director-image

திரு.எஸ்.லியனகே

பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி

திரு.சமீர லியனகே இலங்கை வங்கியின் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரியாக 2020ஆம் ஆண்டு ஒகஸ்ட் 4ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டார். அரச மற்றும் தனியார் துறை தொடர்பான வங்கியியலிலும் சந்தைப்படுத்தலிலும் 25 வருடங்களுக்கும் மேலான தொழிற்துறை அனுபவத்தை பெற்றுள்ளார். ஐக்கிய இராச்சியத்தின் பட்டயச் சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் 2015ஆம் ஆண்டில் பட்டயச் சந்தையாளர் அந்தஸ்தைப் பெற்றார். 

இலங்கை வங்கியில் சந்தைப்படுத்தல் துறையின் உயரிய பதவியை அலங்கரிப்பதற்கு முன்பு சனச அபிவிருத்தி வங்கியில் ஆறு ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார். பான் ஆசியா வங்கியில் ஆறு ஆண்டுகளும், தேசிய சேமிப்பு வங்கியில் ஐந்து ஆண்டுகளும் செலான் மெர்ச்சன்ட் வங்கியில் இரு ஆண்டுகளும் சந்தைப்படுத்தல் முகாமையாளராக பதவி வகித்துள்ளார். 

நாடளாவிய ரீதியில் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தலில் ஒரு சிந்தனைத் தலைவராகக் அறியப்படும் இவர், ஏராளமான கடன் மற்றும் சேமிப்பு உற்பத்திகளை சந்தையில் அறிமுகப்படுத்தியதன் மூலமாக தொழிற்துறையில் பாராட்டைப் பெற்றுக்கொண்டார்.

திரு.சமீர லியனகே முதன்முறையாக ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களுக்கான ஓய்வூதிய கடன் திட்டத்தை உள்ளூர் வங்கிக்கு அறிமுகப்படுத்தியதோடு இராணுவத்தினருக்கும் அவர்களைச் சார்ந்துள்ளவர்களுக்குமான வங்கியின் சிறப்பு தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய பெருமை அவரையே சாரும்.​ இவரது உற்பத்திகள் யாவும் பெரும்பாலான வங்கிகளில் பயன்தரும் உற்பத்திகளாக மாறியுள்ளன. 

திரு.சமீர லியனகே ஐக்கிய இராச்சியத்தின் பட்டயச் சந்தைப்படுத்தல் நிறுவனத்தில் சந்தைப்படுத்தலில் பட்டப்பின் டிப்ளோமாவினைப் பெற்றுள்ளார். அத்தோடு, இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் உறுப்பினராகவும் இலங்கை தொழில்முறை வங்கியாளர்களின் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார். 

கொழும்பு நாலந்தா கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர் தான் கல்வி கற்ற நிறுவனத்தினால் வருடாந்தம் ஏற்பாடு நடத்தப்படும் Future Minds  உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சியின் முன்னாள் பொது முகாமையாளராக செயற்பட்டதோடு தற்போது ஆலோசனையாளராக உள்ளார். 2019/2020ஆம் ஆண்டுகளில் நாலந்தாக் கல்லூரி கனிஷ்ட முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.