Download App
SmartPay என்பது பயனாளர்கள் தமது நிதிகளை டிஜிற்றல் தளங்களினூடாக இலகுவாக நிர்வகிப்பதற்கான வசதியை வழங்குமோர் டிஜிற்றல் செயலியாகும். வாடிக்கையாளர்கள் தமது கணக்கிலக்கத்தையோ பணம் அனுப்பும் குறியீட்டையோ பயன்படுத்தி இச்செயலியின்மூலம் எந்தவொரு வங்கியிலிருந்தும் எந்தவொரு வங்கிக்கும் பணம் அனுப்பமுடியும். அது மட்டுமல்லாமல், பலதரப்பட்ட விற்பனை நிலையங்களுக்கான பற்றுச்சீட்டுக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வசதியையும் எந்தவொரு விற்பனை நிலையத்திலுமுள்ள Lanka QR குறியீட்டையோ China Union Pay QR குறியீட்டையோ scan செய்து கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வசதியையும் இச்செயலி வழங்குகிறது.
SmartPay - உங்கள் நிதிகளைக் கண்காணித்துக்கொள்ளுங்கள்
‘வசதி’ என்பது இக்காலத்தின் முக்கிய பேசுபொருள். எமது வாழ்க்கை முறைகள் முழுவதும் அதன் மீதுதான் கட்டமைக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் உங்கள் அன்றாட நிதிகளை நிர்வகித்தல் என்று வரும்போதுகூட நீங்கள் உங்கள் சௌகரியங்களுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டியதில்லை. SmartPay உங்கள் நிதிநிர்வாக வசதிகள் அனைத்தையும் உங்கள் விரல் நுனிக்கே கொண்டுவந்துவிடுகிறது. சிறு மாறுதல்களைக்கூட அதுவே நிர்வகித்துவிடும் என்பதால் உங்கள் நிதிநிர்வாகப் பொறுப்பை அதனிடம் ஒப்படைத்துவிடுங்கள். அது எதுவிதச் செலவுகளும் இன்றி உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தட்டும்.
அம்சங்கள்
- கொடுப்பனவுச் சாதனமாக எந்தவொரு நடைமுறை அல்லது சேமிப்புக் கணக்கையும் சேர்த்துக் கொள்ளும் வசதி
- எந்தவொரு நுகர்பயன் பற்றுச்சீட்டுக் கட்டணங்களையும் அரசாங்க சேவைகளுக்கான கட்டணங்களையும் சில நொடிகளில் முடிக்கும் வசதி
- நிகழ்நேரத்தில் எந்தவொரு வங்கியிலிருந்தும் எந்தவொரு வங்கிக்கும் பணம் அனுப்பும் வசதி
- தீவு முழுவதும் உள்ள 100,000இற்கும் மேற்பட்ட LANKAQR சான்றளிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் உங்கள் சொந்த கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி பணத்தின் தேவைப்பாடு இல்லாமல் ஸ்கான் செய்து பணம் செலுத்தும் வசதி
- நுகர்பயன் பற்றுச்சீட்டுகளில் அல்லது விற்பனை நிலைய பற்றுச்சீட்டுளில் அச்சிடப்பட்டுள்ள LANKAQRஐ ஸ்கான் செய்து கட்டணம் செலுத்தும் வசதி
- தாமதக் கட்டணங்களைத் தவிர்க்கும் வகையில் BOC கடனட்டைக் கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்தும் வசதி
- அறக்கட்டளை நிறுவனங்கள் மற்றும் மத அமைப்புகளுக்கு தவறாமல் நன்கொடை வழங்கக்கூடிய வசதி
- உங்கள் அன்றாட SmartPay பரிவர்த்தனைகளைக் கண்காணித்து செய்துமுடிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கான பகிரக்கூடிய இலத்திரனியற் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி
