இலங்கை வங்கியின் அட்டையின்றிப் பணம் மீளப்பெறும் / அனுப்பும் வசதியானது ATM/CRM இயந்திரங்களிலிருந்து பணம் எடுத்தல், மூன்றாம் தரப்பு நபர்களுக்கு பணம் அனுப்புதல் முதலான செயற்பாடுகளை மிக எளிதாக மாற்றியுள்ளது. வங்கியால் வழங்கப்பட்ட பற்றட்டை (டெபிட் காட்) கைவசம் இல்லாதபோதும் அவசர சூழ்நிலைகளின்போதும் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கு இவ்வசதி இன்றியமையாதது.

அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளைக்குச் சென்று இவ்வசதியைச் செயற்படுத்திக்கொள்ளுங்கள்.

நன்மைகள்

  • 24 மணிநேர சேவை
  • பாதுகாப்பானதும் வசதிகரமானதுமான கொடுக்கல் வாங்கல் வசதி
  • பணம் மீளப்பெறலுக்கு பற்றட்டை தேவையில்லை
  • பயனாளிகளின் கணக்கிலக்கமின்றி சிறிய கொடுப்பனவுகளை மேற்கொள்ளக்கூடிய வசதி
  • உறவினருக்கோ சிறாருக்கோ உடனடியாகப் பணம் அனுப்ப முடியும்
  • பணத்தை எடுப்பவர் நேரில் வரவேண்டிய தேவை இல்லை. மூன்றாம் தரப்பினருக்கான பரிவர்த்தனை ஒரு நாள் (இருபத்து நான்கு மணித்தியாலங்கள்) செல்லுபடியாகும்
  • Transaction Key (T- Key) எனப்படும் இரகசிய இலக்கத்தைப் பயன்படுத்தி இலங்கை வங்கி வாடிக்கையாளரல்லாதோருக்கும் பரிவர்த்தனை செய்யக்கூடிய வாய்ப்பு

தகுதி

  • இலங்கை வங்கி வாடிக்கையாளர்கள் (தனிநபர் கணக்கு வைத்திருப்போர்) – அட்டைகளற்ற பணமீளப்பெறல் மற்றும் (T- Key)ஐ உருவாக்கி அனுப்பும் வசதி.
  • T-Key அனுப்பப்படும் நபர் இலங்கை வங்கி ATM/CRM இயந்திரங்களிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்

அட்டையற்ற சேவைத் தெரிவுகள்

  • கணக்குரிமையாளர் அட்டையின்றிப் பணம் மீளப்பெறல் 
    இச்சேவைக்காகப் பதிவுசெய்ததன் பின்னர் இலங்கை வங்கி வாடிக்கையாளர்கள் எந்தவொரு இலங்கை வங்கி ATM/CRM இயந்திரத்திலிருந்தும் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
  • (T- Key)ஐ பயன்படுத்தி எந்தவொரு நபருக்கும் பணம் அனுப்புதல் 
    இலங்கை வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பற்றட்டையைப் பயன்படுத்தி எந்தவொரு இலங்கை வங்கி ATM/CRM இயந்திரத்திலிருந்தும் (T- Key)ஐ உருவாக்கி வேறெந்தவொரு நபரினதும் கைபேசி எண்ணுக்கு அனுப்ப முடியும்.
  • (T- Key)ஐ பயன்படுத்தி மூன்றாம் தரப்பு நபர்கள் பணம் பெறுதல்  
    T-Key அனுப்பப்படும் நபர்கள் அது செல்லுபடியாகும் காலப்பகுதிக்குள் எந்தவொரு இலங்கை வங்கி ATM/CRM இயந்திரத்திலிருந்தும் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்

பரிவர்த்தனை வரையறைகள்

  • சொந்தக் கணக்கிலிருந்து பணம் எடுத்தல்
        ›  ஆகக்கூடிய நாளாந்தப் பரிவர்த்தனை வரையறை – 100,000 ரூபாய்
        ›  ஒரு நாளைக்கான மொத்தப் பரிவர்த்தனை வரையறை – 100,000 ரூபாய்
        ›  ஒரு நாளில் மேற்கொள்ளக்கூடிய பண மீளப்பெறல்களின் எண்ணிக்கை –  05 முறை
  • Transaction Key (T- Key) – 24 மணித்தியாலத்துக்குச் செல்லுபடியாகும்
        ›  ஆகக்கூடிய நாளாந்தப் பரிவர்த்தனை வரையறை – 25,000 ரூபாய்
        ›  ஒரு நாளைக்கான மொத்தப் பரிவர்த்தனை வரையறை – 25,000 ரூபாய்
        ›  ஒரு நாளில் மேற்கொள்ளக்கூடிய பண மீளப்பெறல்களின் எண்ணிக்கை – 03 முறை

கட்டணங்களும் அறவீடுகளும்

  • சொந்தக் கணக்கிலிருந்து பணம் எடுத்தல் (அட்டையின்றி) – 5 ரூபாய்
  • (T- Key)ஐ பயன்படுத்தி பணம் பெறுதல் – 30 ரூபாய்

 

அட்டையின்றிய பண மீளப்பெறல் தொடர்பான விதிகளும் நிபந்தனைகளும் »

அட்டையின்றிய பண மீளப்பெறல் விண்ணப்பம்n »