BOC வழங்கும் ஸ்மார்ட் இணைய வங்கிச்சேவை மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உங்கள் வங்கிச் செயற்பாடுகளை நிர்வகித்துக்கொள்ளலாம். இது பல பயனுள்ள அம்சங்களுக்கு எளிமையானதும் திறன்மிக்கதுமான இடைமுகத்தை வழங்குவதோடு சர்வதேச பயனர்களுக்கான பன் மொழித் தெரிவுகளையும் வழங்குகிறது. கணக்கு விசாரணை, பண அனுப்பல், கட்டணம் செலுத்துதல், இலங்கை வங்கிக் கடனட்டைச் செயற்பாடுகள், விரும்பிய முறையில் அமைப்புகளைத் தனிப்பயனாக்கம் செய்யும் வசதி, இலங்கை வங்கிக் கணக்குகளை நிர்வகித்தல் (இதன் இயங்குதிறன் கைபேசி தேடுபொறி, கைபேசிச் செயலி, இணையம் எனப் பயன்படுத்தப்படும் இடைமுகத்தைப் பொறுத்து வேறுபடும்) ஆகியவை சில முக்கிய அம்சங்களில் அடங்கும்.
கைபேசி வங்கிச் சேவையின் உண்மையான பெறுமதியை அனுபவித்திடுங்கள்
- இணைய வங்கிச் சேவையில் உள்நுழைய பாதுகாப்பு குறியீடுகளை உருவாக்கும் வசதி அல்லது பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பாகச் சரிபார்க்கும் வசதி
- உங்களின் அனைத்து இலங்கை வங்கி உள்நாட்டுக் கணக்குகளையும் ஒரே இடத்தில் பார்க்கும் கணக்குக் கூற்றுகளைப் பதிவிறக்கும் வசதி
- உள்நாட்டுப் பண அனுப்பல்களின் பொருட்டு விரைவாகவும் பாதுகாப்பாகவும் புதிய பயனாளிகளைச் சேர்க்கும் வசதி
- ஒரு சில படிமுறைகளில் நிலையான வைப்புக் கணக்கிற்கு விண்ணப்பித்துத் திறக்கும் வசதி
- எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் உங்கள் கடவுச்சொல்லை உங்கள் வசதிக்கேற்ப மீளமைக்கும்/உள்நுழையும் வசதி
பதிவு
- வங்கியில் பதிவுசெய்துகொண்ட செல்லுபடியான கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி அல்லது NFC வசதியுள்ள பற்றட்டை என்பவற்றைக் கொண்டுள்ள தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் தம்மைச் சுயமாகப் பதிவுசெய்துகொள்ளலாம்.
- அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளைக்குச் சென்று உங்களுடைய செயலியைச் சமர்ப்பியுங்கள் (தனிப்பட்ட மற்றும் நிறுவன வாடிக்கையாளர்கள்)
அம்சங்கள்
இலங்கை வங்கியானது உங்களுக்கான அனைத்து இணைய வங்கித் தீர்வுகளையும் உங்கள் விரல் நுனியில் வழங்குகிறது. இதன் மூலம் உங்கள் வீட்டில்/பணியிடத்தில் இருந்துகொண்டே வசதியாக உங்கள் வங்கிக் கணக்குகளை நிர்வகிக்க முடியும். இலங்கை வங்கி இணைய வங்கி என்பது உள்ளங்கைக்கே வங்கிச் சேவைகளைக் கொண்டுவரும் செயலியாகும்.
- இலங்கை வங்கிக் கணக்குகளுக்கும் ஏனைய வங்கிக் கணக்குகளுக்கும் பணம் அனுப்பும் வசதி
- கட்டணங்களைச் செலுத்த வேண்டிய வணிக நிறுவனங்கள் பட்டியல் ஏற்கனவே செயலியில்
-நுகர்பயன் சேவைக் கட்டணங்கள் (CEB, LECO, Water Board)
-கைபேசி, CDMA, தொலைக்காட்சி, Broadband வலையமைப்புகள் (Airtel, Hutch, Mobitel, Lanka Bell, SLT, Dialog)
-அரச திணைக்களங்கள் (உள்நாட்டு இறைவரித் திணைக்களம், பரீட்சைத் திணைக்களம், EPF, BOI, Ceypetco, DLB, நெடுஞ்சாலைகள்)
-அதிவேக நெடுஞ்சாலைகள் (அதிவேக நெடுஞ்சாலை நுழைவுக் கட்டண மீள்நிரப்பல்கள்)
-SriLankan Airlines
-Sri Lanka Standards நிறுவகம்
-பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
-நிதி நிறுவனங்கள் (Abans Finance, AMW Capital Leasing, Arpico Finance, Assetline, Ideal Finance, LB Finance, Nation Lanka)
-நிதி, வர்த்தக நிதி மற்றும் முதலீடுகள் நிறுவனம், Vallibel Finance
-SLPA (Cargo JCT மற்றும் பிற, உள்நுழைவு அனுமதிகள், கப்பற் சேவைகள், இலங்கைச் சுங்கம்)
-காப்புறுதி வழங்குநர்கள் (AIA Insurance, Ceybank Insurance, Ceylinco Insurance, Sri Lanka Insurance, Union Assurance)
-ஏனைய கட்டணங்கள் (SLIIT, Trico Logistics, Oriflame)
மேலதிகத் தகவல்களுக்கு 1975 அல்லது +94 11 220 4444 என்ற எண்ணின் ஊடாக எமது அழைப்பு மையத்தைத் தொடர்புகொள்ளவும் அல்லது info@boc.lk என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.