திரு. பி.எம்.லியனகே
பிரதம உள்ளகக் கணக்காய்வாளர்
திரு.மதுவந்த லியனகே இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவகத்தின் சக உறுப்பினராகவும் தொழிற்துறையில் இருபது வருடகால அனுபவத்தையும் பெற்றவராவார். ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மற்றும் நிதி முகாமைத்துவத்தில் விஞ்ஞான இளமாணி சிறப்புப் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.
திரு. லியனகே சான்றளிக்கப்பட்ட தகவல் முறைமைகளுக்கான கணக்காய்வாளராகவும் (CISA - USA), இலங்கை வங்கியின் பிரதான உள்ளகக் கணக்காய்வாளராகவும் பணியாற்றுகின்றார். இலங்கை வங்கியில் இணைவதற்கு முன்னர், இவர் கொமர்ஷியல் கிரெடிட் பைனான்ஸ் (பிஎல்சி) லிமிடெட் மற்றும் பான் ஆசியா ஆகியவற்றின் உள்ளகக் கணக்காய்வாளராகவும் பணியாற்றியுள்ளார். திரு. லியனகே 2006-2008 காலப்பகுதியில் இலங்கை வங்கியின் உள்ளகக் கணக்காய்வாளர் பாத்திரத்தில் உதவிப் பொது முகாமையாளராக கடமையாற்றியுள்ளார். திரு.லியனகே வரையறுக்கப்பட்ட லங்கா க்ளியர் தனியார் நிறுவனத்தில் நிதி மற்றும் நிர்வாக முகாமையாளராகவும் எர்னஸ்ட் அன்ட் யங் நிறுவனத்தில் தகுதிவாய்ந்த உதவியாளராகவும் பணிபுரிந்துள்ளார்.