•  “BOC Mithuru”குழு உறுப்பினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்
  •  கிராமங்களில் பயன்படுத்தப்படாதுள்ள வளங்களைப் பயன்படுத்துதல்.
  • “BOC Mithuru”சங்க உறுப்பினர்களின் வருமானமீட்டும் வாய்ப்புகளை அதிகரித்தல்.
  • “BOC Mithuru” உறுப்பினர்களுக்கான செலவு குறைந்ததும் நிலைபேறானதுமான நுண்கடன் வழங்கல் முறைமையை உருவாக்குதல்.
  • “BOC Mithuru” உறுப்பினர்களுக்கு சிக்கனப் பழக்கம், சேமிப்புப் பழக்கம் என்பவற்றைப் போதித்தல். 

கடன் பெறத் தகுதியானவர்கள்

கடன் பெறுபவர்கள்,

  • அபிவிருத்தி வங்கியியற் பிரிவில் பதிவுசெய்யப்பட்ட சிறு குழு ஒன்றின் உறுப்பினராக இருத்தல் வேண்டும். (கிளைகள் “BOC Mithuru” குழுவை உருவாக்க வேண்டும்)
  • நிரந்தர வதிவுரிமை கொண்டவராக இருத்தல் வேண்டும் என்பதோடு எந்தவொரு நிதி நிறுவத்திலும் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாதவராக இருத்தலாகாது.
  • 10% வீதத்துக்கு அதிகமான உரிமைப் பங்கினை வழங்கக்கூடியவராக இருத்தல் வேண்டும் என்பதோடு முன்மொழியப்பட்ட கருத்திட்டம் கணிசமான பணப்புழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

BOC Mithuru” சங்கமானது (“BOC Mithuru” குழுக்கள் ஒன்றிணைந்த சங்கம்) 

  • சங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கம்பனிப் பதிவாளரிடத்துப் பதியப்பட்டிருக்க வேண்டும்.
  • வங்கியின் வழிகாட்டல்களின் கீழ் உருவாக்கப்பட்ட அபிவிருத்திச் சங்கமாக இருத்தல் வேண்டும்.
  • சங்கத்தின் அலுவலர்கள், உறுப்பினர்கள் கடன் செலுத்தத் தவறியிருத்தல் கூடாது.

ஆகக்கூடிய கடன் தொகை

கடன் வகை“BOC Mithuru” உறுப்பினர் 

“BOC Mithuru” சங்கம்


 

ஆகக்கூடிய கடன் தொகைஆகக்கூடிய கடன் தொகை
முதலாவது கடன்

100,000/-

500,000/-

இரண்டாவது கடன்

200,000/-

750,000/-

மூன்றாவது கடன்

300,000/-

1,000,000/-

நான்காவது கடன்

500,000/-

-


திருப்பிச் செலுத்தும் காலம்

“BOC Mithuru” உறுப்பினர்கள்

  • 200,000/- வரையான கடன் - ஆகக்கூடியது 36 மாதங்கள்
  • 200,000/- இற்குக் கூடிய கடன் - ஆகக்கூடியது 60 மாதங்கள்

BOC Mithuru” சங்கம்

• ஆகக்கூடியது 60 மாதங்கள்

இலங்கை வங்கி ‘மித்துரு’ சங்கம்

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444