director-image

திரு. சுனிமல் வீரசூரிய

சுயாதீன நிறைவேற்று அல்லாத பணிப்பாளர்

திரு. வீரசூரிய, டிஜிற்றல் கொடுப்பனவுகள், தானியங்கி தீர்வுக்குரிய வங்கிகள்/கொடுப்பனவுக் கட்டமைப்பு, தகவற் பாதுகாப்பு, வணிகச் செயன்முறை வெளிவாரிச் சேவைகள், நிதி முகாமைத்துவம், முதலீட்டு வங்கி, உற்பத்தி மற்றும் பயிற்சி போன்ற பல துறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். இவர் தொழில்நுட்ப உத்தி, டிஜிட்டல் மாற்றம், தொழில்நுட்ப முகாமைத்துவம், தொழில்நுட்பப் பரிமாற்றம், வணிக உத்தி மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் பாண்டித்தியம் பெற்றவராவார்.

அவர் 1992 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முதல் வகுப்பு சிறப்புப் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் முகாமைத்துவப் பட்டப்பின் கல்வி நிறுவகத்தில் (Postgraduate Institute of Management - PIM) வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டம், தாய்லாந்தில் உள்ள ஆசிய தொழில்நுட்ப நிறுவகத்தில் (Asian Institute of Technology - AIT) தொழில்நுட்ப முகாமைத்துவத்தில் முதுமாணிப் பட்டம், அவுஸ்திரேலியாவில் உள்ள கேட்டின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (Curtin University of Technology) திட்ட முகாமைத்துவத்தில் விஞ்ஞான முதுமாணிப் பட்டம் உட்பட பல துறைகளில் பல முதுமாணித் தகுதிகளைப் பெற்றார். திரு. வீரசூரிய ஐக்கிய இராச்சியத்தின் (UK) பட்டய முகாமைத்துவ நிறுவகத்தின் (Chartered Management Institute - CMI) இணை உறுப்பினராகவும் (Fellow Member) உள்ளார்.

வரையறுக்கப்பட்ட லங்காபே (தனியார்) நிறுவனத்தின் (LankaPay (Pvt) Ltd) முன்னாள் பொது முகாமையாளரான இவர் இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டுதலின் கீழ் லங்காபே என்ற வர்த்தகப் பெயரில் இலங்கையில் டிஜிற்றல் கொடுப்பனவுக் கட்டமைப்பை அமைப்பதில் முக்கிய பங்காற்றினார். அண்மையில், திரு. வீரசூரிய சிங்கப்பூரில் உள்ள ட்ரான்ஸ்நஷனல் குழுமத்தில் (Transnational Group) தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான மூத்த துணைத் தலைவராக (Senior Vice President – Technology & Innovation) பணியாற்றினார். 

மேலும் ஒரு தற்காலிகப் பணியாக, இலங்கையில் உள்ள ட்ரான்ஸ்நஷனல் குழும நிறுவனங்களின் இலங்கைக்கான பணிப்பாளராகவும் பணியாற்றினார். திரு. வீரசூரிய, வரையறுக்கப்பட்ட ட்ரான்ஸ்நஷனல் ரெக்னோலஜி சொல்யூஷன்ஸ் லங்கா (தனியார்) நிறுவனம் (Transnational Technology Solutions Lanka (Pvt) Ltd), வரையறுக்கப்பட்ட ட்ரான்ஸ்நஷனல் லங்கா (தனியார்) நிறுவனம் (Transnational Lanka (Pvt) Ltd), வரையறுக்கப்பட்ட ப்ரண்டோ லங்கா (தனியார்) நிறுவனம் (Pronto Lanka (Pvt) Ltd), வரையறுக்கப்பட்ட மவுண்டன் ஹோக் எக்ஸ்பிரஸ் (தனியார்) நிறுவனம் (Mountain Hawk Express (Pvt) Ltd - இலங்கையில் ஃபெடெக்ஸின் (FedEx) GSP), வரையறுக்கப்பட்ட MMBL பணப் பரிமாற்ற (தனியார்) நிறுவனம் (MMBL Money Transfer (Pvt) Ltd - இலங்கையில் வெஸ்ரேண் யூனியனின் (Western Union) முதன்மை முகவர்), வரையறுக்கப்பட்ட MMBL சைபர்ஸ்கில்ஸ் (தனியார்) நிறுவனம் (MMBL CyberSkills (Pvt) Ltd - இலங்கையில் NIIT-இன் உரிமதாரர்), வரையறுக்கப்பட்ட ஹன்வெல்ல ரப்பர் ப்ரடக்ட்ஸ் நிறுவனம் (Hanwella Rubber Products Ltd) மற்றும் இலங்கை கணினி அவசரகால பதில் குழுமம் (Sri Lanka Computer Emergency Response Team - SLCERT) போன்ற பல்வேறு துறைகளில் உள்ள பல நிறுவனங்களின் பணிப்பாளர் சபையில் (Board of Director) பணியாற்றியுள்ளார். திரு. வீரசூரிய தற்போது வரையறுக்கப்பட்ட சினாப்சிஸ் (Synapsys Limited) நிறுவனத்தின் சுயாதீன நிறைவேற்று அல்லாத பணிப்பாளராக (Independent Non-Executive Director) பணியாற்றுகிறார்.

திரு. வீரசூரிய சிங்கப்பூர் சர்வதேச மத்தியஸ்த நிறுவனத்தின் (Singapore International Mediation Institute - SIMI), சேஜ் மத்தியஸ்தம் (Sage Mediation), சிங்கப்பூர் மற்றும் IADRC, இலங்கையின் அங்கீகாரம் பெற்ற சர்வதேச மத்தியஸ்தராகவும் (Accredited International Mediator) உள்ளார்.