திரு. சம்பத் பெரேரா
Deputy General Manager (Development Lending and Branch Credit - Region 02)
திரு. சம்பத் பெரேரா 2024 பெப்ரவரியில் பிரதிப் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டார். இது இலங்கை வங்கியில் அவரது தொழில்முறை வாழ்க்கையில் ஒரு முக்கிய மைற்கல்லாகும். திரு. பெரேரா இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்துடன் வங்கியின் பல்வேறு துறைகளில் அசாதாரணமான தலைமைத்துவ திறனையும் மூலோபாயங்களை வகுக்கும் புத்திக்கூர்மையையும் தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளார்.
2002ஆம் ஆண்டில் முகாமைத்துவப் பயிற்சியாளராக வங்கியில் இணைந்த திரு. பெரேரா, பல்வேறு வங்கிச் செயற்பாடுகளில் தனது திறமையை வெளிப்படுத்தியதன் விளைவாக மிக விரைவாக பதவி உயர்வு பெற்றார். ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக உதவிப் பொது முகாமையாளராகப் பணியாற்றிய அவர், மேல் மாகாணம் வடக்கு, மேல் மாகாணம் தெற்கு, கடல்கடந்த வங்கிப் பிரிவு மற்றும் பெருநிறுவன உறவுகள் பிரிவு உள்ளிட்ட முக்கிய வணிகப் பிரிவுகளை வெற்றிகரமாக நிர்வகித்தார். அவரது தலைமையின் கீழ், சவாலான வணிகச் சூழல்களிலும்கூட இப் பிரிவுகள் முன்னேற்றம் கண்டன. இது அவரது மூலோபாய முன்னோக்கு மற்றும் நிர்வாகத் திறனுக்குச் சான்றாகும். குறிப்பாக, கணக்கியல் மற்றும் வரி தொடர்பான பிரிவில் செயல்முறை மேம்பாடுகள் மற்றும் மூலோபாயமான கொள்முதல் முயற்சிகளை அறிமுகப்படுத்துவதிலும் அவற்றின் செயற்திறனை மேம்படுத்துவதிலும் திரு. பெரேராவின் தொலைநோக்கு அணுகுமுறையும் செயற்திறனும் முக்கிய பங்கு வகித்தன.
2007ஆம் ஆண்டில் லண்டன் இலங்கை வங்கியில் 6 மாதங்கள் வணிகப் பயிற்சியாளராக பணியாற்றியமை திரு. பெரேராவின் சர்வதேச அனுபவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். லண்டன் கிளை, இலங்கை வங்கி (UK) லிமிடெட் என்ற ஒரு சுயாதீன துணை நிறுவனமாக மாற்றப்பட்ட பிறகு அதன் முதல் கடன் முகாமையாளராக (2010-2013) பணியாற்றியதோடு குறித்த நிறுவனத்தின் வணிக கடன் வழங்கும் செயற்பாடுகளை நிறுவுவதில் கணிசமான பங்களிப்புகளையும் வழங்கியுள்ளார்.
திரு. பெரேரா தனது தொழில் வாழ்க்கை முழுவதும், வங்கிக்குள் புதுமையையும் மாற்று முகாமைத்துவத்தையும் இயக்கும் சக்தியாக இருந்து வருகிறார். அவர் மூலோபாய மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், நிறுவனத்திற்குள் புதுமையான கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் முன்னோடியாக இருந்தார். பெருநிறுவன முகாமைத்துவத்தால் நியமிக்கப்பட்ட பல குழுக்களின் தலைவராக அவர் வகித்த பங்கு, முக்கியமான சவால்களை எதிர்கொள்வதற்கும், புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்குமான அறிவையும் பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது.
திரு. பெரேரா இலங்கையின் ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவத்தில் இளம் விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டப்பின்படிப்பு முகாமைத்துவ நிறுவனத்தில் (PIM) வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டத்தையும், PIMஇல் மூலோபாய முகாமைத்துவத்தில் மேற் படிப்பையும் வங்கியியல் மற்றும் நிதியில் டிப்ளோமாவையும் பெற்றுள்ள இவர் இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் இணை உறுப்பினராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.