director-image

திரு. பீ.கே குருசிங்க

Senior Deputy General Manager / Head of Development and Branch Banking

 திரு. பத்ரா கல்யாணபிரிய குருசிங்க 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சில்லறை வங்கியியல் வீச்சு-II இனது பிரதிப் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டு வங்கியின் நிறுவன முகாமைத்துவத்தின் உறுப்பினரானார். திரு. பீ.கே குருசிங்க பிரதான சட்ட அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். 1997ஆம் ஆண்டு முகாமைத்துவப் பயிற்சியாளராக இலங்கை வங்கியில் தனது தொழிற்துறையை தொடங்கிய இவர், வங்கியின் மூலோபாய வளர்ச்சி மற்றும் பரிணாம வளர்ச்சிக்காக ஆற்றிய பங்களிப்புகளுக்காக சிறந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

25 வருடங்களுக்கும் மேலாக தொழில்முறை வங்கியாளராகவுள்ள திரு.குருசிங்க, நிறுவன மற்றும் சில்லறை வங்கியியலோடு ஒழுங்கமைப்பு மறுவடிவமைப்பு ஆகியவற்றிலும் தேர்ச்சிப் பெற்றவராவார். திரு.குருசிங்க இணக்கப் பிரிவிற்கான பிரதிப் பொது முகாமையாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், 2017ஆம் ஆண்டு தொடக்கம் 2020ஆம் ஆண்டு வரை மாலைத்தீவுகளுக்கான இலங்கை நாட்டின் முகாமையாளராகப் பணியாற்றினார். இவர் இலங்கை வங்கியின் மாலைத்தீவுக் கிளையில் செயற்பாட்டு அதிகாரியாக 3 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். திரு.குருசிங்க வெனச ICBS ஆகிய திட்டங்களின் முக்கிய குழு உறுப்பினராகவும் வங்கியின் மறுசீரமைப்பு மற்றும் பரிணாம முயற்சிகள் பலவற்றிலும் முக்கிய பங்கும் வகித்துள்ளார். 

திரு. பீ.கே குருசிங்க ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் விஞ்ஞான இளமாணி (சிறப்பு) பட்டத்தினைப் பெற்றுள்ளதோடு இலங்கையின் திறந்த பல்கலைக்கழகத்தில் பொதுநலவாய நிறைவேற்று வணிக நிர்வாகத்தில் முதுமாணி பட்டத்தினையும் (CEMBA) பெற்றுள்ளார். இவர் இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தில் வணிகம் மற்றும் நிதி நிர்வாகத்தில் பட்டப்பின் டிப்ளோமாவினையும் (PGDBM) இலங்கை வங்கியாளர்கள் நிறுவகத்தில் கடன் முகாமைத்துவ டிப்ளோமாவினைப் பெற்றுள்ளார். திரு.குருசிங்க இலங்கை சட்டக் கல்லூரியில் தகுதிப் பெற்ற தொழில்முறை சட்டத்தரணியுமாவார். இலங்கை வங்கியாளர்கள் நிறுவனம் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் உறுப்பினராகவும் உள்ளார்.