இலங்கை வங்கியானது அதனுடைய முதலீட்டு வங்கிப் பிரிவின் (BOCIBD) ஊடாக மதிப்புமிகு தனிநபர்கள், பெருநிறுவனங்கள், நிதியங்கள் உட்பட பல வாடிக்கையாளர்களுக்கு முதலீட்டு முகாமைத்துவச் சேவைகளை (PMS) விரிவுபடுத்தியுள்ளது. சந்தையில் கிடைக்கும் பத்திரங்களின் இடர்தன்மை/ வெகுமதியை அடிப்படையாகக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கான உடனடித் முதலீட்டுத் தீர்வுகளை நாங்கள் வழங்குகின்றோம்.
இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் உரிமம் பெற்ற முதலீட்டு முகாமையாளரான இலங்கை வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பணத்தின் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மிகுந்த அக்கறையுடனும் திறமையுடனும் முதலீட்டு முகாமைத்துவச் சேவைகளை வழங்குகிறது. தகுதியும் அனுபவமும் வாய்ந்த எமது முதலீட்டுக் குழுவானது வெளிப்படைத்தன்மையும் நம்பகத்தன்மையும் இணைந்ததாக வாடிக்கையாளர்களின் முதலீட்டு இலக்குகளை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இலங்கை வங்கியிடமிருந்து முதலீட்டு முகாமைத்துவச் சேவைகளை பெற்றுக் கொள்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் கீழ்க் காணப்படும் நன்மைகளை அனுபவிக்க முடியும்.
- அரச பத்திரங்கள், திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணைகள், நிலையான வைப்புக்கள், மீள்கொள்முதல் ஒப்பந்தங்கள் (Repos), கடன் பத்திரங்கள், வணிக ஆவணங்கள், ஒருமப் பொறுப்புநிதிகள், பங்குகள் மற்றும் சொத்து ஆதரவு நம்பிக்கைப்பொறுப்புச் சான்றிதழ்கள் போன்ற பல்வேறு முதலீட்டு வழிமுறைகள் ஊடாக சிறந்த மாற்றீடான முதலீடுகளைக் கண்டறிதல்.
- சாதாரண வாடிக்கையாளர்களுக்கு அதிகம் கிடைக்காத அடிக்கடி மாற்றமடையும் நிதிச்சந்தைத் தகவல்களை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு இலங்கை வங்கிக்கு உண்டு.
- தொந்தரவற்ற சூழல்
- வாடிக்கையாளர்களின் சொத்துக்களை பல்வகைப்படுத்துவதன் மூலம் மிகவும் குறைந்தளவான இடர் நிலையுடன் அதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
- வாடிக்கையாளர்களின் இடர்காலத் தேவைகளுக்குப் பொருத்தமாக வடிவமைக்கப்பட்ட முதலீட்டுத் திட்டங்கள்.