கலாநிதி எம்.கே.சி சேனநாயக்க
பதவிவழிப் பணிப்பாளர்
கலாநிதி கபில சேனநாயக்க, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி, கொள்கை அமலாக்கம், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் நிதிக் கொள்கைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் இலங்கை கொள்கைக் கற்கைகள் நிறுவகத்தின் ஆளுநர் சபையின் பதவி வழி உறுப்பினராகவும் தற்போது பணியாற்றுகின்றார்.
அவுஸ்ரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளியற் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ள இவர் ஜப்பானின் ஹிட்டோட் சுபாதி பல்கலைக்கழகத்தின் வியாபார உத்திகளுக்கான பட்டக் கற்கைகள் கூடத்தில் பொதுக் கொள்கைத் துறையில் முதுமாணிப் பட்டத்தையும் சிறி ஜெயவர்தனபுர பல்லைக்கழகத்தில் இரண்டாம் வகுப்பு (மேற்தரம்) சித்தியுடன் வணிக இளமாணி (சிறப்புப்) பட்டத்தையும் பெற்றுள்ளார் என்பது குறப்பிடத்தக்கது. தவிர, இவர் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம் (SLIDA) மற்றும் இலங்கை மன்றம் முதலானவற்றில் முகாமைத்துவத்தில் உயர் பட்டயக் கற்கையைப் பூர்த்தி செய்தவருமாவார்.
ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவச் சபையின் தலைவராகவும் சபைக் கணக்காய்வுக் குழு, சபை நியமனக் குழு என்பவற்றின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ள திரு. சேனநாயக்க தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை ஹோட்டல் அபிவிருத்தியாளர் சபை, இலங்கை முதலீட்டுச் சபை, பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு, ஆங்கிலப் பட்டப்பின் கற்கைகள் நிறுவகம், இலங்கை உள்ளூராட்சி நிறுவகம் மற்றும் வரையறுக்கப்பட்ட Lanka Coal (தனியார்) நிறுவனம் என்பவற்றின் சபைப் பணிப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.
திறைசேரியின் நிதிக் கொள்கைத் திணைக்களத்தின் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர் (பதில்), உதவிப் பணிப்பாளர் போன்ற பதவிகளை வகித்துள்ள இவர் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
திரு. சேனாநாயக்க தனது நிபுணத்துவம் சார்ந்த பல சர்வதேச மற்றும் உள்ளூர் வெளியீடுகளுக்கும் பங்களிப்பினை வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் நடைபெற்ற சர்வதேச செயலமர்வுகளிலும் மாநாடுகளிலும் ஆய்வுகளைச் சமர்ப்பித்துள்ள இவர் அவுஸ்ரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் பல்லைக்கழகத்தில் கற்பித்தல் அனுபவத்தையும் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.