director-image

திரு. சஷி ஜயசிங்க

பிரதிப் பொது முகாமையாளர் (மாற்ற முகாமைத்துவம்மற்றும் மனிதவள மூலோபாயம்)

திரு. சஷி ஜயசிங்க அவர்கள், 2026 ஜனவரி மாதம் இலங்கை வங்கியின் கூட்டிணைந்த முகாமைத்துவக் குழுவில், மாற்ற முகாமைத்துவம் மற்றும் மனிதவள மூலோபாயத்திற்கான பிரதிப் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டார். 
இவர் உற்பத்தி, கட்டுமானம், பொறியியல், சில்லறை வணிகம், விநியோகம் மற்றும் சேவைத் துறைகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட துறைகளில் 22 ஆண்டுகளுக்கும் மேலான விரிவான அனுபவத்தைக் கொண்ட மனிதவளத் துறை நிபுணராவார். 

 

மனிதவள மாற்ற முகாமைத்துவம் மற்றும் மூலோபாயம், வணிக மூலோபாயத்துடன் மனிதவளத்தை ஒருங்கிணைத்தல், நிறுவன மேம்பாடு, மனிதவளப் பகுப்பாய்வு (HR Analytics), திறமை முகாமைத்துவம், கற்றல் மற்றும் மேம்பாடு, செயற்திறன் மற்றும் வெகுமதி முகாமைத்துவம், மனிதவள தகவல் அமைப்பு (HRIS) செயலாக்கம், தொழில்துறை மற்றும் பணியாளர் உறவுகள், மாற்ற முகாமைத்துவம் மற்றும் செயல்முறை மேம்படுத்தல் ஆகியவை இவரது நிபுணத்துவத் துறைகளாகும். 
 

இலங்கை வங்கியில் இணைவதற்கு முன்னர், திரு. ஜயசிங்க அவர்கள் மனிதவளத் துறையில் பல சிரேஷ்ட தலைமைத்துவப் பதவிகளை வகித்துள்ளார். அவர் EMJAY International (Pvt) Ltd மற்றும் Penguin Sportswear (Pvt) Ltd ஆகிய நிறுவனங்களில் குழு மனிதவள (செயற்பாடுகள்) பொது முகாமையாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும், துடாவே பிரதர்ஸ் (Tudawe Brothers) குழும நிறுவனங்களின் மனிதவளப் பிரிவின் தலைவராகவும், AMSK Constructions (Pvt) Ltd நிறுவனத்தின் மனிதவளம் மற்றும் நிர்வாகப் பிரிவின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். தனது ஆரம்பகால வாழ்க்கையில், MAS Holdings நிறுவனத்தில் முகாமையாளர் பதவியை வகித்த அவர், அங்கு பாரிய அளவிலான நிறுவனங்களுக்கான விரிவான மனிதவளக் கட்டமைப்புகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார். 
 

திரு. ஜயசிங்க அவர்கள் இந்தியாவின் ICFAI பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக இளமாணிப் (BBA) பட்டத்தையும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மனிதவள முகாமைத்துவத் துறையில் முதுமாணிப் பட்டத்தையும் (திறமைச் சித்தியுடன்) பெற்றுள்ளார். இவர் இலங்கை பட்டய தொழில்முறை முகாமையாளர்கள் நிறுவனத்தின் (CPM) வாழ்நாள் கௌரவ உறுப்பினராகவும், இலங்கை பட்டய பணியாளர் முகாமைத்துவ நிறுவனம் (CIPM) மற்றும் இலங்கை மனிதவள நிபுணர்கள் சங்கம் ஆகியவற்றின் இணை உறுப்பினராகவும் உள்ளார்.