• திறைசேரி உண்டியல் என்பது இலங்கை அரசாங்கம் சார்பாக இலங்கை மத்திய வங்கியினால் (CBSL) வழங்கப்படும் குறுகிய கால நிதிச் சாதனமாகும். 
  • இலங்கை மத்திய வங்கியானது தற்போது 91, 182, 364 நாட்கள் வரையான அசல் முதிர்வு காலத்தைக் கொண்ட திறைசேரி உண்டியல்களை (T-bills) வெளியிடுகின்றது.
  • திறைசேரி உண்டியல் என்பது (T-bills) அதனுடைய முதிர்வு காலத்தில் முகப் பெறுமதி/  நியாயப் பெறுமதி என அழைக்கப்படும் ஒரு நிலையான தொகையைச் செலுத்தும் தள்ளுபடி வழங்கப்பட்ட பத்திரமாகும். ஆகவே இதற்கு இடைப்பட்ட வட்டிப் பணம் செலுத்த வேண்டியதில்லை. 
  • வட்டி 364 நாட்களை அடிப்படையாகக் கொண்டது.
  • சான்றிதழற்ற வடிவத்தில் வெளியிடப்படுவது. 


நன்மைகள் 

  • வட்டி மற்றும் முதிர்வு வருமானம் அரசாங்கத்தால் உறுதி செய்யப்படும்.
  • நிறுத்தி வைக்கும் வரிக்கு உட்பட்டதல்ல. 
  • திறைசேரி உண்டியல்கள் (T-bills) இரண்டாம் நிலைச் சந்தையில் விற்பனை செய்யப்படக்கூடியவை என்பதால் உடனடியாகப் பணமாக்கிக்கொள்ள முடியும்.


தேவையான ஆவணங்கள் 

புதிய தனி நபர் / கூட்டு முதலீட்டாளர்களுக்கு. 

  • முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் 
  • அரச பத்திரங்களுக்கான வாடிக்கையாளர் ஒப்பந்தம் - வாடிக்கையாளர் ஒப்பந்தத்திற்கான இரண்டு பிரதிகள் பூர்த்தி செய்யப்பட்டு முறையாக கையொப்பமிடப்பட வேண்டும்.
  • தேசிய அடையாள அட்டை / சாரதி அனுமதிப்பத்திரம் / கடவுச்சீட்டு என்பவற்றின் பிரதி
  • முகவரியை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் (வழங்கப்பட்ட முகவரி தேசிய அடையாள அட்டை / செயற்படுத்தப்படும் வங்கி கணக்குகளிலிருந்து வேறுபட்டால்) 


புதிய நிறுவனம் / சங்கம் / கழகத்திற்கு 

  • முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்.
  • அரச பத்திரங்களுக்கான வாடிக்கையாளர் ஒப்பந்தம் - வாடிக்கையாளர் ஒப்பந்தத்திற்கான இரண்டு பிரதிகள் பூர்த்தி செய்யப்பட்டு முறையாக கையொப்பமிடப்பட வேண்டும்.
  •  இலங்கை வங்கியின் அரச பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான அங்கீகாரம் உட்பட சபையின் தீர்மானம். 
  • கூட்டிணைப்பு சான்றிதழ் 
  • அதிகாரமளிக்கப்பட்டவர்களின் கையொப்பங்களுடன் சமர்ப்பித்தல் 


பொதுவான தகவல்கள் 
 

  • இலங்கை வங்கியில் பேணப்படும் நடைமுறைக் கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கு ஊடாக பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
  • திறைசேரி உண்டியல்களின் குறைந்தபட்ச பெறுமதி ரூ. 10,000/- (முகப்பெறுமதி)
  • விண்ணப்பங்கள் திறைசேரிப் பிரிவிற்கு பிற்பகல் 12 மணிக்கு முன் சென்றடைய வேண்டும். 
  • விண்ணப்பங்கள் மின்னஞ்சல் (pdu@boc.lk) மூலமாகவோ தொலைநகல் (011 2448207) மூலமாகவோ அல்லது இலங்கை வங்கிக் கிளை ஒன்றின் மூலமாகவோ திறைசேரிப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட முடியும்.
  • எந்தவொரு பண  மீள்பெறுதலுக்காகவும் திறைசேரிப் பிரிவுக்கு நீங்கள் முறையான கோரிக்கையை முன் வைக்கலாம் என்பதுடன் உங்கள் திறைசேரி உண்டியல்களுக்கு நடைமுறையில் உள்ள சந்தை விலையில் தள்ளுபடி வழங்கப்படும்.

 

விகிதங்கள்

 

தொடர்புகளுக்கு 

திறைசேரி (முதன்மை வர்த்தகப் பிரிவு),
7ஆவது மாடி,
இலங்கை வங்கித் தலைமை அலுவலகம், 
இல. 01  இலங்கை வங்கிச் சதுக்கம், 
இலங்கை வங்கி மாவத்தை, 
கொழும்பு – 01, இலங்கை.

tதொலைபேசி - 011 220 3607 / 011 244 8830
தொலைநகல் - 011 244 8207

 

 

திறைசேரி உண்டியல்கள்

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444