திரு. துல்சி அலுவிஹாரே
சுயாதீன, நிறைவேற்று அல்லாத பணிப்பாளர்
திரு. டி. ஜீ. அலுவிஹாரே அவர்கள் 2025 செப்டம்பர் 16 ஆம் திகதி அன்று இலங்கை வங்கி பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டார்.
அவர், முதலீட்டுத் தந்திரோபாயம், கொடுக்கல்வாங்கல்ஆலோசனை, ஆதனக் கையுதிர்ப்பு,மூலதனம் திரட்டுதல்மற்றும் மறுசீரமைப்பு போன்றவற்றில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு அனுபவம்மிக்க வணிக வியூக நிபுணரும், சர்வதேச அனுபவமுள்ள ஒரு முதலீட்டுத் துறைசார் நிபுணரும் ஆவார். இவருக்கு இலண்டன், மெல்பேர்ன் மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களில் 25 வருடங்களுக்கும்மேலான பணி அனுபவம் உள்ளது.
திரு. அலுவிஹாரே அவர்கள் சி.எச்.இ.சி. போர்ட் சிட்டி கொழும்பு (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராகப் பணியாற்றுகிறார். அத்துடன், இலங்கையின் முதலாவது வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்தும் பல் சேவை சிறப்புப் பொருளாதார வலயத்தை (Special Economic Zone - SEZ) நிறுவுவதற்கான கொழும்பு சர்வதேச நிதி மையம் (Colombo International Financial Centre - CIFC) - வழிநடத்தல் குழுவின் செயலணி உறுப்பினராகவும் இருந்தார். கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டம் இயற்றப்பட்டதன் பின்னர், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDIs) மேம்படுத்துவதும், சர்வதேச வணிக நிறுவனங்கள் துறைமுக நகரில் அமைவதற்கான ஈர்ப்பை உருவாக்குவதும் திரு. அலுவிஹாரே அவர்களின் முதன்மைப் பணியாக உள்ளது. துறைமுக நகரத் திட்டம் என்பது, தற்போதுள்ள கொழும்பு மத்திய வணிக மாவட்டத்தின் விரிவாக்கமாக, 15 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்படும் புதிய நகர அபிவிருத்தித் திட்டமாகும்.
சி.எச்.இ.சி. போர்ட் சிட்டி கொழும்பு (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தில் இணைவதற்கு முன்னர், திரு. அலுவிஹாரே அவர்கள் இலங்கையிலுள்ள மற்றும் மாலைதீவிலுள்ள பி.டபிள்யூ.சி. (PwC) நிறுவனத்தில், இணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல் பிரிவின் தலைவராகவும், பணிப்பாளராகவும்இருந்தார். பி.டபிள்யூ.சி. நிறுவனத்துடன் 14 ஆண்டுகள் பணியாற்றிய அவர், ஆஸ்திரேலியாவின்மெல்பேர்னில் உள்ள பி.டபிள்யூ.சி. நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் எல்லை தாண்டிய கொடுக்கல்வாங்கல்களில்ஈடுபட்டிருந்தார். மேலும், இணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல் தொடர்பான உலகளாவிய பி.டபிள்யூ.சி. பயிற்சி வழங்குநர்கள் குழுவிற்கும் துல்சி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், கோபன்ஹேகன், ஸ்டாக்ஹோம், டப்ளின், ரோம், வார்சோ மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெற்ற ஆலோசனைப் பல்கலைக்கழகத் திட்டத்தில் (Advisory University Program) முகாமையாளர்களுக்குப் பயிற்சிகளை வெற்றிகரமாக வழங்கியுள்ளார்.
தற்போது, அவர் அபாண்ஸ் ஃபைனான்ஸ் பிஎல்சி (Abans Finance PLC) மற்றும் எக்ஸ்பாக் கோருகேட்டட் கார்ட்டூன்ஸ் பிஎல்சி (Expack Corrugated Cartons PLC) ஆகியவற்றின் நிறைவேற்று அல்லாத, சுயாதீனப் பணிப்பாளராகப் பணியாற்றுகிறார்.
திரு. அலுவிஹாரே அவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் வெஸ்ட் லண்டன் பல்கலைக்கழகத்தின்பொருளியல் பட்டதாரியாவார். மேலும், அவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில்நிதிப் பொருளியலில் முது விஞ்ஞானமாணி (MFE) பட்டத்தையும் பெற்றுள்ளார்.