உங்களுக்கு மிகப் பிடித்த சமூக ஊடக தளத்தின் ஊடாக உங்கள் வங்கித் தேவைகளை எளிதாக்க எங்களின் பல்தரப்பட்ட சேவைத் தளங்கள் தயாராக உள்ளன.

BOC META வங்கிச்சேவை – இலங்கை வங்கியின் WhatsApp வங்கிச் சேவையானது வழக்கமான வங்கிக் கணக்கு தொடர்பான விசாரணைகள், நடைமுறை, சேமிப்புக் கணக்கு, கடன்கள், நிலையான வைப்பு மீதிகள் தொடர்பான விசாரணை/சிற்றறிக்கை வசதி என இன்னொரன்ன வசதிகளுடன் கடன் அட்டை மீதி விசாரணை வசதி, வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவதைக் கண்காணித்தல் வசதி, நேரடியாக முகவருடன் உரையாடும் வசதி ஆகியவற்றை இலங்கையில் முதன்முறையாக வழங்குகிறது.

WhatsAppஇல் உரையாடுங்கள்

  • 011 220 4444 என்ற இலங்கை வங்கியின் (WhatsApp) இலக்கத்துக்கு அழைத்து ‘Hi’ என்று சொல்வதன்மூலம் உடனேயே உரையாடலை தொடங்க முடியும்.
  • உங்கள் கைபேசியின் contact listஇல் 011 220 4444 என்ற இலங்கை வங்கியின் (WhatsApp) இலக்கத்தைச் சேமித்து உடனடியாக உரையாடலைத் தொடங்கவும்.
  • இது ஒரு சாதனத்திலிருந்து இன்னொரு சாதனத்துக்கு மட்டுமேயான மறைகுறியாக்க வசதியுள்ள தொடர்பு என்பதால் உங்கள் தகவல்களின் இரசியத்தன்மை பாதுகாப்பு என்பன பற்றிக் கவலைகொள்ளத் தேவையில்லை​.

அம்சங்களும்  நன்மைகளும்

  • 24x7 மணிநேர வங்கிச் சேவை
  • பாதுகாப்பான மற்றும் வசதியான வங்கிச் சேவை
  • நிதி விசாரணைகளும் பிற சேவைகளும்
  • Live Chat ஊடாக வாடிக்கையாளருக்கு உதவுதல்
  • உங்களது தே.அ.அட்டை மற்றும் தொலைபேசி எண்ணுடன் (உள்ளூர் மற்றும் வெளிநாட்டு) சுய பதிவு வசதி 
  • BOC வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும் கட்டணங்கள், பணம் அனுப்புதல் கண்காணிப்பு, BOC ATM மற்றும் அருகிலுள்ள கிளைகளைக் கண்டறிதல் போன்ற சேவைகளை பெறலாம்
  • BOC வாடிக்கையாளர்கள் கணக்கு மீதி/பரிவர்த்தனை விசாரணைக்கு பதிவு செய்யலாம்

தகுதி

  • BOC மற்றும் BOCஅல்லாத வாடிக்கையாளர்கள்

 

சேவைக் கட்டணம் மற்றும் கட்டணங்கள்»

BOC META வங்கி சேவை “இலவசமானதாகும்”»