Smart Passbook
BOC Smart Passbook என்பது பாரம்பரிய கணக்குப் புத்தகத்தின் / நடைமுறைக் கணக்குக் கூற்றின் மின்னணு வடிவமாகும். இதன் மூலம் உங்கள் நிகழ்நிலைக் கணக்கு மீதிகள் மற்றும் பரிவர்த்தனை விவரங்கள் என்பவற்றை எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் பதிவிறக்கம் செய்து பார்க்க முடியும்.
முக்கிய அம்சங்கள்
- தே.அ.அட்டை, கைபேசி எண் (உள்நாட்டு/வெளிநாட்டு) என்பவற்றுடன் சுயமாகப் பதிவுசெய்துகொள்ளும் வசதி
- கணக்கு மீதிகள் மற்றும் பரிவர்த்தனை விபரங்கள்
- இறுதி 03 மாதங்களுக்கான பரிவர்த்தனை விபரங்களைப் பார்வையிடும் வசதி
- வெளிநாட்டுப் பண அனுப்பல்களைக் கண்காணிக்கும் வசதி
- மும்மொழி வசதி (சிங்களம், தமிழ், ஆங்கிலம் என விரும்பிய மொழியில் பயன்படுத்தும் வசதி)
- விருப்பத்துக்குரிய உள்நுழைவுக் கடவுச்சொல் (PIN)
- பல சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய வசதி (ஒரு பதிவுக்கு 5 சாதனங்கள் வரை பயன்படுத்தலாம்)
- இணையத் தொடர்பு இல்லாமலும் (Offline) இறுதியாகப் பார்த்த பரிவர்த்தனைகளைக் காணும் வசதி
- எளிதில் இனங்காணும் வகையில் கணக்குகளுக்கு நீங்கள் விரும்பிய பெயர்களைச் சூட்டும் வசதி
- கணக்குகள் வரிசையில் குறிப்பிட்ட கணக்கொன்றை எப்போதும் முதலாவதாக வைத்துக்கொள்வதற்கான ‘Default Account’ வசதி
தகைமை
கூட்டுக் கணக்குரிமையாளர்கள் உட்பட வங்கியில் பதிவுசெய்துகொண்ட செல்லுபடியான கைபேசி எண்ணைக் கொண்டுள்ள தனிப்பட்ட சேமிப்பு / நடைமுறைக் கணக்குரிமையாளர்கள்
கட்டணங்களும் அறவீடுகளும்
BOC Smart Passbookஐ இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்
இப்போதே BOC Smart Passbookஐ பதிவிறக்கிக் கொள்ளுங்கள்!
மேலதிகத் தகவல்களுக்கு அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளையை நாடவும் அல்லது 1975 / 0112204444 என்ற எண்ணின் ஊடாக எமது அழைப்பு மையத்தைத் தொடர்புகொள்ளவும்.
