இலங்கையின் விவசாயத் துறைக்கு பக்க பலமாக இலங்கை வங்கியின் விவசாய வங்கிச்சேவை அலகு

நாட்டின் விவசாயத் துறையை வலுப்படுத்தவென தனிச்சிறப்புடன் உருவாக்கப்பட்ட ஒரு தளமே இலங்கை வங்கியின் விவசாய வங்கிச் சேவை அலகு (BOC Agri Banking Unit) ஆகும்.

விவசாயிகள், விவசாயத் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் இத்துறை சார்ந்த பங்குதாரர்களுக்கு பின்வரும் விசேட நிதித் தீர்வுகளை வழங்குவதற்காக இவ்வலகு நிறுவப்பட்டுள்ளது:

  • நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தல்
  • விவசாய உற்பத்திகளுக்கான மதிப்புக் கூட்டல் (Value addition)
  • வலுவான விவசாய மதிப்புச் சங்கிலிகளை (Value chains) உருவாக்குதல்
  • சர்வதேச சந்தைகளை அணுகுதல்

முழுமையான விவசாயத் துறை சார்ந்த நிதித் தீர்வுகள்

விவசாயத் துறையின் மாறி வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இலங்கை வங்கி விரிவான விவசாயக் கடன் திட்டங்களையும் நிதித் தீர்வுகளையும் வழங்குகிறது. அந்த வகையில் எமது நிதித் தீர்வுகள் பின்வருவனவற்றை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன:

  • நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் (MSMEs)
  • இளம் தொழில்முயற்சியாளர்கள்
  • பெண் தொழில்முயற்சியாளர்கள்
  • முழுமையான மதிப்புச் சங்கிலி ஊடாக இயங்கும் விவசாயம்சார் வணிகங்கள்

நிலைபேறான வளர்ச்சியை உறுதிப்படுத்தல்

எமது தனித்துவமான விவசாய நிதித் தீர்வுகள் பின்வருவனவற்றிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன:

  • உற்பத்தித்திறன் மற்றும் செயற்பாட்டுத் திறனை அதிகரித்தல்
  • விவசாய மதிப்புச் சங்கிலிகளை வலுப்படுத்துதல்
  • புத்தாக்கம் மற்றும் நிலைபேறாண்மையை மேம்படுத்துதல்
  • விவசாயத் துறையின் நீண்டகால வளர்ச்சிக்கு உறுதுணை புரிதல்

எமது முக்கிய கடன் திட்டங்கள்

  • Re-MSME Plus கடன் திட்டம்
  • BOC Dairy Plus கடன் திட்டம் 
  • NCRCS - புதிய விரிவான கிராமியக் கடன் திட்டம்
  • KAPRUKA - தெங்கு அபிவிருத்திக் கடன் திட்டம்
  • சிறு மற்றும் நடுத்தர அளவிலான (SME) நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கான வட்டி மானியத்துடனான ஈட்டுக் கடன் திட்டம் (2025/26 பெரும்போகம்)
  • விவசாயம் மற்றும் தொழிற்துறையில் இளம் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் கடன் திட்டம்

BOC Agri Power விசேட நிலையான வைப்புத் திட்டம்

  • BOC Agri Power விசேட நிலையான வைப்புத் திட்டமானது முதலீட்டாளர்கள் கவர்ச்சிகரமான வருவாயை ஈட்டியவாறே நாட்டின் விவசாயத் துறையின் வளர்ச்சிக்கும் பங்களிப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. விவசாயிகளை வலுவூட்டுவதன் மூலமும் நாடு முழுவதும் உள்ள விவசாயம்சார் வணிகங்களை உறுதிப்படுத்துவதன் மூலமும் நிலையான கிராமிய வளர்ச்சிக்கு உறுதுணை புரியும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எம்மோடு இணைந்திருங்கள்

விவசாயக் கடன்கள், விவசாயம்சார் வணிகங்களுக்கான நிதி அல்லது முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு எமது இலங்கை வங்கி விவசாய வங்கிச் சேவை அலகைத் தொடர்புகொள்ளுங்கள் அல்லது அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளையை நாடுங்கள் அல்லது 1975 எனும் இலக்கத்தினூடாக எமது 24 மணிநேர அழைப்பு நிலையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இலங்கை வங்கி விவசாய வங்கிச் சேவை அலகு​

தொலைபேசி : 011 220 4555 / 011 220 4575

மின்னஞ்சல் : agri@boc.lk

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444