director-image

திரு. சுரேஷ் பெரேரா

பிரதிப் பொது முகாமையாளர் (தயாரிப்புகள் மற்றும் வங்கி மேம்பாடு)

திரு. சுரேஷ் பெரேரா அவர்கள், 2026 ஜனவரி மாதம் இலங்கை வங்கியின் பிரதிப் பொது முகாமையாளராக (தயாரிப்புகள் மற்றும் வங்கி மேம்பாடு) நியமிக்கப்பட்டார். வங்கித் துறையில் 23 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், கடந்த இரண்டு தசாப்தங்களாக வங்கியின் மிக முக்கிய மாற்றங்களுக்குரிய முயற்சிகளில் முன்னின்று செயற்பட்டு வருகின்றார்.

2002 மார்ச் மாதம் இலங்கை வங்கியில் இணைந்த திரு. பெரேரா, 2019ஆம் ஆண்டு உதவிப் பொது முகாமையாளர் (AGM) நிலைக்குப் பதவி உயர்வு பெற்றார். தனது வங்கித்துறைப் பயணத்தின் ஆரம்பக் காலங்களில் கிளை வங்கிச் செயற்பாடுகளில் அவர் பெற்ற அனுபவம் மற்றும் தொழில்நுட்பப் புலமை, பிற்காலத்தில் அவரை வங்கியின் மாற்றத்திற்கான ஒரு முக்கிய உந்துசக்தியாக மாற்றியது. உதவிப் பொது முகாமையாளர் (தயாரிப்பு மேம்பாடு மற்றும் வியாபாரச் செயல்முறை மறுசீரமைப்பு), பிரதான முகாமையாளர் (அமைப்பு மாற்றம்) உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ள இவர், பாரிய செயற்திட்டங்களுக்கான திட்ட முகாமையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

வங்கியின் மூலோபாய மாற்றங்களில் திரு. பெரேரா அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. குறிப்பாக, கிளை வலையமைப்புகளைத் தானியக்க முறையில் ஒருங்கிணைக்கும் மறுசீரமைப்புத் திட்டங்கள், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் புத்தாக்கத் தீர்வுகள் ஆகியவற்றில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். வங்கியின் முதன்மைச் செயலியான "BOC Flex" உருவாக்கத்திலும் அதன் வெற்றிகரமான அமலாக்கத்திலும் அரும் பணியாற்றியுள்ளார்.

வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல், செயற்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் வங்கி முழுவதும் டிஜிட்டல் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களிலேயே இவரது பணிகள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ (பொது) துறையில் விஞ்ஞான இயமாணி (சிறப்பு) பட்டத்தை (இரண்டாம் வகுப்பு மேற் பிரிவு) பெற்றுள்ள இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நிதிப் பொருளாதாரத்தில் முதுமாணிப் பட்டத்தையும், இலங்கை வங்கியாளர்கள் நிறுவகத்தில் வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். திரு. பெரேரா அவர்கள் இலங்கையின் தொழில்முறை வங்கியாளர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினருமாவார்.

தயாரிப்பு மேம்பாடு, செயல்முறை மறுசீரமைப்பு, நிறுவன மாற்றம் மற்றும் டிஜிட்டல் புத்தாக்கம் ஆகியவற்றில் பரந்த அனுபவம் கொண்டுள்ள திரு. பெரேரா, வங்கியின் டிஜிட்டல் பயணத்தை வழிநடத்துவதன் மூலம் நிறுவனத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகின்றார்.