director-image

திரு.எஸ்.சிவாஞ்சன்

பிரதிப் பொது முகாமையாளர்

திரு.சிவாஞ்சன் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உதவிச் சேவைகளுக்கான பிரதிப் பொது முகாமையாளராகப் நியமிக்கப்பட்டு வங்கியின் நிறுவன முகாமைத்துவத்திற்கு உள்வாங்கப்பட்டார். இவர் தற்போது வியாபார புத்துயிர்ப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான பிரதிப் பொது முகாமையாளராக பணியாற்றுகின்றார். இந்நியமனத்திற்கு முன்பு, இவர் ஆறு மாகாணங்களின் கடன் செயற்பாடுகளை உள்ளடக்கிய கிளைச் செயற்பாடுகள் வரம்பு I இற்கான பிரதிப்பொது முகாமையாளராக பதவி வகித்தார். 2018ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேச துறைக்கான உதவிப் பொது முகாமையாளராகவும் பதவி வகித்துள்ளார். திரு.சிவாஞ்சன் முகாமைத்துவப் பயிற்சியாளராக இலங்கை வங்கியில் இணைந்து கொண்டது 2002ஆம் ஆண்டிலாகும். 

இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளமாணி கௌரவ பட்டத்தினை முதலாம் வகுப்பில் பெற்றுள்ளதுடன் 2010ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகத்தில் முதுமாணி (சந்தைப்படுத்தலில் சிறப்பறிவு) பட்டத்தினையும் பெற்றுள்ளார். 

திரு. சிவாஞ்சன் அவர்கள் தனது தொழிற்துறைப் பயணத்தை சில்லறை கிளைச் செயற்பாடுகளுடன் தொடங்கியதுடன் இலங்கை வங்கியின் சென்னைக் கிளையில் பணியாற்றியதன் ஊடாக வெளிநாட்டுக் கிளைச் செயற்பாடுகளில் பரந்த அறிவைப் பெற்றுக்கொண்டார்.

இவர் வங்கியில் பல்வேறு தரங்களிலும் பிரிவுகளிலும் பணியாற்றியுள்ளதுடன், கடன், அறவீடு, அபிவிருத்தி வங்கியியல் மற்றும் நுண்கடன் போன்ற துறைகளில் விரிவான அனுபவம் கொண்டவராவார். திரு.சிவாஞ்சன் 2010ஆம் ஆண்டு தொடக்கம் வங்கியின் மத்திய பயிற்சி நிறுவனத்தினது வருகை தரும் ஆசிரிய குழாம் உறுப்பினராக செயற்படுகின்றார்.