director-image

திரு. ஜெயசாந்த கொடகந்த

பிரதிப் பொது முகாமையாளர் (சர்வதேசம், திறைசேரி, மற்றும் முதலீடு)

திரு.ஜயசாந்த 2020ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் வங்கியின் நிறுவன முகாமைத்துவத்திற்கு நியமிக்கப்பட்டார். சிறப்பாக தெழிற்துறையைதொடங்கிய இவர் வங்கியில் பல்வேறு பதவிகளை அலங்கரித்து தனது நிபுணத்துவத்தையும் முன்மாதிரியான சேவையையும் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இவர் சர்வதேசம், திறைசேரி, மற்றும் முதலீடுகளுக்கான பிரதிப் பொது முகாமையாளராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர்​ சில்லறை வங்கியியல் வீச்சு II மற்றும் நிறுவன மற்றும் கரை கடந்த வங்கியியல் என்பவற்றிற்கான பிரதிப் பொது முகாமையாளராகவும் பிரதான இடர் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். 

திரு. ஜயசாந்த 1994ஆம் ஆண்டு ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் விஞ்ஞான இளமாணி (சிறப்பு) பட்டத்தினை முதல் வகுப்பில் பெற்றுள்ளார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நிதிப் பொருளாதாரத்தில் முதுமாணி பட்டத்தினையும் கடன் முகாமைத்துவத்தில் டிப்ளோமாவினையும் பெற்றுள்ளார். இவர் இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் மதிப்புமிக்க இணை உறுப்பினராவார். 

1997ஆம் ஆண்டு முகாமைத்துவப் பயிற்சியாளராக வங்கியில் இணைந்து கொண்டார். தொழிற்துறையின் தொடக்கத்திலயே சில்லறை வங்கியியல், சிறிய நடுத்தரளவிலான கடன் மற்றும் கிளைச் செயற்பாடுகளில் இவர் தேர்ச்சிப் பெற்றவராகத் திகழ்ந்தார். அதனைத் தொடர்ந்து திறைசேரிப் பிரிவில் 10 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு பதவிகளை அலங்கரித்துள்ளதுடன், வணிகத் தொடர்பு, PDU மற்றும் ALM ஆகியவற்றில் முக்கிய பாத்திரங்களை வகித்துள்ளார். திறைசேரியில் பணியாற்றும்போது வங்கியின் முதல் சர்வதேச பத்திர வெளியீடு, டொலர் பெறுமதியிலான கடன் முறி விநியோகம் மற்றும் சர்வதேச சந்தையிலிருந்து பல்வேறு கருவிகள் மூலம் வங்கிக்கு நிதித் திரட்டுதல் என தனது பங்களிப்புகளை வழங்கியுள்ளார். 

நிறைவேற்று நிர்வாகத்திற்கு நியமனம்பெற்ற இவர், பிரதிப் பொது முகாமையாளராக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு நிறுவன அறவீட்டுக்கான உதவிப் பொது முகாமையாளராகவும், இடர் முகாமைத்துவத்தின் உதவிப் பொது முகாமையாளராகவும், மேல் மாகாணம் தெற்கிற்கான உதவிப் பொது முகாமையாளராகவும், வெளிநாட்டு வங்கியியலுக்கான உதவிப் பொது முகாமையாளராகவும் பணியாற்றியுள்ளார். 

குறிப்பாக உதவிப் பொது முகாமையாளராக பணிபுரிந்தபோது வங்கியின் ஒழுக்காற்று ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் தலைவராகவும் செயற்பட்டார். 

இலங்கை மெர்சன்ட் வங்கி மற்றும் பைனான்ஸ் பீஎல்சீ நிறுவனம், வரையறுக்கப்பட்ட சீபாங் சொத்து முகாமைத்துவ நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட சொத்து அபிவிருத்தி முகாமைத்துவ நிறுவனம் என்பவற்றினதும் இடர் மற்றும் கணக்காய்வு போன்ற பணிப்பாளர் சபையின் துணைக் குழுக்களினதும் பணிப்பாளராகவும் உள்ளார். அத்துடன், பிரதேச அபிவிருத்தி வங்கியில் இரண்டு வருடகாலம் பணிப்பாளராக பணியாற்றி தனது நிபுணத்துவத்தை பகிர்ந்துள்ளார். 

வங்கியியல் மற்றும் நிதித் துறையில் உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் தனித்தன்மைவாய்ந்த சாதனைகள் மூலமாக இவர் பன்முக பங்களிப்பை வங்கிக்கு வழங்கியுள்ளார். இது இவரது சிறப்பான தொழிற்துறையை வெளிப்படுத்துகின்றது