திருமதி. பிரியந்தி விஜேசேகர
பிரதிப் பொது முகாமையாளர்
திருமதி.பிரியந்தி விஜேசேகர 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உதவிச் சேவைகளுக்கான பிரதிப் பொது முகாமையாளராக நியமனம் பெற்று வங்கியின் நிறுவன முகாமைத்துவத்திற்குள் உள்வாங்கப்பட்டார். இவர் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உதவிப் பொது முகாமையாளராக பதவி உயர்வு பெற்றதுடன் நிர்வாக சேவைகள், சந்தைப்படுத்தல், வெளிநாட்டு கிளைகள் மற்றும் கடன் கணக்காய்வு ஆகிய துறைகளுக்கான உதவிப் பொது முகாமையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சந்தைப்படுத்தலுக்கான உதவிப் பொது முகாமையாளராக பணியாற்றும்போது சந்தைப்படுத்தல் குழுவின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
திருமதி.பிரியந்தி விஜேசேகர வங்கித் துறையில் 32 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைகொண்ட தொழில்வாண்மைமிக்கவராவார். இவர் சில்லறை வங்கியியல், நிறுவன கடன், அறவீடு, வெளிநாட்டு வங்கியியல், நிர்வாக சேவைகள், சந்தைப்படுத்தல், வெளிநாட்டு கிளைகள் மற்றும் கடன் கணக்காய்வு போன்ற பிரிவுகளில் பல்வேறு பதவிநிலைகளை வகித்து வங்கிக்குச் சேவையாற்றியுள்ளார். திருமதி.விஜேசேகர 2002/2003ஆம் வருடங்களில் இலங்கை வங்கியின் இலண்டன் கிளையில் பணிபுரிந்து வெளிநாட்டு வங்கிச் சேவையிலும் அனுபவத்தை பெற்றுக்கொண்டார்.
இவர் இலண்டன் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் சிறப்புத் தேர்ச்சியுடன் வியாபார நிர்வாகத்தில் முதுமாணி பட்டத்தினைப் பெற்றுள்ளார். ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத்தில் பட்டப்பின் டிப்ளோமாவையும் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் தேசிய தொழில்நுட்பத்தில் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். இவர் இலங்கை வங்கியாளர்கள் நிறுவகத்தின் சக உறுப்பினராகவும் சீபாங் ஹோலிடே ஹோம்ஸ் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தினதும் ஹோட்டல்ஸ் கொழும்பு (1963) வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தினதும் பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.