திரு. பிரியல் சில்வா
பதில் பிரதிப் பொது முகாமையாளர் (மாகாண அறவீடு)
திரு. பிரியல் சில்வா 1997ஆம் ஆண்டு இலங்கை வங்கியில் முகாமைத்துவப் பயிற்சியாளராக இணைந்துகொண்டார். கிளை வலையமைப்பில் கடன் அதிகாரி, கணக்காய்வு அதிகாரி, கிளை முகாமையாளர் என தனது வங்கியியல் தொழிற்துறையைத் தொடங்கினார். திரு.பிரியல் சில்வா வணிகத் தொடர்பு அறை மற்றும் இலண்டன் கிளையி என்பவற்றில் உள்ளூரிலும் வெளியூரிலும் பல்வேறு பதவி நிலைகளை வகிப்பதற்கு முன்பு சில்லறை வங்கிச் சேவையில் பரந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டார். வர்த்தக மேம்பாட்டுப் பிரிவின் முதுநிலை முகாமையாளராகவும் சர்வதேசப் பிரிவில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதான முகாமையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சந்தைப்படுத்தல் பிரிவிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பினையும் வழங்கியுள்ளார். வெகுமதி மற்றும் அங்கீகாரக் குழு மற்றும் ஒழுக்காற்று ஆணையக் குழு உட்பட வங்கியின் பல நிர்வாகக் குழுக்களில் நிறைவேற்று உறுப்பினராக இருந்துள்ளார்.
திரு.பிரியல் சில்வா ருஹுணு பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகத்தில் இளமாணி (சிறப்பு )பட்டத்தினை (சந்தைப்படுத்தல்) 2ஆம் உயர் வகுப்பில் பெற்றவராவார். களனி பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் முதுமாணி பட்டத்தனைப் பெற்றுள்ளார். வணிக நிர்வாகத்தில் பட்டப்பின் டிப்ளோமாவினைப் பெற்றுள்ளார். இவர் இலண்டன் பட்டயச் சந்தைப்படுத்தல் நிறுவனம், இலங்கை வங்கியாளர்கள் நிறுவனம் மற்றும் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவவனம் (SLIM) ஆகியவற்றின் இணை உறுப்பினராவார். பட்டயச் சந்தைப்படுத்தல் (CIM) நிறுவகத்தில் தொழில்முறை சந்தைப்படுத்தலில் பட்டப்பின் டிப்ளோமாவினைப் பெற்றுள்ளார்.
திரு. பிரியல் சில்வா கிளைச் செயற்பாடுகளுக்கான பிரதிப் பொது முகாமையாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு நிறுவன மற்றும் வெளிநாட்டு வங்கியியலுக்கான பிரதிப் பொது முகாமையாளராகவும், விற்பனை மற்றும் நெறிப்படுத்தல் முகாமைத்துவத்தின் பிரதிப் பொது முகாமையாளராகவும், நிதியளித்தல் மற்றும் திட்டமிடலின் பிரதிப் பொது முகாமையாளராகவும் மற்றும் நிறுவன நிர்வாகத்தில் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரியாகவும் பதவி வகித்துள்ளார்.
வடமேல் மாகாணத்துக்கான உதவிப் பொது முகாமையாளராகவும், சந்தைப்படுத்தலுக்கான உதவிப் பொது முகாமையாளாகவும் மற்றும் மேல் மாகாணம் வடக்கிற்கான உதவிப் பொது முகாமையாளராகவும் நிறைவேற்று முகாமைத்துவத்தில் பதவிகளை வகித்துள்ளார்.