director-image

திருமதி எம்.எம்.ஆர்.பி.பெர்னாண்டோ

பிரதிப் பொது முகாமையாளர் (மாகாண அறவீடு)

திருமதி.எம்.எம்.ஆர்.பி.பெர்னாண்டோ 2023ஆண்டு மார்ச் மாதம் நிறுவன முகாமைத்துவத்திற்கு நியமிக்கப்பட்டார். தற்போது இவர் மாகாண அறவீடுகளுக்கான பிரதிப்பொது முகாமையாளராக பதவி வகிக்கின்றார். இதற்கு முன்பு, இவர் அபிவிருத்தி வங்கியியல் மற்றும் கிளைக் கடன் செயற்பாடுகள்- வீச்சு-II இற்கான பிரதிப் பொது முகாமையாளராகவும் வர்த்தக சேவைகளுக்கான உதவிப் பொது முகாமையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சில்லறை வங்கியியல், நிறுவன வங்கியியல் மற்றும் வர்த்தக நிதியளிப்பு ஆகிய துறைகளில் 27 வருடகால பரந்த அனுபவத்தைப் பெற்றுள்ளார்.

இவர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பிரிவுகளில் சிறந்த அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், வர்த்தக நிதிப் பிரிவிலும் பணியாற்றியுள்ளார். குறிப்பாக, திருமதி.பெர்னாண்டோ வெளிநாட்டு வங்கியியலுடன் தொடர்புடைய இறக்குமதிச் செயற்பாடுகளை நிறைவேற்றுவதில் தேர்ச்சி பெற்றவராவார். தனது வழமையான கடமைகளுக்கு அப்பால், வங்கியியல் நடை முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்துடன் தொடர்புடைய ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் சான்றிதழ் கற்கைநெறி/உயர்தர சான்றிதழ் கற்கைநெறிக்கு 2018ஆம் தொடக்கம் 2022 வரையில் வளவாளராக செயற்பட்டார். 

திருமதி. பெர்னாண்டோ வியாபார அலகை பிரதிநிதித்துப்படுத்தி இலங்கை, மாலைதீவு, சிஷெல்ஸ் மற்றும் சென்னை போன்ற நான்கு அமுல்படுத்தல் வலயங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள புதிய வர்த்தக நிதி மென்பொருள் தீர்வினது செயற்திட்ட முகாமையாளராக செயற்பட்டார்.

திருமதி.பெர்னாண்டோ 2021/2022ஆம் ஆண்டுகளுக்கான வர்த்தக நிதி வங்கியாளர் சங்கத்தின் (TFAB) மூத்த பிரதித் தலைவராக பதவி வகித்துள்ளதோடு 2023/24 ஆம் ஆண்டிற்கான TFAB இன் தலைவராக இருந்தார். இவர் இலங்கை தொழில்முறை வங்கியாளர்கள் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் உள்ளார்.

திருமதி. பெர்னாண்டோ கொழும்பு பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகத்தில் இளமாணி பட்டத்தினைப் பெற்றுள்ளதோடு நிதி நிர்வாகத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் இணை உறுப்பினராகவும் உள்ளார். ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டப்பின் கற்கைகளுக்கான நிறுவனம் நடத்திய முக்கிய முகாமைத்துவப் பணியாளர்களுக்கான முகாமைத்துவ அபிவிருத்தி திட்டத்தை இவர் வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளார்.