திரு. எம்.ஆர்.என்.ஆர்.குமார
பிரதிப் பொது முகாமையாளர் (வியாபார புத்துயிர்ப்பு)
திரு. எம்.ஆர்.என் ரோஹன குமார வணிக மீட்பு மற்றும் மறுசீரமைப்புக்கான பிரதிப் பொது முகாமையாளராக பணியாற்றுகின்றார். இந்நியமனத்திற்கு முன்னர், திரு. ரோஹன குமார மாகாண அறவீடுகள், வணிக மீட்பு மற்றும் மறுசீரமைப்புக்கான பிரதிப் பொது முகாமையாளராகவும் பணியாற்றினார். 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறுவன முகாமைத்துவத்திற்கு நியமிக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டு உதவிப் பொது முகாமையாளராக நியமனம்பெற்ற இவர், கிளைக் கடனுக்கான உதவிப் பொது முகாமையாளராகவும் செயற்திட்ட நிதியளித்தலுக்கான மாகாண அறவீடுக்கான உதவிப் பொது முகாமையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
திரு.ரோஹன குமார 2002ஆம் ஆண்டு வங்கியில் முகாமைத்துவப் பயிற்சியாளராக இணைந்துகொண்டார். கடன் அதிகாரியாக கிளை வங்கியிலில் தனது தொழிற்துறையை தொடங்கிய இவர், கிளை முகாமையாளராகவும், பொது முகாமையாளரின் பிரத்தியேக உதவியாளராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவராவார். நிறுவன முகாமைத்துவக் குழுவின் செயலாளர், கொடுகடன் தகவற் பணியகத்திற்கான இணக்க அதிகாரி, முறைப்பாட்டுத் தீர்வு அதிகாரி மற்றும் இலங்கை வங்கியின் தகவல் அதிகாரி ஆகிய பதவிகளை வகித்துள்ளார். இவர் இலங்கை வங்கியின் மத்திய பயிற்சி நிறுவனத்துடன் இணை உறுப்பினராகவும் இலங்கையின் தொழில்முறை வங்கியாளர்கள் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் தற்போது அச்சங்கத்தின் சபை உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.
இலங்கையின் களனிப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளமாணி (கணிதம்) பட்டத்தினை 1ஆம் வகுப்பில் பெற்றுள்ளார். இலங்கை வங்கியாளர் நிறுவகத்தில் வங்கியியல் மற்றும் நிதியளிப்பு தொடர்பான டிப்ளோமாவினையும் அமெரிக்காவின் வடக்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் தலைமைத்துவத்தில் நிறைவேற்று டிப்ளோமாவினையும் பெற்றுள்ளார்.