள் 3G இணைப்புடன் கூடிய டயலொக் SIM உடன் பொருத்தப்படுகின்றன. மேலும், இவை SLT ஊடாக PSTN இணைப்பிற்கும் உதவக் கூடியவை. 

SIM இற்கான செலவும் தரவு பயன்பாட்டிற்கான கட்டணங்களும் வங்கியால் ஏற்கப்படும் 

இலத்திரனியல் பணப் பதிவு (ECR)

தீர்வுகள் மறு நாள் நடைமுறைக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

பரிவர்த்தனைகள் தொடர்பான நாளாந்த அறிக்கைகளை மின்னஞ்சல்கள் ஊடாக அனுப்பலாம்.

365 நாட்களும் 24 மணித்தியாலயமும் தொழில்நுட்ப சேவைகள் வழங்கப்படும்

தொழில்நுட்ப உதவியையும் பயிற்சி வசதிகளையும் எமது கள அலுவலர்களூடாகவோ கிளைகளூடாகவோ எந்த நேரத்திலும் பெறலாம்

எழுது பொருட்கள் (காகித உருளைகள், ஸ்டிக்கர்கள் போன்றவை) இலவசமாக வழங்கப்படும்

வீதங்களும் கட்டணங்களும்

வீதங்கள்

  • வியாபாரிக்கான தரகு 2.5% ஆகும். (இது வியாபாரியின் மாதாந்த வருமானத்தை பொறுத்தது)

கட்டணம்

  • EDC சாதனத்தின் மாதாந்திரப் பணப் புரள்வு 300,000 ரூபாவிற்கு குறைவாயின், வாடகைக் கட்டணமாக 3000 ரூபாய் வணிகரிடம் இருந்து அறிவிடப்படும். மேலும் ரூபாய் 300,000/- இற்கு மேற்பட்டிருந்தால் எவ்வித கட்டணமும் அறவிடப்படாது. 
தகுதி அளவுகோள்கள்

வணிகராக இணைவதற்குத் தேவைகள் தகுதி அளவுகோள்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  • இலங்கை அல்லது மாலைத்தீவு குடியரசில் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட வணிக நிறுவனமாக இருத்தல் வேண்டும். CRIB பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்க கூடாது.
  • விசா மற்றும் மாஸ்டர் மோசடி ஆபத்து எச்சரிக்கை முறைமை பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்க கூடாது.
  • சட்டப்பூர்வமான நோக்கத்திற்காக பதிவு செய்திருத்தல் வேண்டும் 
  • உறுதியான நிதி நிலைமையும் பணப்புழக்கமும் அவசியமாகும்
  • நிறுவனத்தன் பிரதானிகள் நேர்மையை வெளிப்படுத்த வேண்டும் 
ஆவணங்கள் : தனி உரிமையாளர்

ஆவணங்கள் தனி உரிமையாளர்

  • இணைபுப் படிவம் (வியாபார முத்திரையின் மீது உரிமையாளர் கையொப்பமிடப்பட வேண்டும்)
  • ஒப்பந்தம் (வியாபார முத்திரையின் மீது உரிமையாளரின் கையொப்பமும் பணியாளர்கள் இருவரின் சாட்சியமும்)
  • தேசிய அட்டையாள அட்டைப் பிரதி 
  • வியாபார பதிவுச் சான்றிதழின் பிரதி 
  • KYC படிவம்
  • தேவைப்படின் கட்டணக் கடிதம் (வியாபார முத்திரையின் மீது உரிமையாளர் கையொப்பமிடப்பட வேண்டும்) வழங்கப்பட வேண்டும்.
ஆவணங்கள் : கூட்டாண்மை வணிகம்