- பற்றட்டை இல்லாமல் அல்லது கணக்கிலிருந்து பணத்தை எடுக்கவேண்டிய தேவை இல்லாமல் நேரடியாகப் பணம் செலுத்த உங்கள் இலங்கை வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தும் வசதி
- அவ்வாறு பணம் செலுத்தும்போது பண மீளளிப்புகள், தள்ளுபடிகள் முதலான சலுகைகளைப் பெறும் வாய்ப்பு
- உங்கள் இலங்கை வங்கி சேமிப்பு அல்லது நடைமுறைக் கணக்கு மீதிகளை நிகழ்நேரத்தில் விசாரிக்கும் வசதி
- இலங்கை வங்கியின் நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகளுக்கான சிறு கணக்குக் கூற்றினைப் பார்க்கும் வசதி
- துல்லியமான, கண்காணிக்கத்தக்க, பாதுகாப்பான டிஜிட்டல் கொடுப்பனவுகளைப் பெறும் LANKAQR மற்றும் Chinese UnionPay International என்பவற்றின் சான்றளிக்கப்பட்ட வணிகராக இருக்கும் வாய்ப்பு
SmartPay உடன் உங்கள் தன்னம்பிக்கையைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள்
நாட்டின் புகழ்பெற்ற தகவல் அமைப்புப் பாதுகாப்பு மற்றும் கணக்காய்வுச் சேவைகள் முழு SmartPay அமைப்பையும் மதிப்பாய்வு செய்து அதன் இறுக்கமான பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி மற்றும் வரையறுக்கப்பட்ட லங்கா கிளியர் (தனியார்) நிறுவனம் ஆகியவற்றின் விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளதோடு உங்கள் நம்பிக்கையைப் பாதுகாக்க, அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சொல் கொள்கைகள் மற்றும் சரிபார்ப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
எளிய பதிவு நடைமுறை
- Play Store, App Store அல்லது Huawei App Gallery ஊடாக SmartPay செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்
- செயலிக்குள் நுழையவும்
- செல்லுபடியான சுய விபரங்களை உள்ளிடவும்
- உங்களுக்கு அனுப்பப்படும் உறுதிப்படுத்தற் குறியீட்டை உள்ளிடவும்
- 4 இலக்கங்களைக்கொண்ட PIN இலக்கத்தை உருவாக்கவும்
- பாதுகாப்புக் கேள்விகளுக்கு விடையளிக்கவும்
கொடுப்பனவுக் கருவியைச் சேர்ப்பது எவ்வாறு?
- Menuஇல் ‘கொடுப்பனவு முறைகள்’ என்பதைத் தெரிவுசெய்யவும்
- ‘புதிய கணக்கைச் சேர்க்கவும்’ என்ற பொத்தானை அழுத்தவும்
- உங்களுடைய வங்கி, கணக்கின் வகை, இலக்கம், செல்லப்பெயர் என்பவற்றை வழங்கிய பின்னர் “Submit என்பதை கிளிக்செய்யவும்
- உங்களுடைய பதிவுசெய்யப்பட்ட கைத்தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் ‘ஒரு நேரக் கடவுச்சொல்லை’ (OTP) உள்ளிடவும். அவ்வளவுதான்!
பயனாளர் கணக்கினைச் சேர்ப்பது எவ்வாறு?
- Menuஇல் ‘பயனாளர் முகாமைத்துவம்’ என்பதைத் தெரிவுசெய்யவும்
- ‘பயனாளரைச் சேர்க்கவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்
- உங்களுடைய வங்கி, கணக்கின் வகை, இலக்கம், செல்லப்பெயர் என்பவற்றை வழங்கிய பின்னர் “Submit என்பதை கிளிக்செய்யவும்
- உங்களுடைய பதிவுசெய்யப்பட்ட கைத்தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் ‘ஒரு நேரக் கடவுச்சொல்லை’ (OTP) உள்ளிடவும். அவ்வளவுதான்!
கட்டணம் செலுத்தப்படும் நிறுவனத்தைச் சேர்ப்பது எவ்வாறு?
