திரு. புத்திக்க சீலநாத
பிரதம தகவல் அதிகாரி
2023 செப்டம்பர் 4ஆம் திகதி புத்திக்க சீலநாத அவர்கள் வங்கியின் தலைமைத் தகவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் வங்கியியலிலும் தகவல் தொழில்நுட்பத்திலும் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைப் பெற்றுள்ளார். இவர் பயன்பாட்டு மேம்பாடு, தரவுக் கிடங்கு மற்றும் தரவு பகுப்பாய்வு உள்ளிட்ட முக்கிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவராவார். வாடிக்கையாளர் அனுபவத்தினை மேம்படுத்தி வருவாயை அதிகரிப்பதன் ஊடாக ஒட்டுமொத்த மதிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நிறுவனங்களுக்குள் டிஜிற்றல் உருமாற்ற உத்திகளை முன்னெடுத்துச் செல்வதிலும் செயற்படுத்துவதிலும் வெற்றியை வெளிப்படுத்தியுள்ளார்.
டப்ளின், அயர்லாந்தின் தேசிய பல்கலைக்கழகத்தில் இளம் விஞ்ஞானமானி (முகாமைத்துவ தகவல் முறைமைகள்) பட்டம் பெற்றவர்.
இலங்கை வங்கியில் பிரதம தகவல் அதிகாரியாக இணைவதற்கு முன்னர், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியில் அதே பதவியில் பணியாற்றியுள்ளார். முன்னதாக, இவர் மக்கள் வங்கியில் (3.6 ஆண்டுகள்) பிரயோக முறைமைகளுக்கான தலைவராகவும், நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியில் (15 ஆண்டுகள்) பிரயோக அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ தகவல் முறைமைகளுக்கான (MIS) மூப்புநிலை முகாமையாளராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.