ஆவணங்கள் கூட்டாண்மை வணிகம்

  • இணைபுப்படிவம் (வியாபார முத்திரையின் மீது பங்காளர்கள் இருவரும் கையொப்பமிடப்பட வேண்டும்)
  • ஒப்பந்தம் (வியாபாரமுத்திரையின் மீதுபங்காளர்கள் இருவரினதும் கையொப்பமும் பணியாளர்கள் இருவரின் சாட்சியமும்)
  • தேசிய அட்டையாளஅட்டைப்பிரதி
  • வியாபாரபதிவுச் சான்றிதழின் பிரதி
  • KYC படிவம்
  • கட்டணக் கடிதம் தேவைப்படின் பெறப்படும் (வியாபார முத்திரையின் மீதுபங்காளர்கள் இருவரும் கையொப்பமிடப்பட வேண்டும்)
     
ஆவணங்கள் : வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனங்கள்

ஆவணங்கள் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனங்கள்

  • இணைபுப்படிவம் (தீர்மானத்தின்படி நிறுவனத்தின் முத்திரையின் மீது குறைந்தது பரிந்துரைக்கப்பட்ட இரு பணிப்பாளர்கள் கையொப்பமிடவேண்டும்)
  • ஒப்பந்தம் (தீர்மானத்தின்படி நிறுவன முத்திரையின் மீது குறைந்தது பரிந்துரைக்கப்பட்ட இரு பணிப்பாளர்களின் கையொப்பமும் இரு பணியாளர்களின் சாட்சியமும் வேண்டும்)
  • வணிக நிறுவனத்தின் விதித்தொகுப்பு/வணிக நிறுவன அகவிதிகளின் சான்றளிக்கப்பட்ட பிரதி
  • 2007 ஆம்ஆண்டின் 7 ஆம்  இலக்ககம்பனிகள் சட்டத்தின் ஒருங்கிணைப்புச் சான்றிதழின் சான்றுபடுத்தப்பட்ட பிரதி
  • பணிப்பாளர்களின் மாற்றம் தொடர்பான படிவங்கள்/செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்களின் விவரங்கள்/ செயலாளரின் 1ஆம் மற்றும் 2ஆம் இலக்கப்படிவங்கள் ஆகியவற்றின் சான்றுபடுத்தப்பட்ட பிரதிகள்.
  • KYC படிவம்
  • பணிப்பாளர் சபை தீர்மானம் நிறுவனத்தின் கடிதத்தில் வழங்கப்படவேண்டும் (நிறுவன முத்திரையின் மீது பணிப்பாளர்கள் இருவர் கையொப்பமிட வேண்டும். செயலாளர் தனது முத்திரையின் மீது கையொப்பமிடல் வேண்டும்).
  • பதிவுப்படிவம்/ வர்த்தமானி/உரிமம் மற்றும் கட்டணக்கடிதம் ஆகியவற்றின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் (தேவை ஏற்படின் தீர்மானத்தின்படி நிறுவனத்தின் முத்திரையில் குறைந்தது இருபணிப்பாளர்கள் கையொப்பமிட வேண்டும்.)  
அமைப்புகள், கழகங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகள்
  • இணைபுப் படிவம்
  • ஒப்பந்தம்
  • தீர்மானம்
  • கோரிக்கைக் கடிதம்
  • KYC படிவம்
  • கட்டணக் கடிதம் (தேவைப்படின்)

(இணைப்புப் படிவம், ஒப்பந்தம் மற்றும் பிற ஆவணங்களில் தீர்மானத்தின்படி பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகள் கையொப்பமிடப்பட வேண்டும்)

தொடர்பு கொள்வதற்கான விவரங்கள்

சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை இணைப்புப் பிரிவு 

BOC கடன் அட்டை மையம்,

தரைத் தளம், உலக வர்த்தக மையம்,

இலங்கை வங்கி மாவத்தை,

கொழும்பு: 01

முகாமையாளர் - விற்பனை இணைத்தல் - 0112205621

உதவி முகாமையாளர் - விற்பனை இணைத்தல் - 0112205610

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444