- Menuஇல் ‘கட்டணம் செலுத்தப்படும் நிறுவனத்தை முகாமைசெய்தல்’ என்பதைத் தெரிவுசெய்யவும்
- ‘ADD Beneficiary’என்பதை கிளிக் செய்யவும்
- கட்டணம் செலுத்தப்படும் நிறுவனத்தின் வகையினைத் தெரிவுசெய்யவும்
- கோரப்படும் விபரங்களை உள்ளிட்ட பின்னர் “Submit” என்பதனை கிளிக் செய்யவும்
- அடுத்து திரையில் தோன்றும் விபரங்களை உறுதிப்படுத்தியதன் பின்னர் எனும் “Confirm” பொத்தானை கிளிக் செய்யவும்
ஓர் வர்த்தகராகத் தங்களைப் பதிவுசெய்யும் முறை
- முகப்பிலுள்ள ‘My Shop” எனும் பொத்தானைத் தெரிவு செய்யவும்
- ‘Merchant Registration’ படிவத்தை நிரப்பிவிட்டு enroll செய்யவும்
- அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளைக்குச் சென்று SmartPay வர்த்தகர் விண்ணப்பச் செயன்முறைகளைப் பின்பற்றவும்
- உங்களுக்கு அனுப்பப்படும் உறுதிப்படுத்தற் குறியீட்டை உள்ளிடவும்.
FAQ
- SmartPay என்றால் என்ன?
SmartPay என்பது பயனாளர்கள் தாம் ஈட்டிய பணத்தை டிஜிற்றல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிர்வகிக்கும், செலவழிக்கும் வசதிகளை வழங்கும் டிஜிற்றல் செயலியாகும். - SmartPay பாதுகாப்பான டிஜிற்றல் தளமா?
நாட்டின் மிகவும் புகழ்பூத்த தகவல் அமைப்புப் பாதுகாப்பு மற்றும் கணக்காய்வுச் சேவைகள் நிறுவனம் SmartPay செயலியை முழுமையாக மதிப்பாய்வு செய்து அது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை உறுதிசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி மற்றும் வரையறுக்கப்பட்ட லங்கா கிளியர் (தனியார்) நிறுவனம் ஆகியவற்றின் விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் என்பவற்றுக்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ள இச்செயலி உங்கள் நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சொல் கொள்கைகள் மற்றும் சரிபார்ப்பு வழிமுறைகள் என்பவற்றையும் பின்பற்றுகிறது. - SmartPay செயலியுடன் ஏதேனும் வங்கி சம்பந்தப்பட்டுள்ளதா?
ஆம். SmartPay என்பது இலங்கை வங்கியின் செயலியாகும். - SmartPay செயலியைப் பயன்படுத்துவதற்கு எனக்கு இலங்கை வங்கியிற் கணக்கேதும் இருக்கவேண்டுமா?
எந்தவொரு வங்கியிலும் அல்லது நிதி நிறுவனத்திலும் நடைமுறை அல்லது சேமிப்புக் கணக்கொன்றை வைத்துள்ளதோடு SMS விழிப்பூட்டல் வசதியைச் செயற்படுத்தியுள்ள எவரும் இச்செயலியைப் பயன்படுத்தலாம். - SmartPay செயலியை எந்தவொரு சாதனத்திலும் பயன்படுத்த முடியுமா?
அநேகமான Android, iPhone, Huawei தொலைபேசிகளில் பயன்படுத்த முடியும் - SmartPay செயலிக்குள் நுழைவது எவ்வாறு?
Apple App Store அல்லது Google Play Store அல்லது Huawei AppGallery முதலான தளங்களிலிருந்து SmartPay செயலியைத் தரவிறக்கிய பின்னர் “Signup”என்பதை கிளிக் செய்து எமது எளிய படிமுறைகளைப் பின்பற்றி உள்நுழையவும். - பதிவுச் செயன்முறையின்போது எனக்கு ‘ஒரு நேரக் கடவுச் சொல்’ (OTP) கிடைக்கவில்லை எனின் என்ன செய்வது?
“Resend OTP” எனும் தெரிவினைப் பயன்படுத்தவும். அப்பொழுதும் கிடைக்கவில்லை எனின் 1975 என்ற எமது வாடிக்கையாளர் சேவைமைய எண்ணுக்கு அழைத்து உதவியைப் பெற்றுக்கொள்ளவும். - இச்செயலிக்குப் பொருந்தக்கூடிய பரிவர்த்தனை எல்லைகள் யாவை?
