director-image

திருமதி.ஜானகி சேனநாயக்க சிறிவர்தன

பணிப்பாளர் சபையின் செயலாளர் / இலங்கை வங்கியின் செயலாளர்

இலங்கை வங்கிப் பணிப்பாளர் சபையின் செயலாளரான திருமதி.ஜானகி சேனாநாயக்க சிறிவர்தன 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறுவன முகாமைத்துவ குழுவிற்கு நியமிக்கப்பட்டார். தொழில்முறை சட்டத்திரணியான திருமதி.ஜானகி சிறிவர்தன சட்ட இளமாணி பட்டத்தினைப் பெற்றவராவார். திருமதி.ஜானகி இலங்கை வங்கியில் நிறுவன நிர்வாகத்திற்கு பொறுப்பான நிறுவனச் செயலாளராக 25 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டிருக்கிறார். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகத்தில் முதுமாணி (மெரிட்) பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

திருமதி. சிறிவர்தன இலங்கை வங்கியில் இணைவதற்கு முன்னர் தனியார் துறையில் நிறுவனச் செயலாளராக பணியாற்றியுள்ளார். இலங்கையின் களனிப் பல்கலைக்கழகத்தின் கைத்தொழில் முகாமைத்துவத் துறையின் வணிக மற்றும் கைத்தொழில் சட்ட பாடத்தின் வருகை தரும் விரிவுரையாளராகவும் பரீட்சகராகவும் நெறியாளராகவும் பணியாற்றியுள்ளார்.