திரு. தம்ம விஜயவர்தன
பிரதிப் பொது முகாமையாளர் (மனித வளச் செயற்பாடுகள்)
திரு.விஜயவர்தன 2002ஆம் ஆண்டு இலங்கை வங்கியில் முகாமைத்துவப் பயிற்சியாளராகஇணைந்துகொண்டதுடன் 20 வருட வங்கியியல் அனுபவத்தோடு, 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மனித வளங்களுக்கான பிரதிப் பொது முகாமையாளராக நியமனம் பெற்று நிறுவன முகாமைத்துவத்திற்குள் உள்வாங்கப்பட்டார்.
வங்கியியலில் இருதசாப்த கால அனுபவம் மற்றும் அறிவாற்றல் கொண்ட திரு.விஜயவர்த்தன மனித வளங்களுக்கான உதவிப் பொது முகாமையாளராக 3 வருடகால அனுபவத்தையும் கடன் மற்றும் சில்லறை வங்கிச் சேவையில் தேர்ச்சியையும் கிளை வங்கியியலில் 15 வருடகால அனுபவத்தையும் பெற்றுள்ளார்.
இலங்கையின் களனிப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளமாணி கெரவ (பொது) பட்டத்தினை இரண்டாம் வகுப்பு உயர் தரத்தில் பெற்றுள்ர். திரு.விஜயவர்தன இலங்கையின் வயம்ப பல்கலைக்கழகத்தில் வியாபார முகாமைத்துவத்தில் பட்டப்பின் டிப்ளோமாவினை நிறைவு செய்துள்ளார். இவர் இலங்கை வங்கியாளர்கள் நிறுவகத்தின் இணை உறுப்பினராகவுள்ளதோடு இலங்கையின் தொழில்முறை வங்கியாளர்கள் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் உள்ளார். திரு.விஜயவர்தன முதற்தர வங்கியின் மிகப்பெரிய மனித வளப்பிரிவிற்கு தலைவராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.