நோக்கம்
- வர்த்தக நடவடிக்கைகள் உட்பட பெண் தொழில்முயற்சியாளர்களால் மேற்கொள்ளப்படும் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வருமானம் உருவாக்கும் நடவடிக்கைகள். சுற்றுலா மற்றும் ஏற்றுமதி சார்ந்த வணிகத்திற்கான கடன் வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கடன்பெறத் தகுதியானவர்கள்
பின்வரும் அடிப்படைகளைக்கொண்ட பெண்களால் நடாத்தப்படும் வியாபாரங்கள்
- பெண்களுக்குச் சொந்தமான 50 வீதத்துக்கு மேற்பட்ட வியாபாரங்கள் அல்லது
- பின்வரும் மூன்று அடிப்படைகளையும் நிறைவேற்றும் வியாபாரங்கள்
-குறைந்தது 20% வியாபாரங்கள் பெண்களுக்குச் சொந்தமானவை
-முக்கிய முடிவெடுப்பவராக ஒரு பெண்ணைக் கொண்டுள்ள வியாபாரங்கள்
-பணிப்பாளர் சபை குறைந்தது 30% பெண்களைக் கொண்டிருத்தல்
ஆகக் கூடிய கடன் தொகை
- 100 மில்லியன் ரூபாய் அல்லது கருத்திட்டச் செலவில் 75% என்ற தெரிவுகளில் எது குறைவானதோ அந்த தொகை
-முதலீட்டு நோக்கங்களுக்காக – 50 மில்லியன் ரூபாய்
-தொழிற்படு மூலதன நோக்கங்களுக்காக - 50 மில்லியன் ரூபாய்
வட்டி வீதம் – நிலையானது
- 1.0 மில்லியன் ரூபாய் வரை – ஆண்டுக்கு 9.75 %
- 1.0 மில்லியன் ரூபாயிலிருந்து 10.0 மில்லியன் ரூபாய் வரை - ஆண்டுக்கு 11.0 %
- 10.0 மில்லியன் ரூபாய் தொடக்கம் 100.0 மில்லியன் ரூபாய் வரை - ஆண்டுக்கு 13.0 %
ஆகக் கூடிய கடன் திருப்பிச் செலுத்தும் காலம்
- தொழிற்படு மூலதன கடன்களுக்கு - ஆகக் கூடியது 03 ஆண்டுகள்
- முதலீட்டு கடன்களுக்கு – சலுகைக் காலம் உட்பட ஆகக் கூடியது 05 ஆண்டுகள்
சலுகைக் காலம்
- ஆகக் கூடியது 06 மாதங்கள் (கருத்திட்டத்தைப் பொறுத்து)
*நிபந்தனைகளுக்கு உட்பட்டது

