திருமதி. சுபானி நாணயக்கார
பதிற் பிரதம சட்ட அதிகாரி
திருமதி. சுபானி நாணயக்கார அவர்கள், 2025 டிசம்பர் 1 ஆம் திகதி முதல் வங்கியின் பதிற் பிரதம சட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சுமார் 25 ஆண்டுகால சட்டத்துறை அனுபவம் கொண்ட இவர், கடந்த 21 ஆண்டுகளாக இலங்கை வங்கியில் மிகச்சிறந்த சேவையாற்றி வருகின்றார். இக்காலப்பகுதியில்கடன் மீட்பு, கடன் வழங்கல் மற்றும் மனிதவள முகாமைத்துவம் தொடர்பான சட்ட விவகாரங்களில் அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இலங்கை வங்கியில் இணைவதற்கு முன்னர், அவர் சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட நாட்டின் முன்னணி சட்ட நிறுவனங்களில் பணியாற்றி, பரந்த தொழில்முறை அனுபவத்தைப் பெற்றுள்ளார்.
2020 பெப்ரவரி முதல், இவர் உதவித் தலைமைச் சட்ட அதிகாரியாக (மீட்பு மற்றும் வழக்கு முகாமைத்துவம்) பணியாற்றி வருகின்றார். வங்கியின் கடன் மீட்பு சார்ந்த வழக்குகள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளில் முதன்மைக் கவனம் செலுத்தி வரும் இவர், வங்கிக்குத் தேவையான மூலோபாய சட்ட ஆலோசனைகளை வழங்கி வருகின்றார். வங்கியின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், நிறுவன இலக்குகளை அடைவதற்கும், வங்கிக்கு எதிரான உயர் பெறுமதியுடைய கோரிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கும், சரியான நேரத்தில் பயனுள்ள சட்டத் தலையீடுகளை மேற்கொள்வதற்கும்இவர் பொறுப்பு வகிக்கின்றார்.
திருமதி. நாணயக்கார அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும் (இரண்டாம் வகுப்பு மேல் பிரிவு), ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில்சட்ட முதுமாணிப் பட்டத்தையும் (LLM) பெற்றுள்ளார். அத்துடன், உயர் சட்டக் கல்வி நிறுவனத்தில் (IALS) நிதி, வங்கி மற்றும் காப்பீட்டுச் சட்டங்களில் முதுமாணி டிப்ளோமாவையும், பண்டாரநாயக்க சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தில் (BCIS) சர்வதேச விவகாரங்களுக்கானடிப்ளோமாவையும் பூர்த்தி செய்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுக்கள், தொழிலாளர் ஆணையாளர், மனித உரிமைகள் ஆணைக்குழு, நிதி குறைதீர்ப்பாளர் மற்றும் வாடகை வாரியம் உள்ளிட்ட பல்வேறு ஒழுங்குமுறை மற்றும் பகுதியளவு நீதித்துறைசார் (Quasi-judicial) அமைப்புகளுக்கு முன்பாக இவர் வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். மேலும், சட்ட ரீதியான கடன் மீட்பு நடவடிக்கைகளுக்கானவளவாளராக உள்வாரி மற்றும் வெளிவாரிப் பயிற்சித் திட்டங்களுக்கும்தனது பங்களிப்பை வழங்கி வருகின்றார்.
இவர் ஒரு சிறந்த தடகள மற்றும் பூப்பந்து வீராங்கனையாவார். தேசியமயமாக்கப்பட்ட சேவைகள் போட்டிகளில் இலங்கை வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 'வர்ண விருதுகளை' வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.