பரிவர்த்தனை எல்லைகள் வருமாறு
| பரிவர்த்தனை | பரிவர்த்தனை ஒன்றுக்கான ஆகக் குறைந்த எல்லை | பரிவர்த்தனை ஒன்றுக்கான ஆகக் கூடிய எல்லை | ஒரு நாளைக்கான பரிவர்த்தனை எல்லை |
|---|---|---|---|
| பற்றுச்சீட்டுக் கொடுப்பனவு | 10/- | 100,000/- | 500,000/- |
| பணம் அனுப்புதல் | 10/- | 100,000/- | 500,000/- |
| QR கொடுப்பனவு | 10/- | 50,000/- | 50,000/- |
- மென்பொருட் கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்ட (rooted or jailbroken) அல்லது டெவலொப்பர் மோட் (developer mode) இல் உள்ள சாதனங்களிலும் இச்செயலியைப் பயன்படுத்த முடியுமா?
இல்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக அவ்வாறான சாதனங்களில் இச்செயலியைப் பயன்படுத்த முடியாது. - இச்செயலியைச் சேமித்து வைத்துக்கொள்ள சாதனத்தில் எவ்வளவு இடைவெளி இருத்தல் வேண்டும்?
50MB இற்கும் குறைவாக. - கட்டணங்கள் ஏதும் அறவிடப்படுமா?
ஆம். கட்டண விபரங்கள் வருமாறு.
| சேவை | கட்டணம் |
|---|---|
| செயலிக்குள் நுழைவதற்கான கட்டணம் | இலவசம் |
| வருடாந்த சேவைக் கட்டணம் | இலவசம் |
| பற்றுச்சீட்டுக் கொடுப்பனவுகள் | இலவசம் |
| நுகர்பயன் கொடுப்பனவுகள் (நீர், மின்சாரம், LECO) | பரிவர்த்தனை ஒன்றுக்கு 20 ரூபாய் |
| விற்பனை நிலைய LankaQR கொடுப்பனவுகள் | இலவசம் |
| LankaQR எரிபொருள் நிரப்பு நிலையக் கொடுப்பனவுகள் | பரிவர்த்தனையிலிருந்து 0.5% |
| அரச விற்பனை நிலைய LankaQR கொடுப்பனவுகள் | பரிவர்த்தனை ஒன்றுக்கு 10 ரூபாய் |
| இலங்கை வங்கிக் கடனட்டைக் கொடுப்பனவுகள் | இலவசம் |
| இலங்கை வங்கிக் கணக்குகளுக்கான பண அனுப்பல்கள் | இலவசம் |
| ஏனைய வங்கிக் கணக்குகளுக்கான பண அனுப்பல்கள் | பரிவர்த்தனை ஒன்றுக்கு 30 ரூபாய் |
| SmartPay QR குறியீடு மூலமான பணக் கோரிக்கை | இலவசம் |
மேலதிக உதவிகளுக்கு கீழ்க்காணும் வழிகளில் எமது அணியைத் தொடர்பு கொள்ளவும்
தொலைபேசி :- 1975 (24*7 தொடர்பு மையச் சேவை)
Whatsapp :- +94 77 772 1975
மின்னஞ்சல் :- smartpay@boc.lk
- SmartPay செயலியை எனது வியாபார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தலாமா?
ஆம். உங்கள் வியாபாரத்தின் பணக் கொடுக்கல் வாங்கல்களை நிர்வகிப்பவர் நீங்கள் மட்டும் என்றால் SmartPay செயலிக்குட் சென்று “My Shop” தெரிவின் மூலம் கோரிக்கை ஒன்றை முன்வைக்கலாம் என்பதோடு அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளைக்குச் சென்றும் LankaQR வசதியைச் செயற்படுத்திக்கொள்ளலாம்.
அல்லது உங்களுடைய வியாபாரத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பணக் கருமபீடங்கள் இருப்பின் அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளைக்குச் சென்று பெருநிறுவன வர்த்தக நிலைய வசதியைச் செயற்படுத்திக்கொள்ளுங்கள். - Merchant QR வசதி செயற்படுத்தப்படும் கொடுப்பனவு வலையமைப்புகள் யாவை?
LankaQR மற்றும் China UnionPay முதலான கொடுப்பனவு முறைமைகளூடாக வர்த்தக நிலையக் கொடுப்பனவுகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். - வர்த்தக நிலையக் கொடுப்பனவுகள் உங்கள் கணக்கிற்கு கிடைப்பது எவ்வாறு?
அனைத்து வர்த்தக நிலையக் கொடுப்பனவுகளும் நிகழ்நேரத்தில் உங்களுடைய கணக்கிற்குக் கிடைக்கும்.