CTRA கணக்கினுடைய நோக்கம்

  • புலம் பெயர் கொடுப்பனவினையும் தற்போதைய வெளிநாட்டு வருமானத்தினையும் கோருதல்
  • தகைமையுடைய நபர்கள் இலங்கையிலிருந்து வெளியேரும் போது அல்லது இலங்கைக்கு வெளியே வசிக்கும் போது மாத்திரமே புலம்பெயர் கொடுப்பனவை கோரலாம் (ஆரம்பத்திலோ அல்லது தொடர்ச்சியாகவோ)
  • தகைமையுடைய பராயமடையாத நபர்கள் CTRAஐ திறக்கலாம். எவ்வாறாயினும் குறித்த நபர் 18 வயதினை அடைந்த பிற்பாடே அவர் புலம் பெயர் பரிமாற்றத்துக்குத் தகைமையுடையவராவார்.


அம்சங்கள்

  • CTRA கணக்கினை சேமிப்பு கணக்காக அல்லது நடைமுறைக் கணக்காக இலங்கை ரூபாவில் திறந்து பேண முடியும்.
  • CTRA நடைமுறைக் கணக்கிற்கு காசோலை புத்தகமொன்றினை வழங்கலாம். இருப்பினும் மிகைப்பற்று வசதிகள் வழங்கப்படமாட்டாது. 
  • தகைமையுடையவர்கள் CTRA கணக்கொன்றினை மாத்திரம் திறக்கலாம்.
  • தகைமையுடையவர்கள் CTRA ஐ தனியான கணக்காக வைத்திருக்கலாம். 
  • தகைமையுடைய பராயமடையாதவர்களுக்கான CTRA கணக்கினை அவர்களது பிறவிப்பாதுகாவலர் அல்லது சட்ட ரீதியாக நியமிக்கப்பட்ட பாதுகாவலர் மட்டுமே திறக்கமுடியும். (18 வயதிற்கும் குறைந்தநபர்கள்).
  • ஆரம்பவைப்பு மற்றும் குறைந்தபட்ச மீதித் தேவைப்பாடானது CTRA சேமிப்பு அல்லது நடைமுறைக்கணக்குகளிற்கு பொருத்தமுடையதாகாது.


CTRA இன் வகைகள்
 

  • CTRA
  • CTRA(நிர்வாகதாரர் அல்லது நிறைவேற்றுநர்)
  • CTRA   (பராயமடையாதோர்)
     

 

தகைமை
  • இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் வசிக்கின்றபுலம் பெயர்ந்த நபரொருவர்
  • இலங்கையிலோ இலங்கைக்கு வெளியிலோ வசிக்கின்ற பிரஜையல்லாதவரும் அத்தகையவர்களைப் போன்ற பருவமடையாதவர்களும்
  • 18 வயதினைஅல்லது அதற்குமேற்பட்ட இன்னொரு நாட்டினது தற்காலிக வதிவிட விசாவினை பெற்றுள்ள இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் வதியும் இலங்கையர்
  • பெற்றோருக்கான புலம் பெயர்திட்டத்தின் கீழ்புலம் பெயர எதிர்பார்த்திருக்கும் இலங்கையை வதிவிடமாகக் கொண்ட இலங்கையர்
  • புலம்பெயர்ந்து மரணமடைந்த நபர் ஒருவரினது சொத்துக்களை நிர்வகிப்பவர் அல்லது நிறைவேற்றுநராக உள்ள ஒருவர்.
    ‘குடிபெயர்ந்தவர்’ என்பவர்யாரெனில்
    அ).    இன்னொரு நாட்டில் நிரந்தரவதிவிட அந்தஸ்தை அல்லது பிரஜாவுரிமையைப் பெற்ற இலங்கையர் ஒருவர்.
    ஆ).    தந்தையோ தாயோ இலங்கையில் பிறந்த இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டுள்ள இலங்கையர் அல்லது
    இ).    தந்தையோ தாயோ இலங்கையில் பிறந்து குறித்த நபரின் பிறப்பு  இலங்கையில் பதியப்பட்டிருக்கும் இலங்கையரல்லாதவர்

 அத்துடன் பந்தி அ, ஆ, இ, ஆகியவற்றில் குறிப்பிடப்பட்ட பராயமடையாதவர்களும் இதில் உள்ளடங்குவர்
 

CTRA ஒன்றினை திறப்பதன் தேவைப்பாடுகள்
  • தகைமையுடைய நபரொருவருக்கு CTRA கணக்கினைத் திறப்பதற்கு முன்னர் அந்நியச் செலாவணி திணைக்களபணிப்பாளரிடமிருந்து பதிவிலக்கமொன்றினை வங்கி பெற்றுக்  கொள்ள வேண்டும்.
  • தகைமையுடையவர்கள் பின்வரும் ஸ்கான் செய்யப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும். (பொருத்தமான வகையில்)
    i.    பூரணப்படுத்தப்பட்ட படிவம் (வங்கியினால் பூரணப்படுத்தப்படும்)
    ii.   தற்போதையகடவுச்சீட்டினுடையஅடையாளபக்கம்,மாற்றுவழிமற்றும்அவதானிப்புபக்கங்கள்என்பவற்றினதுபிரதி
    iii.  நிரந்தரவதிவிடஉரிமை (PR) அல்லது நிரந்தரவதிவிடத் திகதி மற்றும் நாடு என்பவற்றை அத்தாட்சிப்படுத்துகின்ற ஏனைய       ஆவண ரீதியான சான்றின் / களின் பிரதி
    iv.    பிரஜாவுரிமையினது அல்லது இரட்டை பிரஜாவுரிமை சான்றிதழின் பிரதி
    v.    குடி பெயர்ந்தவர் இலங்கைக்கு வெளியே பிறந்திருந்தால் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட பிறப்புச்சான்றிதழின் பிரதி (இருப்பின்)
  • மேலுள்ள ஆவணங்களுக்கு மேலதிகமாக பின்வரும் ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
                கணக்குத் திறக்கும் விண்ணப்பங்கள்
                வாடிக்கையாளர் பதிவு விண்ணப்பம்
                Know Your Customer(KYC) படிவம்
                பொருத்தமெனில் FATCA பிரகடனம்
                பொருத்தமெனில் வரி பிரகடனம்
  • முகவரியை உறுதிப்படுத்தும் ஆவணங்கள். (வங்கிக்கு வழங்கப்பட்ட விலாசமானது தேசிய அடையாள அட்டை / வாகன அனுமதிப்பத்திரம் / கடவுச்சீட்டு என்பவற்றிலிருந்து மாறுபடுமாயின்)
  • இலங்கைக்கு வெளியே வாசிக்கின்ற மற்றும் கிளைக்கு சமூகமளித்து இக்கணக்கனைத் திறக்க முடியாத தகைமையுடைய தனிநபர் CTRA கணக்கினைத் திறப்பதற்கான விண்ணப்பங்களின் மூலப் பிரதிகள் மற்றும் ஏனைய துணை ஆவணங்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ள யாராயினுமொருவரிடம் அத்தாட்சிப்படுத்தி உரியவங்கிக்கிளைக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
    i.    BOC வியாபார மேம்பாட்டு உத்தியோகத்தர் (BPO)
    ii.   BOC வங்கிகளது / வெளிநாட்டில் உள்ள வங்கியினது அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள்
    iii.   இலங்கை தூதரகத்தினது அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள்
     
புலம் பெயர்வு கொடுப்பனவின் எல்லை

வாடிக்கையாளர் வகை

புலம் பெயர்வு கொடுப்பனவு வகை

USD  எல்லைகள்

குடிபெயர்ந்தோர்ஆரம்ப புலம் பெயர்வு கொடுப்பனவுஅதிகபட்சம் 100,000 USD

 
வருடாந்த புலம்பெயர்வு கொடுப்பனவுஅதிகபட்சம் 30,000 USD
தற்காலிக வதிவிட விசாவினை கொண்டுள்ளவர்புலம் பெயர்வு கொடுப்பனவுஅதிகபட்சம் 30,000 USD

 

குறிப்பு
2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நியச் செலவாணிசட்டத்தின் (FEA) பிரிவு 22 இன் கீழும் 2022 ஜூன் 30 திகதிய 2286/27 ஆம் இலக்க அரசவர்த்தமானியின் (அதிவிசேட) கீழும் நடைமுறைப்படுத்தப்படும் மேற்கூறப்பட்ட எல்லைகள் கட்டுப்பாடுகள் என்பன 2022 ஜூன் 28 ஆம் திகதியிலிருந்து 6 மாதங்களுக்கே செல்லுபடியாகும்.
 

1. Initial migration allowance is having a cumulative limit of equivalent of USD 200,000 
2. For aforesaid limits, the restrictions and limitations implemented under the Government Gazette (Extraordinary) No. 2467/67 dated 18th December 2025 under the section 22 of the Foreign Exchange Act, No. 12 of 2017 (FEA) valid for a period of six months from the date of 20th December 2025

For more details you may contact,  
International Customer Service Support Unit  
Tel No. - +94112203859/3860/3886/3887  
email -   fc@boc.lk  
WhatsApp/Viber/Imo : +94 707 203203/ +94 707 204204 / +94 707 205205
 

For any assistance 

Foreign Circle
International Customer Service Support Unit

+94 11 220 3859
+94 11 220 3860
+94 11 220 3886
+94 11 220 3887

 
+94 707 203203
+94 707 204204
+94 707 205205

 fc@boc.lk